ரூ.50,000 விலையில் ஹெல்மெட் அணிந்திருந்த பைக்கர் சாலை விபத்தில் மூளை செயலிழந்து பலி..!!
ரூ. 50,000 மதிப்புடைய ஹெல்மெட்டை அணிந்தும் மூளை செயலிழந்து சாலையில் உயிரழந்த பிரபல பைக்கர்.
சாலை விபத்தில் படுகாயமடைந்த பைக்கர், அவர் அணிருந்த ஹெல்மெட்டை கழட்ட முடியாததால் அதிக இரத்த கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்து பரிதாபமாக உயிரழந்தார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இயங்கும் ஜாகுவார் கார் ஷோரூமின் மேலாளராக இருப்பவர் ரோஹித் ஷேகாவத். 34 வயதான இவர் சிறந்த பைக்கரும் கூட.
Recommended Video


ரூ. 23 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நின்ஜா இசட்.எக்ஸ்- 10 ஆர் மாடல் பைக்கை ரோஹித் பயன்படுத்தி வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று ரோஹித் யாரும் இல்லாத சாலை ஒன்றில் படுவேகமாக பைக்கில் சென்றுள்ளார்.

998சிசி 4 சிலிண்டர் எஞ்சின் கொண்ட கவாஸாகி நின்ஜா இசட்.எக்ஸ்- 10 ஆர் பைக், அதிகப்பட்சமாக 197.3 பிஎச்பி பவர் மற்றும் 113.5 என்.எம் டார்க் திறனை வழங்கும் ஆற்றல் கொண்டது.
மேலும் துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 3 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடும் இந்த பைக், மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும்.

ஒரு சூப்பர் பைக்கிற்கான தாத்பரியங்களோடு வலம் வரும் இசட்.எக்ஸ்- 10 ஆர் பைக்கை ஓட்ட தனி அனுபவம் வேண்டும்.
ஒரு பைக்கரான ரோஹித்திற்கு இசட்.எக்ஸ்- 10 பைக்கை ஓட்டுவதற்கு ஏற்ற தேர்ந்த அனுபவங்கள் இருந்தன.

குறிப்பாக தனது கவாஸாகி நின்ஜா இசட்.எக்ஸ்- 10 ஆர் பைக்கை ஓட்டும் போது முற்றிலும் பாதுகாப்பான கையுறைகள், ஹெல்மெட் மற்றும் ஆடைகளை அணிந்து தான் அவர் செல்வார்.

சம்பவம் நடந்த அன்று, பாதுகாப்பு தரும் கியர்களுடன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.50,000 மதிப்புடைய புதிய ரக ஹெல்மெட் ஒன்றை ரோஹித் அணிருந்தருந்தார்.

அதிவேகமாக பைக்கில் செல்லும் போது, ரைடர்களுக்கு பிரச்சனை தராமலும் மேலும் வீசும் காற்றில் ஆடாமல் இருப்பதற்காக டபுள் டி-ரிங் ஸ்ட்ரேப் உட்பட பல விசேஷ அம்சங்கள் கொண்டதாக அந்த ஹெல்மெட் இருந்தது.

இரவு நேரத்தில் யாரும் இல்லாத திறந்தவெளி சாலையில், நின்ஜா இசட்.எக்ஸ்- 10 ஆர் பைக்கில் அதிவேகத்தில் ரோஹித் ஷேகாவத் சென்ற போது, திடீரென ஒரு பயணி சாலையின் குறுக்கே வந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத ரோஹித், சாலை பயணியை இடிக்காமல் கடந்து செல்ல, தனது பைக்கின் இயக்கத்தை மாற்ற முயன்றுள்ளார்.
ஆனால் பைக்கின் வேகத்தை மாற்ற முடியாமல் அந்த முயற்சி தோல்வி அடைய, ரோஹித்தின் பைக் நேராக சாலை பயணியை தாக்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்த விபத்தில் நின்ஜா இசட்.எக்ஸ்- 10 ஆர் பைக் சாலையில் இருந்து டிவைடரில் போய் மோதியது.
ரோஹித் மற்றும் அந்த சாலை பயணி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சாலை பயணி படுகாயமடைந்தார்.

பல பாதுகாப்பான அம்சங்களுடன் சென்ற ரோஹித் அந்த விபத்தை கடந்திருந்தாலும், அவரது தலை பலமாக பாதிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக அவரது தலை உடைந்து உள்ளே இரத்த கசிவு ஏற்பட்டது. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார். சுயநினைவை இழந்தார்.

இந்நிலையில் இந்த கோர விபத்தை பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள், ரோஹித் மயங்கி கிடப்பதை பார்த்து, அவரது ஹெல்மெட்டை கழட்டி முதலுதவி செய்ய முயன்றுள்ளனர்.

அது பல்வேறு விசேஷ அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட ஹெல்மெட், கூடியிருந்த பொதுமக்களில் யாரும் ரோஹித் அணிருந்திருந்த ஹெல்மெட்டை கழட்ட முடியவில்லை.

அவரையும், பைக்கில் அடிப்பட்டு படுகாயமடைந்திருந்த சாலை பயணியையும் பொதுமக்களில் சிலர் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சாலை பயணியின் பெயர் அகிலேஷ் என்று தெரியவந்தது. படுகாயமடைந்த அவருக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ரோஹித் ஷேகவாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஹெல்மெட்டை கழட்ட முடியாத காரணத்தினால், தலையின் உள்பகுதியில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மூலை செயலிழந்து மரணம் நிகழ்ந்ததாக கூறினர்.

இந்த வழக்கை விசாரித்த போலீசார் தலீப் சிங், கவாஸாகி நின்ஜா இசட்.எக்ஸ்- 10 ஆர் பைக்கில் ரோஹித் ஷேகவாத் அதிவேகமாக சென்றதை உறுதிப்படுத்தியுள்ளார்.

திடீரென சாலை பயணி ஒருவர் வழியில் குறுக்கே வர, அதனால் ரோஹித் பிரேக் எடுக்க முயன்று அதற்கான நேரமில்லாமல் இந்த விபத்து நடந்திருக்கலாம் என தலீப் சிங் கூறியுள்ளார்.

ஆனால் எதுவாக இருந்தாலும் ரூ.50,000 ஹெல்மெட்டை அணிந்தும் ஒரு பைக்கரின் உயிர் காப்பாற்ற முடியாமல் போனது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்பூரில் நடைபெற்ற இந்த விபத்து எப்படி நடந்தது, எதனால் நடந்தது என்பதற்கான கேள்விகளை சாலை பயணி அகிலேஷின் சிகிச்சை முடிந்த பிறகே நமக்கு தெரியவரும்.


Click it and Unblock the Notifications