ஹீரோ கணக்கா இருக்காரு இவரு எந்த படத்துலையும் நடிக்கலையா.. இப்பவே இந்த மாதிரியான காரை வாங்கியிருக்காரா!

இந்தி பட ஹீரோ மாதிரி இருக்கும் இவர் இதுவரை எந்தவொரு படத்திலும் நடிச்சதில்லை. இருப்பினும் கோடியில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர காரை அவர் வாங்கி இருக்கின்றார். ரூ. 7.10 கோடி மதிப்புள்ள ஆடம்பர காரையே அவர் வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது பென்ட்லீ பென்டேகா இடபிள்யூ அசுரே (Bentley Bentayga EWB Azure) சொகுசு கார் மாடல் ஆகும்.

எந்தவொரு படத்திலும் நடிக்காமலே இந்த காரை அவர் வாங்கிட்டாரா என நீங்கள் கேட்கலாம். இவருக்கு படத்தில் நடித்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எந்தவொரு அவசியமும் இல்லை. ஏனெனில் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் இவரும் ஒருவர் ஆவார். அடார் பூனவல்லா, இதுவே அவருடைய பெயர் ஆகும்.

Adar poonawalla purchases bentley bentayga ewb azure

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India) நிறுவனத்தின் சிஇஓ இவரே ஆவார். இதுமட்டுமல்ல பூனவல்லா ஃபின்கார்ப் (Poonawalla Fincorp) எனும் நிதி நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகின்றார். பாலிவுட்-இல் சில முன்னணி படங்களை இவர் தயாரித்து இருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.

இத்தகைய பெரும் செல்வந்தரே அடார் பூனவல்லா ஆவார். இந்த நிலையிலேயே தன்னுடைய செல்வாக்கை வெளியுலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அதீத விலைக் கொண்ட காரை அவர் வாங்கி இருக்கின்றார். பென்ட்லீ பென்டேகா இடபிள்யூ அசுரே, அட்வான்ஸ்டு மற்றும் மிகவும் ஆடம்பர வசதிகளைத் தாங்கிய ஓர் கார் மாடல் ஆகும்.

குறிப்பாக, இதன் இருக்கைகள் மிகவும் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும். இதுமட்டுமல்ல கரடு-முரடான பாதையில் பயணித்தாலும் பெரிய அளவில் குலுங்கல்கள் இல்லாமல் இதில் பயணித்திக் கொள்ள முடியும். அந்த அளவிற்கு தரமான சஸ்பென்ஷன் செட்-அப்பே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுமட்டுமல்ல ஏற்கனவே கூறியதை போல நவீன கால அம்சங்கள் பல இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. பிஎம்2.5 ஏர் ப்யூரிஃபையர், பின் பக்க இருக்கையாளர்களுக்கான பொழுதுபோக்கு அம்சசங்கள், 20 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் என இன்னும் ஏராளமான அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும்.

Bentley bentayga ewb azure

இதனால்தான் உலக பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக பென்ட்லீ பென்டேகா இடபிள்யூ அசுரே உள்ளது. இந்த காரில் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 542 எச்பி மற்றும் 770 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது.

8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாகவே காரில் பொருத்தப்பட்டு இருக்கும் நான்கு வீல்களுக்கும் இயக்க ஆற்றல் கடத்தப்படுகின்றது. இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 4.5 செகண்டுகளே போதுமானதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடார் பூனவல்லாவிடம் இந்த ஒரு விலை உயர்ந்த கார் மாடல் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றது என நினைத்துக் கொள்ள வேண்டாம். இதுபோன்று இன்னும் பல பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை அவர் தன் வசம் வைத்திருக்கின்றார். இருப்பினும் ஆடம்பர கார்கள் மீதுள்ள அதீத காதல் காரணமாக புதிதாக பென்ட்லீ பென்டேகா இடபிள்யூ அசுரேவையும் வாங்கி இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 4, 2025, 18:39 [IST]
English summary
Billionaire adar poonawalla purchases luxury bentley bentayga ewb azure worth rs 7 10 crore
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+