ஜெஸிக்கா பார்ட்டன் காரை பார்ட் பார்ட்டாக கழற்றிய திருடர்கள்!
பிரபல அமெரிக்க மாடல் அழகியான ஜெஸிக்கா பார்ட்டன் ஒரு ரேஸ் பிரியர். மேலும், தனது டொயோட்டா சூப்ரா காரை ஒரு லட்சம் டாலர் செலவில் ரேஸ் காருக்குரிய அம்சங்களுடன் மாற்றினார். மேலும், அந்த கார் 1,200 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக டியூனிங் செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஒரு லட்சம் டாலர் வரை அவர் செலவிட்டு செய்துள்ளார்.
இந்தநிலையில், அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த காரை சமீபத்தில் மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்து காரை வலை வீசி தேடினர். அப்போது, ஜெஸிக்காவின் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆள் அரவமில்லாத பகுதியில் வைத்து அந்த காரை பார்ட் பார்ட்டாக திருடர்கள் பிரித்துள்ளனர்.
அந்த காரின் எஞ்சின் மற்றும் விலையுயர்ந்த பாகங்களை திருடர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். பாடி பேனல்கள் மட்டும் குப்பை கூளம் போல் அங்கு கிடந்தன. கார் திருடுபோவதற்கு சில நாட்களுக்கு முன் தனது 1000 எச்பி ஆற்றல் கொண்ட அந்த காரை டெக்சாஸ் வேர்ல்டு ஸ்பீடுவேயில் ஓட்டி தனது தாகத்தை தீர்த்துக் கொண்டார். பார்த்து பார்த்து அந்த காரை கஸ்டமைஸ் செய்த நிலையில், திருடு போனதால் ரொம்ப அப்செட்டாகி உள்ளார் ஜெஸிக்கா.

திருடு போன ஜெஸிக்கா கார்

திருடு போன ஜெஸிக்கா கார்

திருடு போன ஜெஸிக்கா கார்

திருடு போன ஜெஸிக்கா கார்

திருடு போன ஜெஸிக்கா கார்

டெக்சாஸ் வேர்ல்டு ஸ்பீடுவே
டெக்சாஸ் ஸ்பீடுவேயில்தான் தனது காரை கடைசியாக பறக்க விட்டுள்ளார் ஜெஸிக்கா. டெக்சாஸ் ஸ்பீடுவேயின் வரைபடம்.

டெக்சாஸ் ஸ்பீடுவேயில்
டெக்சாஸ் ஸ்பீடுவேயில் ஓட்டும் ஜெஸிக்கா. வீடியோவில் இவர் கியரை போடும்போது கைகளை ஆட்டுவதை பார்த்தால் நமது இதயம் ஆடிவிடுகிறது.

திருடு போன ஜெஸிக்கா கார்
பார்ட் பார்ட்டாக கழற்றப்பட்டு கிடக்கும் ஜெஸிக்காகவின் டொயோட்டா சூப்ரா கார்.


Click it and Unblock the Notifications








