டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால், சமூக வலை தளங்களில் பிரபலமான இளைஞர் ஒருவர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருப்பதே இங்கு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம்.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

எனவே போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அரசு, காவல் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் சார்பில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருந்தபோதும் பெரிய முன்னேற்றம் இல்லை.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

இந்த சூழலில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது மும்பை போலீசார் தற்போது கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். 24 வயதான அட்னன் ஷேக் என்பவரை அவர்கள் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

மும்பையை சேர்ந்த அட்னன் ஷேக், டிக் டாக் ஆர்டிஸ்ட் ஆவார். மிகவும் பிரபலமான டிக் டாக் செயலிக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டதும், அதன் பின் உடனடியாக தடை விலக்கி கொள்ளப்பட்டதும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

இதனிடையே அட்னன் ஷேக் கைது செய்யப்பட்டதின் பின்னணியில் பல்வேறு சுவாரஸ்மான விஷயங்கள் நடைபெற்றுள்ளன. அட்னன் ஷேக் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளை பார்த்த பின்புதான் மும்பை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

அட்னன் ஷேக்கின் கைதுக்கு காரணமான வீடியோ கடந்த 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வீடியோ சமீபத்தில் சமூக வலை தளங்களில் வைரலாக பரவ தொடங்கியது. இதன் காரணமாக போலீசாரின் கவனத்திற்கும் அந்த வீடியோ வந்தது.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

வீடியோவை பார்த்த உடனேயே பந்த்ரா போக்குவரத்து போலீசார் உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து விட்டனர். ஆனால் அட்னன் ஷேக்தான் பொது சாலையில் பைக்கில் ஸ்டண்ட்களை செய்தார் என்பது அப்போது போலீசாருக்கு தெரியாது.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

இதன்பின் இந்த வழக்கு சப்-இன்ஸ்பெக்டர் பிம்சன் கெய்க்வாட் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற வழக்குகளில் அவருக்கு அனுபவம் அதிகம் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனிடையே ஸ்டண்ட் செய்த ரைடரை ட்ரேஸ் செய்யும் பணிகளில் பிம்சன் கெய்க்வாட் ஈடுபட்டார்.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

இதன்பின் ஒருவழியாக மும்பை தாராவி பகுதியில் வைத்து, அட்னன் ஷேக்கை போலீசார் கைது செய்தனர். அப்போது தன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கும் விஷயம் அட்னன் ஷேக்கிற்கு தெரியாது என கூறப்படுகிறது.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

அட்னன் ஷேக் ஸ்டண்ட் செய்த வீடியோ இளைஞர்கள் மத்தியில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அட்னன் ஷேக் மீது செக்ஸன் 279 (அலட்சியமாக வாகனம் ஓட்டுதல்) மற்றும் 336 (மற்றவர்களின் உயிர் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு இடர் உண்டாக்குதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

வீடியோவில் இருக்கும் நபர் அட்னன் ஷேக்தான் என்பதை உறுதி செய்யவும், அவர் பற்றிய தகவல்களை திரட்டவும் போலீசாருக்கு 3 மணி நேரம் தேவைப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

இந்த வீடியோ சரியாக எப்போது எடுக்கப்பட்டது? போன்ற விஷயங்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன்பின் அட்னன் ஷேக் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

அட்னன் ஷேக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது. அட்னன் ஷேக் பொது சாலையில் பைக்குகளில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ காட்சிகள் அடங்கிய தொகுப்பை நீங்கள் கீழே காணலாம்.

Neamatpur Technical இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. பொது சாலையில் ஹெல்மெட் போன்ற எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் அட்னன் ஷேக் ஸ்டண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

கேடிஎம் 200 ட்யூக் பைக்கில் அட்னன் ஷேக் ஸ்டண்ட் செய்வதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அவர் பெரும்பாலும் கேடிஎம் ட்யூக் சீரிஸ் பைக்குகளை ஓட்டுகிறார். பைக் ஸ்டண்ட் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இந்திய இளைஞர்கள் மத்தியில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

நிச்சயமாக அது தவறான விஷயம் கிடையாது. ஆனால் பொது சாலையில் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் இப்படி ஸ்டண்ட் செய்வதுதான் தவறான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு உண்டாகும்.

டிக் டாக் கலைஞர்கள் கவனத்திற்கு... பழைய வீடியோ திடீரென வைரல் ஆனதால் இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்...

உங்களுக்கு ஸ்டண்ட் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் இருந்தால், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் ஒதுக்குப்புறமான இடத்தை (பாதுகாப்பு உபகரணங்கள் அணிவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்) தேர்வு செய்யுங்கள். அதை விடுத்து விட்டு பொது சாலையை தேர்வு செய்வது நிச்சயம் சரியான முடிவாக இருக்காது.

Article Published On: Friday, May 24, 2019, 17:05 [IST]
English summary
Biker Arrested For Performing Stunts In Public Roads - Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+