சுரங்கத்திற்குள் குவியல் குவியலாக கிடந்த பழைய கார்கள்... இங்கிலாந்தில் பரபரப்பு

Written By:

இங்கிலாந்து நாட்டில், கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் குவியல் குவியலாக பழைய கார்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுரங்கத்திற்குள் நூற்றுக்கும் அதிகமான கார்கள் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. கடும் ஆபத்துக்களுக்கு மத்தியில் இந்த முயற்சியை எடுத்த ஆய்வாளர் குழு எடுத்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் தெரிவித்திருக்கும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மூடப்பட்ட சுரங்கம்

மூடப்பட்ட சுரங்கம்

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் கடந்த 1836ம் ஆண்டு திறக்கப்பட்ட கனிம சுரங்கம் ஒன்று, கடந்த 1960ல் மூடப்பட்டது. இந்த சுரங்கத்தை அந்நாட்டை சேர்ந்த ஆய்வாளர் குழு ஒன்று சமீபத்தில் சென்று பார்த்தபோது, அவர்கள் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை அங்கு காண நேரிட்டது.

 ஆய்வு குழுவின் தகவல்

ஆய்வு குழுவின் தகவல்

ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவரும் மென்பொருள் வல்லுனருமான 31 வயதாகும் கிரிகோரி ரிவோலெட் கூறுகையில்," கைவிடப்பட்டு 55 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், சுரங்கத்திற்குள் செல்வது மிகுந்த ஆபத்தை தருவதாக இருந்தது. சுரங்கத்தின் மேற்புறத்தில் இருந்த கற்கள் தலையில் விழும் ஆபத்து இருந்தது. மேலும், இருட்டும் வழுக்குத் தரையும் ஆபத்தை அதிகப்படுத்தின.

 ரிஸ்க் எடுத்தோம்...

ரிஸ்க் எடுத்தோம்...

இருந்தாலும் சுரங்கத்திற்குள் ஏதாவது அதிசயம் இருக்கிறதா என்பதை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில், தரையிலிருந்து 65 அடி ஆழத்திற்கு சரிவாக செல்லும் அந்த சுரங்கத்திற்குள் இறங்கினோம்.

இன்ப அதிர்ச்சி...

இன்ப அதிர்ச்சி...

கடும் பிரத்யேனம் எடுத்து சுரங்கத்திற்குள் சென்றபோது, முடிவில் குளம் போல் நீர் தேங்கியிருந்தது. அத்துடன், அங்கு நூற்றுக்கும் அதிகமான பழைய கார்கள் குவியல் குவியலாக கிடந்தன.

 ஆச்சரியம்

ஆச்சரியம்

கார்கள் இங்கு எப்படி வந்தது என்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அங்கு இருந்த கார்கள் 45 ஆண்டுகளுக்கும் மேலான மாடல்களாவும் இருக்கின்றன.

நேரம் போனதே தெரியவில்லை...

நேரம் போனதே தெரியவில்லை...

சுரங்கத்திற்குள் கார்களை பார்த்ததும், அங்கு அதுதொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டோம். அங்கு சுமார் 4 மணிநேரத்தை செலவிட்டோம்," என்று கிரிகோரி கூறினார்.

மர்மம் என்ன?

மர்மம் என்ன?

சுரங்கத்திற்கு வெளியிலும், உள்பகுதியிலுமாக பல நூறு கார்கள் வந்தது எப்படி என்பது குறித்து உறுதியானத் தகவல் இல்லை. ஆனால், சுரங்கத்திற்கு அருகிலுள்ள சாலை மலைச் சாலை மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அதுவும் மழை சமயங்களில் சாலை வழுக்குத் தரையாக மாறிவிடும். அதுபோன்ற சமயங்களில் வந்த கார்கள்தான் சாலையிலிருந்து தவறி இந்த சுரங்கத்திற்குள் வந்து விழுந்திருக்கும் என கருதுகிறோம்.

மீட்க முடியாது...

மீட்க முடியாது...

தவறி விழுந்த கார்களை மீட்பதும் கடினமாக இருந்திருக்கும். அத்துடன், தவறி விழுந்த கார்களை இதிலிருந்து மேலே கொண்டு வருவதற்கு அதிக செலவு பிடித்திருக்கும் என்பதால், கைவிடப்பட்டு இங்கு அனாதைகளாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

வொர்த்...

வொர்த்...

இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து வந்தாலும், கார் கல்லறையை கண்டுபிடித்ததால், இந்த பயணம் மதிப்பு வாய்ந்த ஒன்றாகவே கருதுகிறேன் என்று கிரிகோரி கூறினார்.

 

Photo Credit: mediadrumworld.com

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Bizarre Car Graveyard Found Wales.
Story first published: Monday, February 29, 2016, 0:05 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos