பைத்தியம் பிடிக்காத குறை மட்டும் தான்!! இந்த ரோடுகளில் யாராக இருந்தாலும் குழம்பிடுவாங்க!

கார் ஒன்று இயங்க அதனுள் இருக்கும் நூற்றுக்கணக்கான பாகங்கள் செயல்பட வேண்டும். இதன் காரணமாகவே, காரை வாங்குவதை காட்டிலும் முறையாக பராமரிப்பது முக்கியம் என பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். சில சமயங்களில் கார் பாகங்கள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்தாலும், வெளியே நிலவும் சூழலினால் கார் இயங்காமல் போகலாம்.

அதேபோல், சில நேரங்களில் சில இடங்களில் நீங்கள் ஆக்ஸலரேட்டரை அழுத்தாமலே உங்கள் கார் முன்னோக்கி நகர்ந்து செல்லும். சரிவான பகுதியை நோக்கி கார் ஓட்டும்போது அவ்வாறு தான் இருக்கும் என நீங்கள் கூறுவது புரிகிறது. ஆனால், சில இடங்கள் சரிவாக இல்லாமல் இருப்பது போல் தோன்றினாலும், கார் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்.

bizarre roads in world

காணும் எவரொருவரையும் ஆச்சிரியப்பட வைக்கக்கூடிய அத்தகைய பகுதிகளை பற்றி உங்களில் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், உலகளவில் அத்தகைய பகுதிகள் மிகவும் குறைவாகவும், அரிதாகவும் இருக்கின்றன. அத்தகைய இடங்களுள் ஐந்தை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம்.

மேக்னெட்டிக் ஹில், லடாக்: இந்தியாவின் லடாக்கில் உள்ள அழகான குன்றுகளுள் ஒன்றான இது, ஓர் ஒளியியல் மாயை (ஆப்டிகல் இல்லுஷன்) ஆகும். இந்த குன்றில் அமைந்துள்ள சாலையில் ஓர் மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதியை நோக்கி தான் நாம் செல்வோம். நமக்கு எதிரே மேடான குன்றுகள் தெரியும். அங்கிருக்கும் சாலை மேடும், பள்ளமுமாக அமைக்கப்பட்டிருப்பதால், எதிரே தெரிகின்ற மேடான குன்றின் மீது ஏறுவது போல் தோன்றும். ஆனால், நீங்கள் கீழ்நோக்கி செல்லும் சாலையில் இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.

bizarre roads in world

Image Courtesy: Visitorroroo

மேக்னெட்டிக் ஹில், தெற்கு ஆஸ்திரேலியா: தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தின் பிரபலமான பிளாக் ராக்கிற்கு அருகே அமைந்துள்ள குன்று. லடாக்கின் மேக்னெட்டிக் குன்றை போன்றுதான் ஒளியியல் மாயை மூலம் வாகன ஓட்டிகளை வித்தியாசமாக யோசிக்க வைக்கிறது. அதாவது, சாலையின் சரிவை நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தாலும், அதனுள் இருப்பவர்களை வாகனம் சமமான சாலையில் இயங்குவதுபோல் நினைக்க வைக்கிறது.

bizarre roads in world

Image Courtesy: Armineaghayan/Wiki Commons

மௌண்ட் அராகாட்ஸ், அர்மேனியா: வாகன ஓட்டிகளுக்கு எதிர்மறையான உணர்வை தரும் உலகின் மற்றொரு 'கிராவிட்டி ஹில்'. இந்த குன்றை பற்றி உள்ளூர் வாசிகளிடம் பலத்தரப்பட்ட கருத்துகளும், கற்பனைகளும் உள்ளன. ஆனால், வழக்கம்போல் இந்த குன்றில் பயணம் செய்யும்போதும் நமக்கு ஏற்படுவது ஒளியியல் மாயை மட்டுமே ஆகும்.

bizarre roads in world

ஹூவர் அணை, அமெரிக்கா: இவ்வளவு நேரம் ஒளியியல் மாயை ஏற்படுத்தக்கூடிய குன்றுகளை பற்றி தான் பார்த்து வந்தோம். ஆனால், அமெரிக்காவில் உள்ள ஹூவர் நீர் அணையில் நிகழ்வது வித்தியாசமானது. இந்த அணையை வாகன ஓட்டிகள் யு-டர்னில் திரும்ப வேண்டும். அவ்வாறுதான் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நீர் தேங்கிய பகுதியில் சாலை இருக்காது. அணையின் மீது செல்லும் போது மட்டுமே சாலையில் ஒரு பக்கத்தில் தேக்கப்பட்ட நீர் இருக்கும். அவ்வாறு அணையின் மீது செல்லும்போது, தேங்கியிருக்கும் நீரில் இருந்து உருவாகும் காற்றினாலும், அணையின் வளைவான வடிவமைப்பினாலும் என்ஜினின் உதவியின்றி கார்கள் தானாக இயங்குகிறது.

bizarre roads in world

Image Courtesy: Jennifer Nanek/National Park Service

ஸ்பூக் ஹில், அமெரிக்கா: மத்திய ஃப்ளோரிடாவில் உள்ள ஓர் குன்று பகுதி. இந்த குன்று பகுதியிலும் ஒளியியல் மாயை காரணமாகவே வாகனங்கள் தானாக மேடான பகுதியை நோக்கி இயங்குவது போல் தோன்றுகின்றன. ஆனால் இதற்கான விடை, வாகனங்கள் சரிவை நோக்கி செல்கின்றன என்பதாகும். ஆனால், இதனை அறியாமல் பல விஐபி-கள் கூட இந்த குன்றின் ஆச்சிரியத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே குன்றுகள் என்றால், மேடும் பள்ளமும் ஆகவுமே இருக்கும். இதனால்தான், குன்றுகளில் ஒளியியல் மாயை அதிகமாக ஏற்படுகிறது. மேலும், இதனால்தான் இந்த செய்தியில் அதிகளவில் குன்று பகுதிகளை பார்த்துள்ளோம். உயரமான மலைகள் இல்லாமல், சிறு சிறு மலைகள் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் பகுதிகள் குன்றுகள் எனப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 21, 2023, 16:48 [IST]
English summary
Bizarre roads in world where motorists feel weird
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X