சிறிய தவறால் நடந்த பயங்கரம்! பலவீனமான இதயம் உள்ளவங்க இந்த வீடியோவை தப்பி தவறி கூட முழுசா பாத்தராதீங்க!

இந்திய சாலைகளில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு அதிவேகம் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. என்னதான் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் கூட, ஒரு சிலர் மாறுவதாக இல்லை. தொடர்ந்து அதிவேகத்தில்தான் வாகனங்களை இயக்கி கொண்டுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்டும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது. யூ-டர்ன் எடுக்க முயன்ற கார் ஒன்றின் மீது, அதிவேகத்தில் வந்த பைக் பயங்கரமாக மோதியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் மாருதி ஸ்விஃப்ட் டிசையர் (Maruti Swift Dzire) கார் ஒன்று, யூ-டர்ன் எடுக்க முயல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த காரின் டிரைவர் மிகவும் பொறுமையாகதான் இந்த விஷயத்தை கையாண்டார்.

Accident

முதலில் சாலையின் ஓரத்திற்கு அவர் வந்து விட்டார். பின்னர் அவருக்கு பின்னால் வந்த வாகனங்கள் செல்ல அவர் அனுமதித்தார். அதற்கு பிறகுதான் அவர் யூ-டர்ன் எடுக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு அருகில் வாகனங்கள் எதுவும் இல்லை. இந்த நம்பிக்கையில்தான், அவர் யூ-டர்ன் எடுக்கவே தொடங்கினார்.

ஆனால் அப்போது டிரைவர் சற்றும் எதிர்பாராத வகையில், தூரத்தில் இருந்து ஒரு டூவீலர் அதிவேகத்தில் வந்தது. மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரின் டிரைவர் யூ-டர்ன் எடுக்க முயல்வது நிச்சயமாக அந்த டூவீலர் ஓட்டிக்கு தெரிந்திருக்கும். எனவே டூவீலர் ஓட்டி நினைத்திருந்தால், வேகத்தை குறைத்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

Bike-Maruti Swift Dzire Accident

இடைவெளியில் புகுந்து சென்று விடலாம் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்து அதிவேகத்திலேயே டூவீலரை ஓட்டியது போல் தெரிகிறது. ஆனால் அவரால் இடைவெளியில் புகுந்து செல்ல முடியவில்லை. எதிர்பாராத விதமாக கார் மீது டூவீலர் பயங்கரமாக மோதியது. இதன் காரணமாக டூவீலர் ஓட்டியும், டூவீலரின் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண்ணும் கீழே விழுந்தனர்.

இதில், டூவீலரை ஓட்டி வந்த நபர் உடனடியாக எழுந்து விட்டார். ஆனால் டூவீலரின் பின்னால் அமர்ந்து வந்த பெண்ணால் உடனடியாக எழ முடியவில்லை. அவர் தூக்கி வீசப்பட்டதால், படுகாயம் ஏற்பட்டிருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் இருவருக்கும் எந்த அளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது? என்பது சரியாக தெரியவில்லை. இந்த சம்பவத்தால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த விபத்திற்கு டூவீலர் ஓட்டிதான் முழுக்க முழுக்க காரணம் என்பது எங்களுடைய கருத்து. சற்று குறுகலான இந்த சாலையில் அவர் அதிவேகத்தில் வந்துள்ளார். அவருக்கு முன்னால் இருந்த சில வாகனங்களை எல்லாம் ஓவர்டேக் செய்து வந்து, அவர் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

இந்திய சாலைகளில் வாகனங்களை ஏன் கவனமாகவும், மிதமான வேகத்திலும் ஓட்ட வேண்டும்? என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம். போதாக்குறைக்கு டூவீலரில் வந்த இருவருமே ஹெல்மெட் வேறு அணியவில்லை என்பதை போல் தெரிகிறது. ஆனால் நல்ல வேளையாக அவர்கள் இருவருக்கும் தலையில் அடிபடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலைகளில் வாகனங்களை மிதமான வேகத்தில் மிகவும் கவனமாக ஓட்டுங்கள். அதேபோல் டூவீலரில் ஏறி விட்டால், ஹெல்மெட் அணிந்து கொள்வதை எப்போதும் உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த விஷயங்களை சரியாக பின்பற்றினால், சாலை விபத்துக்களில் தேவையில்லாமல் காயங்கள் ஏற்படுவதையும், உயிரிழப்புகள் நிகழ்வதையும் தடுக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 21, 2024, 17:32 [IST]
English summary
Bike maruti swift dzire accident viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+