ஹைடெக் பஸ்சில் மைக் செட் கட்டிய பெங்களூர் பாஜக!!

By Saravana

பெங்களூரில், தேர்தல் பிரச்சாரத்திற்காக பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்ட ஹைடெக் பஸ்சை கர்நாடக முன்னாள் முதல்வரும், பெங்களூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளருமான சதானந்த கவுடா நேற்று அறிமுகம் செய்தார்.

விஜய பாரத ரதம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த பஸ்சை கர்நாடக முன்னாள் தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி வழங்கியிருக்கிறார். இந்த பஸ்சின் சிறப்பம்சங்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்வராஜ் மஸ்தா பஸ்

ஸ்வராஜ் மஸ்தா பஸ்

ஸ்வராஜ் மஸ்தா பஸ்சில்தான் சில மாற்றங்களை செய்து தேர்தல் பிரச்சார வாகனமாக மாற்றியுள்ளனர்.

டிசி டிசைன் கைவண்ணம்

டிசி டிசைன் கைவண்ணம்

இந்த பஸ்சில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் டிசி டிசைன்ஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது.

வசதிகள்

வசதிகள்

இந்த பஸ்சில் 8 பேர் பயணம் செய்வதற்கான சொகுசான இருக்கைகள் உள்ளன.

மின்தூக்கி மேடை

மின்தூக்கி மேடை

பிரச்சாரத்தின்போது தலைவர்கள் பேசுவதற்கு வசதியாக மின்தூக்கி வசதியுடன் கூடிய மேடை பஸ்சில் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிவி

டிவி

2 எல்சிடி டிவி மற்றும் டிஷ் ஆன்டெனா மூலம் நிகழ்வுகளை பஸ்சில் இருப்பவர்கள் பார்த்துக் கொள்ளும் வசதி இருக்கிறது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு

பத்திரிக்கையாளர் சந்திப்பு

பத்திரிக்கையாளர்களை சந்திப்புக்கான வசதியும் இந்த பஸ்சில் இருக்கிறது.

 ஜெனரேட்டர்

ஜெனரேட்டர்

இந்த பஸ்சில் ஜெனரேட்டர் வசதி இருப்பதால் எந்த நேரத்திலும் பிரச்சாரம் தங்கு தடையின்றி செய்ய முடியும்.

இதர வசதிகள்

இதர வசதிகள்

குளிர்சாதன வசதி, குளிர்சாதன பெட்டி, கழிவறை, சிசிடிவி கேமரா போன்றவையும் இந்த பஸ்சில் உள்ளன.

மைக்செட்

மைக்செட்

மேலும், பிரச்சாரத்திற்கு ஏதுவாக மைக் மற்றும் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

பெயிண்ட்

பெயிண்ட்

வெளிப்புறத்தில் பாஜக.,வின் கொடியின் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 9, 2014, 10:53 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+