வேடிக்கைப் பார்த்துச்சென்று விபத்தில் சிக்கிய வாலிபர்! அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட ஆந்திரா போலீஸ்...
வேடிக்கைப் பார்த்தவாறு சாலையைக் கடக்க முயன்றவர் விபத்தில் சிக்கும் அதிர்ச்சி வீடியோவை ஆந்திர மாநில போலீஸார் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வாகனப் பெருக்கம், போக்குவரத்து விதிமீறல் என்று விபத்துக்களுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எதிர்பாராத நேரத்தில், நிகழும் இந்த விபத்துகளால் லட்சகணக்கானோர் தங்களது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு தவிக்கின்றனர்.

விபத்துகளுக்கான காரணத்தையும். சூழ்நிலையையும் முன்கூட்டியே கணிக்க முடியாதெனினும், விபத்துக்கள் நிகழ்வதற்கான காரணங்கள் மட்டும் பொதுவானதாகவே உள்ளன. அதில், பெரும்பாலான விபத்துக்கள் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாகவே நிகழ்கின்றன.

மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, அதிகளவில் சத்தமாக இசையை ஒலிக்கச் செய்து வாகனத்தை செலுத்துவது ஆகிய காரணங்களாலும் அதிகளவில் வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதைத்தொடர்ந்து, சிலர் அவர்களது அவசர தேவைக்காக பிறரை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களைத் தாறுமாறாக இயக்குகின்றனர். இதனால், சீறிப்பாய்ந்து செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றன. இதன் பலனாக பெரும் சேதங்களை சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரு சிலர் செய்யும் தவறால், பல அப்பாவிகள் பயங்கரமான பாதிப்புகளை எதிர் கொள்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

விபத்துக்கள் குறித்து அவ்வப்போது அரசும், போக்குவரத்துத்துறையும், போலீஸாரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்து வருகின்றனர். மேலும், விபத்துகளை தவிர்க்கும் வண்ணமாக போக்குவரத்து சட்டங்களை கட்டமைத்து உள்ளனர். ஆனால், இவற்றை சற்றும் மதிக்காத வாகன ஓட்டினகள் சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது விதியை மீறி வாகனத்தை செலுத்துகின்றனர்.
MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

அதேபோல சாலையை கடக்க முயலும் பாதசாரிகள் சற்றும் கவனம் செலுத்தாமல் ஜாலியாக கடக்கின்றனர். அதன் விபரிதபமாக எதிரே வரும் வாகனம் மோதி பயங்கர பின்விளைவுகளைச் சந்திக்கின்றனர். மேலும் தங்களது கை, கால்களை இழந்து வாழ்க்கையைத் தொலைத்து வாடுகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த 16ஆம் தேதி அன்று அதிவேகமாக வந்துக்கொண்டருந்த பைக் ஒன்று, சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. நெஞ்சை பதற வைக்கும் அந்த வீடியோ காட்சிகளை பேஸ்புக்கில் பதிவிட்ட அம்மாநில போலீஸார் சாலையைக் கடக்கும்போது எச்சரிக்கையாக செல்லவேண்டும் என்னும் நோக்கில் அதை வைரல் செய்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் யார் மீது தவறு என பொதுமக்களே கூறவேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். இதய துடிப்பை ஒரு கணம் நிறுத்த வைக்கும் அந்த விடியை காட்சியானது தற்போது வைரலாகி வருகிறது. என்னதான் அரசு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கினாலும், வாகன ஓட்டிகள் அதனை சற்றும் பொறுட்படுத்துவதில்லை. இதனாலேயே வாகன விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








