இவருக்கு சிறந்த கார் சேகரிப்பாளர் 2023 விருது கொடுத்ததுல தப்பே இல்ல.. பெருத்த பணக்காரரு என்பத நிரூபிச்சுட்டாரு

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் யோஹன் பூனவல்லா-வும் ஒருவர் ஆவார். இவரும் இந்தியாவின் மற்ற பெரும் செல்வந்தர்களைப் போல மிகப் பெரிய கார் காதலர் உள்ளார். ஆனால், இவரிடத்தில் இருக்கும் வாகனங்கள் முற்றிலும் தனித்துவமானவை ஆகும். மிக தனித்துவமான, அதேவேளையில், அல்ட்ரா லக்சூரி அம்சங்கள் நிறைந்த கார் மாடல்களே இவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய கார் சேமிப்பைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அவருக்கு கத்தாரில் நடைபெற்ற ஜெனிவா சர்வதேச மோட்டார் ஷோ-வில் 'சிறந்த கார் சேகரிப்பாளர் 2023' எனும் விருது வழங்கப்பட்டது.

இத்தகைய ஓர் கார் சேகரிப்பாளரே தற்போது இந்தியாவில் விற்கப்படும் மிக மிக விலை சொகுசு கார் மாடல் ஒன்றை வாங்கி இருக்கின்றார். அவர், மெர்சிடிஸ் மேபேக் எஸ்680 (Mercedes Maybach S680) ஆடம்பர காரையே வாங்கி இருக்கின்றார். இது ஓர் லக்சூரி அம்சங்கள் நிறைந்த செடான் வகை கார் மாடல் ஆகும்.

Yohan poonawalla adds new maybach s680 sedan

ஏற்கனவே யோஹன் பூனவல்லாவிடம் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), பென்ட்லீ (Bentleys), ஃபெர்ராரி (Ferrari) மற்றும் லேண்ட் ரோவர் (Land Rover) உள்ளிட்ட நிறுவனங்களின் விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே புதிதாக மெர்சிடிஸ் மேபேக் எஸ்680-யை யோஹன் பூனவல்லா இணைந்திருக்கின்றார்.

இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 4 கோடிக்கும் அதிகமாகும். இத்தகைய விலையுயர்ந்த காரையே தான் வாங்கி இருப்பதாக அவர் தன்னுடைய இன்ஸ்டா பதிவின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து, தான் வாங்கியிருக்கும் காரின் சிறப்பம்சங்கள் சிலவற்றின் பற்றிய விபரங்களையும் அவர் அந்த பதிவில் கூறியிருக்கின்றார்.

தான் வாங்கி இருக்கும் மெர்சிடிஸ் மேபேக் எஸ்680 சொகுசு காரில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், பிரீமியம் லெதரால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை மற்றும் மர பேனல்களால் அலங்கரிக்கப்பட்ட உட்பக்கத்தைக் கொண்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தி இருக்கின்றார். இதுபோன்ற எண்ணற்ற ஆடம்பர அம்சங்களை இந்த கார் தாங்கி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதனால்தான், அதன் ஒரே ஒரு யூனிட்டின் விலையே ரூ. 4 கோடியாக உள்ளது. மிக முக்கியமாக 5.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த காரில் எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் இருக்கைகளே வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், இதன் இருக்கைகளை நன்றாக சாய்த்துக் கொள்ள முடியும். அதுதவிர அதில் மசாஜ் செய்யும் வசதியும் இடம் பெற்றிருக்கும்.

கூடுதல் சிறப்பாக சூடு மற்றும் குளிர்ச்சியாக்கிக் கொள்ளும் வசதியும் இந்த இருக்கையில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்து. இதுமட்டுமில்லைங்க, பின் இருக்கையாளர்களுக்கு என பிரத்யேக பொழுதுபோக்கு திரையும் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் டோர்களை இழுத்துதான் மூட வேண்டும் என்று இல்லை.

அதை ஒரே பொத்தானின் வாயிலாகவே மூட செய்துவிட முடியும். இதற்கான கன்ட்ரோல்கள் டிரைவர் மற்றும் பயணிகளிடம் வழங்கப்பட்டு இருக்கும். இத்தகைய தனித்துவமான சிறப்புகளைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினால்தான் இந்த கார் பெரும் பணக்காரர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாக உள்ளது. மேலும், இந்தியாவில் உச்ச நட்சத்திரங்களின் பலரின் விருப்பமான காராகவும் இது மாறி இருக்கின்றது.

அந்தவகையில், முகேஷ் அம்பானி, கங்கனா ரணாவத் உள்ளிட்ட இன்னும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 6.0 லிட்டர் வி12 டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 612 பிஎஸ் மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கும். இதுதவிர, அனைத்து வீல்களுக்கும் இயக்க திறனை கடத்துவதற்கான மெர்சிடிஸ் 4 மேட்டிக் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: யோஹன் பூனவல்லாவிடம் மிகப் பெரிய விண்டேஜ் கார் கலெக்சனே உள்ளது. இதற்காகவே அவருக்கு மிக சிறந்த கார் சேகரிப்பாளர் 2023 விருது வழங்கப்பட்டது. 1933 ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் II (Rolls-Royce Phantom II Sir Malcolm Campbell Sports Saloon by Barker & Co) மற்றும் 1964 லிங்கன் கான்டினென்டர் 4-டோர் கன்வெர்டபிள் (Lincoln Continental 4-Door Convertible) போன்ற கார் மாடலும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 5:00 [IST]
English summary
Billionaire yohan poonawalla adds a rs 4 crore maybach s680 sedan to his luxury car collection
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+