பைக் ரேஸில் விபத்தை தவிர்க்க பைக்கில் பறந்த வீரர்..! அதிர்ச்சி வீடியோ..!
மோட்டா ஜிபி பைக் ரேஸில் மேட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஒருவர் கீழே விழுந்த போது பின்னால் வந்த வீரர்கள் சதுரியமாக செயல்பட்டு தன் பைக்கின் பறந்து சென்று பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.
மோட்டா ஜிபி பைக் ரேஸில் மேட்டார் சைக்கிள் பந்தய வீரர் ஒருவர் கீழே விழுந்த போது பின்னால் வந்த வீரர்கள் சதுரியமாக செயல்பட்டு தன் பைக்கின் பறந்து சென்று பெரும் விபத்தை தவிர்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நாம் ரோட்டில் வாகனத்தில் செல்லும் போது விபத்து நடந்து விடக்கூடாது என மிக கவனமாக செல்லும்வோம். எவ்வளவு கவனமாக சென்றாலும், சில சாலை விதிகளை மதிக்காதவர்களாக அவ்வப்போது விபத்துக்கள் நடக்கத்தான் செய்கிறது.

இவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பது மிக்கடினம். நாம் ரோட்டில் மெதுவாக செல்லும் போதே விபத்து நடக்கிறது என்றால் ரேஸ் ஓட்டுபவர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். அவர்கள் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழும் சிறு தவறுகூட அவர்களின் உயிரை பறித்து விடும்.

இதில் எப்பொழுது ரேஸ் ஓட்டுபவர்கள் கவனமாக இருப்பார்கள். அவர்கள் ரேஸ் பைக்கை ஓட்டும் போது அவர்கள் எப்படி ஓட்டுகிறார்கள் என்பது எவ்வளவு கவனமுடன் இருக்கிறார்களோ அதே அளவிற்கு மற்ற பைக் ஓட்டிகள் மீதும் இவர்களது கவனம் இருக்கும் அவர்கள் சிறு தவறு செய்தாலும் இவர்கள் வெற்றி வாய்ப்பை மட்டும் அல்ல உயிரையும் இழக்ககூடும். சில நேரங்களில் சில பெரும் விபத்து நடக்கும் வாய்ப்பை கூட ரைடரின் சாதுரியத்தால் தவிற்க்கப்படும். அவ்வாறான விபத்து சமீபத்தில் நடந்துள்ளது.

பிரஞ்ச் கிராண்ட் பிரிக்ஸ் என்ற மோட்டார் சைக்கிள் பந்தயம் சமீபத்தில் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் போது கடைசி லேப்பை முடிப்பதற்காக அனைத்து போட்டியாளர்களும் தங்கள் பைக்கில் சீறி பாய்ந்து கொண்டிருந்தனர்.

கடைசி லேப் முடிக்கும் முனைப்பில் எல்லோரும், ஒருவரை ஒருவர் முந்த முயற்சித்து கொண்டிருந்தனர். அப்பொழுது இனா பஸ்டினானி என்ற மோட்டர் சைக்கிள் பந்தய வீரர் போட்டியின் போது நிலை தடுமாறி டிராக்கிலேயே கீழே விழுந்து அருகில் இருந்து மணல் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார்.

அது அவரது பின்னால் வந்த செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஜாக்குப் கோன்பில் என்ற மோட்டார் சைக்கிள் வீரருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அவர் வந்த வேகத்திற்கு விபத்தில் சிக்கி கீழே விழுந்தவர் மீது மோதி இவரும் விபத்தில் சிக்கியிருக்க வேண்டிய சுழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் அந்த நேரத்தில் சாதூர்யமாக செயல்பட்ட ஜாக்குப் தன் பைக்கின் முன் வீலை தூக்கி வீலிங் செய்து தன் வீலால் லோசாக கீழே விழுந்த பைக்கில் ஏற்றி சினிமாவில் வருவது போல் பைக்கில் பறந்து சென்றார். இந்த காட்சி இந்த ரேஸை காண்பவர்களை ஒரு நிமிடம் உரையவைத்து விட்டது.
ஜோக்குப்பின் இந்த சாதூரியத்தால் அவரது உயிரும், கீழே விழுந்த வீரரின் உயிரும் தப்பியது. இவரும் விழுந்து விபத்தை ஏற்படுத்தியிருந்தால் இதில் இவர்கள் இருவரது உயிர் பிரிவதோடு, இவர்கள் பின்னால் விருபவர்களும் விபத்தில் சிக்கி குறைந்தபட்சம் காயமாவது ஏற்பட்டிருக்கும்.ஆனால் எல்லாம் ஜோக்குப்பின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் மோட்டார் சைக்கிள் ரேஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை சமூகவலைதளங்களில் வரைலாக பரவிவருகிறது. நெட்டிசன்கள் வழக்கம் போல் இதையும் வைத்து மீம் போட துவங்கிவிட்டனர். அவர்கள் இந்த விபத்தின் வீடியோ காட்சியை நீங்களும் கீழே காணுங்கள்.
இந்த வீடியோ காட்சியை கண்டாலே நமக்கு ரத்தம் எல்லாம் ஒரு நிமிடம் உறைந்து விடும் போல இருக்கிறதே இந்த சம்பவத்தை நிகழ்த்திய அந்த இரண்டு மோட்டார் சைக்கிள் வீரர்களுக்கும் ஒரு நிமிடம் உயிர் போய் உயிர் வந்திருக்கும் அல்லவா.

இந்த விபத்தில் இருந்து சாதுரியமாக தப்பிய ஜோக்குப், தொடர்ந்து இந்த ரேஸில் 6 இடத்தை பிடித்து ரேஸை முடித்தார். அவரது இந்த சாதுரிய செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications