டாடா காரைதான் ரொம்ப பிடிக்கும் முன்னணி நடிகையின் கணவரின் பேச்சால் ஆடி போன வாகன உலகம்.. இல்லாத காரே இல்ல..
பாலிவுட் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் மாதுரி திக்ஸித்-ம் ஒருவர் ஆவார். 1980 மற்றும் 90-களில் பலரின் கனவு கன்னியாக வலம் வந்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் 72-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவருடைய கணவர் ஸ்ரீராம் மாதவ் நீனே. இவர் ஓர் இருதய மருத்துவர் ஆவார். இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார மருத்துவராக இவர் திகழ்கின்றார். அதுமட்டுமல்ல மிகப் பெரிய கார் காதலராகவும் அவர் வலம் வந்துக் கொண்டு இருக்கின்றார்.
இவரிடத்தில் இல்லாத சூப்பர் கார்களே இருக்க முடியாது என சொல்லலாம். அந்த அளவிற்கு மிகப் பெரிய கார் கலெக்சனை அவர் தன் வசம் வைத்திருக்கின்றார். குறிப்பாக, ஃபெர்ராரி 296 ஜிடிஎஸ் (Ferrari 296 GTS), போர்ஷே 911 ஜிடி3 (Porsche 911 GT3), மெக்லாரன் 750எஸ் (McLaren 750S) மற்றும் போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S) உள்ளிட்ட கார் மாடல்கள் எல்லாம் அவரிடத்தில் இருக்கின்றன.

இத்தகைய அரிய வகை கார்களை வைத்திருக்கும் இந்த நபர், தனக்கு மிகவும் பிடித்தது டாடா (Tata) காருதான் என கூறியிருக்கின்றார். அவர் குறிப்பிட்டு கூறியிருப்பது டாடா-வின் மிகவும் எளிமையான கார் மாடலான நெக்ஸான்.இவி (Nexon.EV)-யை ஆகும். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
இதன் விலையும் மிக அதிகம் என்று சொல்லிவிட முடியாது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மாதுரி திக்ஸித் மற்றும் அவருடைய கணவரின் வருமானம் மற்றும் சொத்திற்கு இந்த காரின் விலை ஓர் பெரிய பொருட்டே அல்ல என்று சொல்லலாம். அந்த குறைவான விலையிலேயே அது விற்கப்படுகின்றது.
மாதுரியின் கணவர் வைத்திருப்பது டாடா நெக்ஸான்.இவி டார்க் எடிசன் ஆகும். இதன் விலை ரூ. 17.5 லட்சம் மட்டுமே ஆகும். இதையே பலதரப்பட்ட ஆடம்பர கார்கள் கை வசம் இருக்கின்ற போதிலும் தனக்கு மிகவும் பிடித்த வாகனம் என அவர் தெரிவித்து இருக்கின்றார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
குறிப்பாக, டாடா நிறுவனத்திற்கு இது புகழ் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது. இந்த கார் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த வாகனம் இது என்றும், பெரிய பெரிய விலை உயர்ந்த கார்களில் கிடைக்கும் சொகுசான அனுபவம் தனக்கு இந்த காரிலேயே கிடைப்பதாக அவர் கூறி உள்ளார்.
டாடாவின் இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 437 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக அந்த 40.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மாதுரி திக்ஸித்-இன் கணவர் வைத்திருக்கும் மற்ற ஆடம்பர கார்களைக் காட்டிலும் இது குறைவான ஆற்றலையே வெளியேற்றும்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர் வைத்திருக்கும் டாடா நெக்ஸான்.இவி டார்க் எடிசன் அதிகபட்சமாக 141 பிஎச்பி மற்றும் 250என்எம் டார்க் ஆற்றலை மட்டுமே உருவாக்கும். இத்தகைய காரையே தனக்கு மிகவும் பிடிக்கும் என சமீபத்தில் அவர் கூறியிருக்கின்றார். பணக்கார இருதய மருத்துவரின் இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாதுரி திக்ஸித் கணவரின் இந்த எளிமையை பார்த்து பலரும் வியந்து போயிருக்கின்றனர். குறிப்பாக, மாதுரி மாதிரியான பெரும் பணக்கார நடிகைக்கு இப்படி ஒரு எளிமையான கணவரா என பலரை அவர் நினைக்கச் செய்துவிட்டார். எனவே இந்த வீடியோ சற்றே வேகமாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Click it and Unblock the Notifications








