பைக்ல கூட இருந்த 2 பேர் அவங்களா! வைரல் வீடியோவால் அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

வைரல் வீடியோக்களின் (Viral Videos) மூலம் முகம் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இன்றைய இளம் தலைமுறையினர் ஒரு சிலர் செய்யும் அட்டகாசங்கள் எல்லை மீறி போய் கொண்டுள்ளது. குறிப்பாக பைக் ஸ்டண்ட்களை (Bike Stunts) செய்து கவனம் ஈர்க்க பலரும் முயற்சி செய்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், யூ-டியூபர் (YouTuber) டிடிஎஃப் வாசன் (TTF Vasan) பைக் சாகசங்களை செய்வதில் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார். ஆனால் விதிமுறைகளை மீறியது தொடர்பாக அவ்வப்போது அவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி கொள்கிறார். இந்தியாவில் பொது சாலைகளில் பைக் சாகசங்களை செய்வது சட்டத்திற்கு எதிரானது.

Bike Stunt Rider And 2 Girls Arrested

அந்த நபர்கள் அபராதம் (Fines) மற்றும் சிறை தண்டனை (Imprisonment) போன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் காவல் துறையினர் எவ்வளவுதான் விழிப்புணர்வு (Awareness) ஏற்படுத்தினாலும், ஒரு சிலர் அடங்குவதாக இல்லை. தொடர்ந்து பொது சாலைகளில் பைக் சாகசங்களை செய்து கொண்டேதான் உள்ளனர்.

இந்த வரிசையில் மும்பையில் பொது சாலையில் எல்லை மீறி பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், 2 இளம்பெண்களுடன் சிக்கியுள்ளார். இந்த பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் 2 இளம்பெண்கள் என 3 பேரையும் மும்பை காவல் துறையினர் உடனடியாக கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர்.

இந்த பைக் சாகச காட்சிகளை சமூக ஆர்வலர் ஒருவர் தனது சமூக வலை தள பக்கங்களில் பதிவிட்டதை தொடர்ந்து, அந்த வீடியோ வைரல் ஆனது. ஒரு இளம்பெண் பெட்ரோல் டேங்க் மீதும், மற்றொரு இளம்பெண் பின் இருக்கையின் மீதும் அமர்ந்திருக்க, அந்த இளைஞர் சாகசம் செய்வதை இந்த வீடியோவில் காண முடிகிறது.

இதுவே தவறு எனும் நிலையில், கூடுதலாக ஹெல்மெட் (Helmet) போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் அவர்கள் அணியவில்லை. இந்த பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு 24 வயது மட்டுமே ஆகிறது. இதற்கு முன்பாகவும் அவர் மீது சில வழக்குகள் இருப்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்காக காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், முகவரிகளை மாற்றி அவர் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி வந்துள்ளார். ஒரு வழியாக அவரே 'வான்டட்' ஆக வந்து, காவல் துறையினர் வசம் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் இந்தியாவின் பெரு நகரங்களில் எல்லாம் சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் கூட காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். எனவே காவல் துறையினர் இல்லை என்று நினைத்து கொண்டு விதிமுறை மீறல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். எப்படி இருந்தாலும் சிக்கி கொள்ள நேரிடும் என்பதை மனதில் வைத்து கொண்டு, பக்குவமாக செயல்படுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்று கொள்ள கூடியது அல்ல. இந்த செயல்களை செய்பவர்களுக்கு மட்டுமல்லாது, சாலையில் பயணம் செய்யும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் இந்த செயல்பாடுகள் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தவறு செய்யும் இளைஞர்கள் அதனை உணர வேண்டியது அவசியம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 3, 2023, 22:49 [IST]
English summary
Bike stunt rider 2 girls arrested viral video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+