காரின் விலை பிரச்சனையே இல்ல... 10 லட்ச ரூபாய் காருக்காக காத்திருக்கும் இந்தியாவின் பெரும் தொழிலதிபர்!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி (Windsor EV)-ஐ அறிமுகம் செய்துள்ளது. சீனாவை சேர்ந்த குழுமத்தின் கீழ் செயல்படும் பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) குழுமத்துடன் இணைந்ததற்கு பிறகு இந்திய மார்க்கெட்டில் இவ்வாறான எலக்ட்ரிக் கார்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. எந்த அளவிற்கு என்றால், ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தின் வாரிசான பார்த் ஜிண்டால் அவர்கள் தனது ஆடி எலக்ட்ரிக் காருக்கு பதிலாக எம்ஜியின் புதிய விலை குறைவான விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை போக்குவரத்துக்கு பயன்படுத்த உள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் இருந்து உலகளவில் வணிகம் செய்துவரும் முன்னணி குழுமங்களுள் ஒன்று ஜே.எஸ்.டபிள்யூ ஆகும். ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கிரிக்கெட் அணிக்கு ஜே.எஸ்.டபிள்யூ தான் ஸ்பான்சர் செய்கிறது எனும்போது, இந்த குழுமத்தின் செல்வாக்கை அறியலாம். இந்த குழுமத்தை நிறுவிய ஜிண்டாலின் குடும்பத்தில் இருந்து வாரிசுகள் அடுத்தடுத்ததாக தொழிலதிபர்களாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.

parth jindal ditching audi e-tron

அந்த வகையில், ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தில் இருந்து தற்சமயம் வேகமாக வளர்ந்துவரும் தொழிலதிபராக இருப்பவர் பார்த் ஜிண்டால் ஆவார். ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றுள், ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பார்த் ஜிண்டால் பணியாற்றி வருகிறார். அத்துடன், எம்ஜி மோட்டார் உடனான கூட்டணி குறித்த விஷயங்களையும் பார்த் ஜிண்டால் கவனித்து வருகிறார்.

இந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் அறிமுக நிகழ்ச்சியில் பார்த் ஜிண்டால் கலந்துக் கொண்டு தலைமை தாங்கினார். காரை அறிமுகம் செய்த பின் பேசிய பார்த் ஜிண்டால், தனது ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் லக்சரி செடான் காருக்கு பதிலாக பிராண்டின் புதிய மாடலான விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை தான் பயன்படுத்த உள்ளதாக ஓப்பனாக அறிவித்துள்ளார்.

parth jindal ditching audi e-tron

மேலும் பேசிய அவர், எம்ஜி ஷோரூமில் இருந்து முடிந்தவரையில் விரைவாக விண்ட்சர் இவி காரை டெலிவிரி பெற்றுவிடுவேன் என தெரிவித்துள்ளார். 32 வயதான தொழிலதிபர் பார்த் ஜிண்டால் தற்சமயம் பயன்படுத்தும் ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் லக்சரி செடான் காரின் விலை ஏறக்குறைய ரூ.2 கோடியாக உள்ளது. ஒருமுறை மும்பையில் இந்த ஆடி எலக்ட்ரிக் காரில் பார்த் ஜிண்டால் காட்சி தந்து இருந்தார். அப்போது காரை அவர்தான் ஓட்டி கொண்டிருந்தார்.

பார்த் ஜிண்டாலிடம் டேடோனா கிரே பேர்ல் நிறத்தில் இந்த எலக்ட்ரிக் செடான் கார் உள்ளது. இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் பவர்ஃபுல்லான எலக்ட்ரிக் செடான் காராக ஆடி இ-ட்ரான் ஜிடி விளங்குகிறது. போர்ஷே டைகன் எலக்ட்ரிக் செடான் காரை உருவாக்க பயன்படுத்தப்படும் அதே பிளாட்ஃபாரத்தை கொண்டுதான் ஆடி இ-ட்ரான் ஜிடி காரும் உருவாக்கப்படுகிறது.

parth jindal ditching audi e-tron

எஸ் மற்றும் ஆர்.எஸ் என 2 விதமான வேரியண்ட்களில் இந்தியாவில் இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் விலைமிக்க ஆர்.எஸ் வேரியண்ட்டில் இந்த எலக்ட்ரிக் காரை பார்த் ஜிண்டால் கொண்டுள்ளார். இ-ட்ரான் ஜிடி ஆர்.எஸ் வேரியண்ட்டை கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் உள்ளிட்டோரும் வைத்துள்ளனர்.

இந்த எலக்ட்ரிக் செடான் காரில் முன் மற்றும் பின்பக்கத்தில் என 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இந்த இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் சேர்ந்து அதிகப்பட்சமாக 637 பிஎச்பி மற்றும் 830 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளன. இ-ட்ரான் ஜிடி ஆர்.எஸ் எலக்ட்ரிக் காரில் 84kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 472கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய விலையுயர்ந்த & பவர்ஃபுல்லான ஆடி காரை விட்டு, ரூ.9.99 லட்சத்தில் விலை கொண்ட எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை பயன்படுத்த போவதாக பகிரங்கமாக பொது வெளியில் ஒரு தொழிலதிபர் தெரிவிக்கிறார் என்றால், வணிகத்தில் அவர் எந்த அளவிற்கு ஈடுப்பாட்டுடன் உள்ளார் என்பதை அறிய முடிகிறது. மேலும், எம்ஜி விண்ட்சர் இவி கார் மீதான அவரது நம்பிக்கையையும் இது காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2024, 11:57 [IST]
English summary
Billionaire parth jindal ditching audi electric car for mg windsor ev
மேலும்... #MG Windsor EV #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X