வேகமாக எஃப் இசட் பைக்கில் வந்த இளைஞர், திடீரென குறுக்கே வந்த "கெளசிக்"! அடுத்து நடந்தது தான் ரொம்ப மோசம்!
கவனக்குறைவாக பைக் ஓட்டிய இளைஞரால் பெரும் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சாலையில் வாகனம் ஓட்டுவது என்பது எப்பொழுதும் ஆபத்து நிறைந்த சூழ்நிலைதான் எப்பொழுது வேண்டுமானாலும் விபத்து நிகழ வாய்ப்புள்ளது. அதனால் எப்பொழுதும் நாம் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் சிறு கவன சிதறல் கூட உயிரையே எடுக்கும் அளவிற்கு விபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரம் என்னதான் நீங்கள் சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்டினாலும் சக வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை மீறும் போது கூட விபத்து நிகழ வாய்ப்புள்ளது.

இப்படியாக சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஓட்டி ஒருவர் கவன குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அவர் பின்னால் வரும் வாகனங்களை கவனிக்காமல் ஒரு லேனிலிருந்து மற்றொரு லைனுக்கு மாறியதால் இரு பைக் ஓட்டிகள் மோதிக்கொண்டனர். வீடியோ முன்னே சென்று கொண்டிருந்த காரின் பின்பக்கம் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது ரெட்டிட் தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் கேமராவில் பதிவு செய்யப்பட்ட காருக்கு பின்பக்கம் டாடா அல்ட்ராஸ் மற்றும் மாருதி ஸ்விப்ட் ஆகிய கார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த காருக்கு இடையே சில பைக் ஓட்டிகளும் வந்து கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பிட்ட பைக் ஓட்டி சரியாக இடது பக்கம் உள்ள லேனில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் என்ன நினைத்தாரோ என தெரியவில்லை, உடனடியாக அங்கிருந்து லேன் மாற முடிவு செய்தார்.

இடது பக்க லேனிலிருந்து நடுபக்கர் வருவார் என யோசித்தால் அவர் உடனடியாக வலது பக்க லேனுக்கும் சென்றார். இந்நிலையில் வலது பக்க லேனில் ஏற்கனவே டாடா அல்ட்ரா காருக்கு பின்னாலிருந்து யமஹா எஃப் இசட் பைக்கில் ஒரு ரைடர் வந்து கொண்டிருந்தார், அவரும் வேகமாகவே வந்து கொண்டிருந்தார்.
அவரை கவனிக்காத இடது பக்க லேனிலிருந்து வலது பக்க லைனுக்கு சென்று கொண்டிருந்த பைக் ஓட்டி தொடர்ந்து வலது பக்க லேனிலேயே செல்ல முயற்சி செய்தார். இதனால் எதிர்பாராத விதமாக இரண்டு பைக் ஓட்டிகளும் பக்கவாட்டில் மோதிக்கொண்டனர். இதில் இருவரும் சாலையில் விழுந்து அடிபட்டனர். இந்த காட்சி முழுவதும் அந்த கேமராவில் பதிவாகி இருந்தது.

இதில் யமஹா எஃப் இசட் பைக்கில் வந்தவர் கீழே விழுந்ததில் அருகில் உள்ள டிவைடரில் சென்று மோதினார். இந்த விபத்தில் இவர்களுக்கு எப்படியான காயம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் விபத்து நிச்சயம் மோசமானதாகவே இருந்தது. டிவைடரில் மோதியவருக்கு அதிக காயம் ஏற்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் எந்த வாகனத்தை ஓட்டினாலும் சாலையில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களை சுற்றி இருக்கும் வாகன ஓட்டிகளையும் கண்காணித்து தான் நீங்கள் வாகனம் ஓட்ட வேண்டும். முக்கியமாக பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியில் உங்கள் பின்னால் வரும் வாகனங்கள் குறித்து அறிந்து கொண்ட பிறகுதான் நீங்கள் லைனை மாற்ற வேண்டும்.

குறிப்பிட்ட இந்த வீடியோவில் இருப்பது இப்படி இடது ஓரமாக உள்ள வாகன ஓட்டி கவனக்குறைவாக அதே நேரத்தில் வேகமாக வலது ஓரத்திற்கு வர முயற்சித்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. அதே நேரம் டாடா அல்ட்ராஸ் காருக்கு பின்னால் இருந்து வரும் பைக் ஓட்டியும் வேகமாக வந்து கொண்டிருந்தார்.
அவரும் தனது வேகத்தை கட்டுப்படுத்தி இருந்தால் இந்த விபத்தை தவிர்க்க முடியும். அவர் டாடா அல்ட்ராஸ் காரை முந்தும் நோக்கத்தில் வேகமாக வந்து இந்த விபத்தில் சிக்கிவிட்டார். ஆனால் இதில் இந்த விபத்தின் முக்கியமான காரணமாக லேன் மாறிய பைக் ஒட்டி தான் இருக்கிறார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது லேன் மாற வேண்டுமென்றால் முதலில் சக வாகன ஓட்டிகளுக்கு நீங்கள் லேன் மாறும் விஷயம் குறித்து சிக்னல் கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் வாகனத்தை வேகத்தை மெதுவாக்கி சுற்றி வரும் வாகனங்களை பார்த்து எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்த பின்பு தான் லேன் மாற வேண்டும்.
அதேபோல வலது ஓரம் இருக்கும் லெனிலிருந்து இடது ஓரம் இருக்கும் லேனுக்கு மாற வேண்டும் என்றால் முதலில் நடுவில் இருக்கும் லேனுக்கு மாறிவிட்டு அதன் பின்பு தான் இடது பக்கம் இருக்கும் லேனிற்க்கு மாற வேண்டும். நேரடியாக நடுவுல பக்கம் உள்ள லேனிலிருந்து குறுக்காக பைக்கை ஓட்டி சென்றால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications
