பைக் டாக்சி... சுற்றுலாப் பயணிகளை கவர டெல்லி அரசின் புதிய திட்டம்!
சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில், வாடகை பைக் திட்டத்தை அறிமுகம் செய்ய டெல்லி அரசு திட்டமிட்டிருக்கிறது.
தனியார் ஏஜென்சிகள் வாயிலாக இந்த திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. இது பெரும் வரவேற்பை பெறும் என்றும் கருதப்படுகிறது.

பைக் டாக்சி
வாடகை கார்கள் போன்றே இந்த வாடகை பைக்குகளுக்கும், வர்த்தக ரீதியில் இயக்குவதற்கான பிரத்யேக பதிவு எண்கள் போக்குவரத்து துறையால் வழங்கப்படும்.

ஏஜென்ட்
இந்த பைக்குகளை வாடகைக்கு விடுவதற்கான ஏஜென்சியை துவங்குபவர்கள் குறைந்தது 5 பைக்குகள் மற்றும் 150 சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலகம் வைத்திருக்க வேண்டும்.

சிறந்த திட்டம்
டெல்லி வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, டெல்லிவாழ் மக்களும் இந்த பைக் டாக்சியை சொந்தமாக வாடைக்கு எடுத்து ஓட்ட முடியும்.

எளிது...
இதுதொடர்பாக, டெல்லி சுற்றுலாத் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட டெல்லி நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் இந்த வாடகை பைக்குகளை சுற்றுலா பயணிகள் மற்றும் டெல்லி வாழ் மக்கள் எளிதாக பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விரைவில்...
இந்த மாத இறுதியில் இந்த திட்டம் தொடர்பான முடிவை டெல்லி போக்குவரத்து துறை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications