இந்திய நிறுவனத்தைப் புகழ்ந்து தள்ளிய பில்கேட்ஸ்! ஆட்டோ ஓட்டும் வீடியோ வைரல்!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பவர் பில்கேட்ஸ், இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தவர். இவர் சமீபத்தில் இந்தியாவிற்குச் சுற்றிப் பார்க்க வந்துள்ளது. இந்தியா உள்ள பல இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் தயாரித்த மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் 3 வீலரை ஓட்டி பார்த்துள்ளார். இந்த வீடியோ பில்கேட்ஸ் நோட்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் சிஇஓ ஆனந்த் மஹிந்திராவும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதில் பில்கேட்ஸ் மஹிந்திரா நிறுவனத்தைப் பாராட்டித் தள்ளியுள்ளார். அவர் கூறும் போது : " நாம் செய்யும் விவசாயத்திலிருந்து போக்குவரத்து வரை மாசு இல்லாத வகையில் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறோம். இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வம் ஆச்சரியப்பட வைக்கிறது.
நாம் ஒரு எலெக்ட்ரிக் ரிக்ஷாவை ஓட்டி பார்த்தேன். இது முழு சார்ஜில் 131 கி.மீ வரை இயங்கும் திறன் கொண்டது. 4 பேர் இதில் பயணிக்க முடியும். மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் போக்குவரத்துத் துறையில் கார்பன் நியூட்டிராலிட்டிக்கு முயற்சிப்பது பெரும் ஊக்கமாக இருக்கிறது. இந்த ட்ரியோ ரிக்ஷாவை ஓட்டி பார்த்தது சந்தோஷமாக இருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த போது "நீங்கள் ட்ரியோவை ஓட்டியது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. அடுத்த முறை நீங்கள் இந்தியா வரும் போது நீங்கள், நான் மற்றும் சச்சின் டெண்டுல்கர் மூவரும் சேர்ந்து இவி 3 வீலர் டிராக் ரேஸ் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்திரா ட்ரியோ அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் 3 வீலராகும். இதை இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்ல சர்வதேச மார்கெட்டிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த 3 வீலர் மார்கெட்டில் ரூ2.92 லட்சம் முதல் ரூ3.02 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

இந்த எலெக்டரிக் 3 வீலரில் 8 கிலோ வாட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 42 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது முழு சார்ஜில் 131 கி.மீ வரை ரேஞ்சை வழங்குகிறது. இந்த 3 வீலரை 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட
முடியும். இது மிகவும் குறைந்த செலவில் இயங்கும் ஒரு 3 வீலராகும்.
இதில் ஒரு கிலோ மீட்டர் பயணிக்க வெறும் 50 பைசா மட்டுமே செலவாகும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த 3 வீலர் தற்போது இந்தியாவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. மெல்ல மெல்ல இதன் விற்பனையும் அதிகமாகி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications