நம்ம தமிழ் பொண்ணு!! சுஸுகி பைக் நிகழ்ச்சிக்கு இவங்க வருவாங்கனு எதிர்பார்க்கல!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் சார்பில் 'மட்சூரி' (Matsuri) என்ற பெயரில் ரைடிங் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் ஒவ்வொரு நகரமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற சுஸுகி மட்சூரி கடந்த டிசம்பர் 17ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை பெங்களூருவில் நடைபெற்றது.

டிச.17ஆம் தேதி மதியம் 12 மணியளவில் பெங்களூரின் மைசூர் சாலையில் அமைந்துள்ள ஜே கே கிராண்ட் அரேனாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரசிகர்களும், சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் வாடிக்கையாளர்களும் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த யூடியூப்பர் & பைக் ரைடர் தமிழ் செல்வியும் கலந்துக் கொண்டார்.

நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுடன் அவர் மேற்கொண்ட உரையாடலை தான் மேலே வீடியோவில் காண்கிறீர்கள். தான் ரைடர் இல்லை, ஸ்டண்ட்டர் என கூறும் தமிழ் செல்வி, பைக் ஸ்டண்ட்டில் தனக்கு வீலிங் சர்க்கஸ், ஸ்விட்ச் பேக் பிடித்தமான ஸ்டண்ட் ஸ்டைல்கள் என தெரிவித்துள்ளார். ஆனால், இவருக்கு ஸ்விட்ச் பேக் செய்ய தெரியாது.

suzuki matsuri bangalore

தமிழ் செல்விக்கு இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் முன் செய்வதற்கு ஏற்ற வகையில் எந்த ஸ்டண்ட் ஸ்டைலும் இல்லையாம். இருப்பினும், நிகழ்ச்சியில் ஸ்டண்ட் செய்த ரைடர்களுக்கு உறுதுணையாக தமிழ் செல்வி செயல்பட்டார். ஸ்டண்ட்டர் தமிழ் செல்வியிடம் இரு பைக்குகள் உள்ளன. ஒன்று, பழைய சுஸுகி சாமுராய், மற்றொன்று, ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரா 350 ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 20, 2023, 15:49 [IST]
English summary
Bike stunter tamil selvi at suzuki matsuri bangalore check full interview
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+