காஸ்ட்லியான ஆடி காரில் வந்தது அவங்களா! தளபதி விஜய் பூந்து விளையாடுனது இவங்களோடதான்! நம்பவே முடியலயேப்பா!

யூடியூப் (YouTube) தளத்தில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இதில், 3 முக்கியமான நடிகைகள் (Actresses) மிகவும் விலை உயர்ந்த கார்களில் பல்வேறு இடங்களுக்கு வந்ததை நம்மால் காண முடிகிறது. இந்த வீடியோவில் முதலில் தோன்றுவது பிபாஷா பாசு (Bipasha Basu) ஆவார்.

தளபதி விஜய் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான சச்சின் (Sachien) திரைப்படத்தில் பிபாஷா பாசு நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இருவருக்கும் இடையே 'கெமிஸ்ட்ரி' பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் தற்போது அடையாளமே தெரியாத அளவிற்கு பிபாஷா பாசு மாறியுள்ளார். அவர் பயன்படுத்தியது ஆடி க்யூ7 (Audi Q7) ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது.

Bipasha Basu Spotted In Audi Q7

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஆடி க்யூ7 காரின் ஆரம்ப விலை (Price) 84.70 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 92.30 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த வீடியோவில் இரண்டாவதாக தோன்றுபவர் கரீனா கபூர் (Kareena Kapoor) ஆவார்.

அவர் பயன்படுத்தியது மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes-Benz S-Class) ஆகும். இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் ஆரம்ப விலையே 1.71 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 2.17 கோடி ரூபாயாக இருக்கிறது.

Bipasha Basu In Audi Q7

இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான். கரீனா கபூர் இந்த காரை பயன்படுத்துவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்னதாக திரைப்பட துறை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர் இந்த காரில் வந்துள்ளார். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் இந்த செய்திகளை படித்திருக்கலாம்.

இந்த வீடியோவில் நாம் மூன்றாவதாக பார்ப்பது மலாய்கா அரோரா (Malaika Arora) ஆவார். அவர் பயன்படுத்தியது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 2.39 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 4.17 கோடி ரூபாயாக உள்ளது.

எனவே இந்த வீடியோவில் நாம் பார்க்கும் கார்களிலேயே மிகவும் விலை உயர்ந்த காராக மலாய்கா அரோராவின் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது. இதுவும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்தான். இந்திய நடிகர், நடிகைகள் பலரிடம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாதாரண பெண்கள் நகைகளை அதிகம் நேசிக்கும் நிலையில், திரைப்பட நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை நேசிக்கின்றனர். இதற்கு தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவே ஒரு உதாரணம்தான். இங்கே நாம் பார்க்கும் கார்களை விட அதிக விலை கொண்ட கார்களை பயன்படுத்தும் நடிகைகளும் இந்தியாவில் இருக்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 31, 2023, 17:31 [IST]
English summary
Bipasha basu spotted in audi q7 viral video full details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+