அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்க ரெடியாகிட்டாங்க! 2030க்குள் இதை செஞ்ச தீருவோம்னு முடிவெடித்த மத்திய அரசு!

இந்தியா வரும் 2030ம் ஆண்டிற்கும் பயோ எனர்ஜி தேவையில் 50 சதவீதத்தை தானே உற்பத்தி செய்யும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு இந்தியாவிற்கு உதவப்போகிறது. ஏன் இதை இந்தியா செய்ய நினைக்கிறது? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தற்போது காற்று மாசுவை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவிற்கான எரிபொருள் தேவைக்காக இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை நம்பியே இருக்கின்றன. இந்நிலையில் இந்தியா இந்த கச்சா எண்ணெய்காக வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது.

Bioenergy Production India

இந்த கச்சா எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் எரிபொருளுக்கு மாற்றாக பயோ எனர்ஜியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த பயோ எனர்ஜி என்பது இந்தியாவில் உள்ள விவசாய கழிவு பொருட்களிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் ஆகும். கச்சா எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் எரிபொருளுக்கு மாற்றாக இதை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களில் பெட்ரோல் தேவையை குறைத்து மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க அரசு வாகன தயாரிப்பு நிறுவனங்களை கேட்டு கொண்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பெட்ரோலில் எத்தனால் கலப்பதையும் அரசு செய்து வருகிறது. இதன் மூலம் பெட்ரோலுக்கான தேவைக்கு அரசு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய தேவை இருப்பதை குறைக்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் போதும் இந்தியா வரும் 2030ம் ஆண்டிற்குள் 50 சதவீத பயோ எரிபொருள் தேவையை பூர்த்தி செய்துவிடும் என தெரிவித்துள்ளது.

Bioenergy Production India

இதற்கிடையில் தற்போது இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே தாங்கள் உற்பத்தி செய்யும் வாகனங்களில் இ20 ரக பெட்ரோலை பயன்படுத்த ஏதுவாக இன்ஜின்களை மாற்றியுள்ளன. இதற்கிடையி்ல எலெக்ட்ரிக் வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்கள், சிஎன்ஜி வாகனங்களின் தயாரிப்பும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த வாகனங்களில் பயோ எரிபொருளை பயன்படுத்த தேவையான எரிபொருளில் 50 சதவீதத்தை 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவே தயாரித்துவிடும் என அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இந்தியா ஆண்டிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதியில் மட்டும் ரூ22 லட்சம் கோடியை செலவு செய்து வருவதாக கூறியுள்ளார். எத்தனால், ஃபிளக்ஸ் இன்ஜின், மெத்தானால், பயோடீசல், பயோ எல்என்ஜி மற்றும் சிஎன்ஜி ஆகிய எரிபொருட்களை இந்தியாவே தயாரித்தால் பெட்ரோல் தேவை குறைந்து வெளிநாட்டிற்காக செலவு செய்யும் பணம் குறையும், இதனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்புகம் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

Bioenergy Production India

இதுமட்டுமல்லாமல் ஆட்டோமொபைல் துறையில் ஏற்றுமதியை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டு வருவதாகவும் ஏற்கனவே இந்தியா ஆண்டிற்கு ரூ3 லட்சம் கோடி அளவிலான வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும் இதன் மூலம் 4.5 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் 50 சதவீத தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது தங்கள் வாகனங்களை மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களாக மாற்றியுள்ள நிலையில் விரைவில் இந்தியாவில் பயோ எரிபொருள் தயாரிப்பை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் நமக்கான தேவையில் 50 சதவீத்தை தயாரித்தாலே மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 19, 2025, 20:10 [IST]
English summary
Bioenergy production india can meet 50 fossil fuel needs by 2030
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X