பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

பிறந்தநாளை முன்னிட்டு பிரபல நடிகர் ஒருவர் தனது தாயை நெகிழ வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

திரைப்பட நடிகர், நடிகைகள் கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். எனவே விலை உயர்ந்த கார்கள் எல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணமாக உள்ளது. தங்களுக்கு என லக்ஸரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்கி கொள்வதுடன், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் விலை உயர்ந்த வாகனங்களை பரிசாக வழங்கி, திரைப்பட நடிகர், நடிகைகள் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றனர்.

பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்த வகையில் திரைப்பட நடிகர் ஒருவர், தனது தாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். பாலிவுட் திரையுலகின் கார்த்திக் ஆர்யன்தான் (Kartik Aryan) அந்த நடிகர். இவர் தனது தாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மினி கூப்பர் கன்வெர்டபிள் (Mini Cooper Convertible) காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளார்.

பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

மகன் கார்த்திக் ஆர்யன் வழங்கிய மினி கூப்பர் கன்வெர்டபிள் ஸ்போர்ட்ஸ் காரை அவரது தாய் மாலா திவாரி (Mala Tiwari) மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டுள்ளார். இந்த புதிய காரில் தனது தாயை அழைத்து கொண்டு மும்பையில் உற்சாகமாக வலம் வந்துள்ளார் கார்த்திக் ஆர்யன். இவர் தனது தாய்க்கு பரிசாக வழங்கியிருப்பது எஸ் வேரியண்ட் ஆகும்.

பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

இதில், 2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 192 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த காரில் 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த காரின் விலை 49.5 லட்ச ரூபாய். இது மும்பை ஆன் ரோடு விலையாகும்.

பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

பொதுவாக பார்த்தால் இது உங்களுக்கு சற்று அதிகமான விலையாக தெரியலாம். ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 2 டோர் கன்வெர்டபிள் கார்களில், விலை குறைவான மாடல்களில் ஒன்றாக மினி கூப்பர் எஸ் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விலை குறைவான 2 டோர் கன்வெர்டபிள் மாடல் என்றால் அது ஆடி ஏ3 கேப்ரியோலட் (Audi A3 Cabriolet) கார்தான். இதன் விலை சுமார் 63 லட்ச ரூபாய்.

பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

மினி கூப்பர் எஸ் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 225 கிலோ மீட்டர்கள். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 7 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறன் இந்த காருக்கு உள்ளது. இதன் ஹேண்ட்லிங்கும் மிக சிறப்பாக இருக்கும் என்பதால், கார் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான மாடலாக இது திகழ்கிறது.

பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

மினி கூப்பர் எஸ் கன்வெர்டபிள் கார் 4 பேருக்கான இருக்கை அமைப்பை பெற்றுள்ளது. ஆனால் இரண்டாவது வரிசை இருக்கைகள் குழந்தைகளுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். இந்த காரில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு வசதிகளுக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் பெற்றுள்ளது.

பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்த காரில் இரண்டு ஏர் பேக்குகள் வழங்கப்படுகின்றன. இதில், ஒன்று டிரைவர் இருக்கைக்கும், மற்றொன்று கோ-பாஞ்சர் இருக்கைக்கும் வழங்கப்படுகிறது. அத்துடன் ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், முன் மற்றும் பின் பகுதிகளில் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

இவைதான் இந்த காரில் வழங்கப்படும் முக்கியமான பாதுகாப்பு வசதிகள் ஆகும். இதுதவிர ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் வழங்கப்படுகின்றன.

பிறந்தநாளை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ்... தாயை நெகிழ வைத்த பிரபல நடிகர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்த காரின் முன் இருக்கைகளை மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதேபோல் இன்னும் ஏராளமான வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது. மினி கார்களை வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும். அப்படி ஒரு காரை பரிசாக கொடுக்கும் மகன் கிடைக்க அந்த தாய் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2020, 15:41 [IST]
English summary
Birthday Surprise! Actor Kartik Aryan Gifts Mum a Mini Cooper S Convertible. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+