உலகிலேயே இதை முதல் முறையாக செய்திருப்பது நம்ம மோடி கோஷ்டிதான்... அட கடவுளே சிரிப்பதா? அழுவதா?

உலகில் இதுவரை வேறு யாருமே செய்யாத ஒன்றை பாஜகவினர் தற்போது முதல் முறையாக செய்துள்ளனர். அது என்னவென்று தெரிந்து கொண்ட பின்பு, சிரிப்பதா? அல்லது அழுவதா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான், சாலை விபத்துக்களில் அதிகமாக உயிரிழந்து வருகின்றனர்.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதே இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

என்றாலும் தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுவது கிடையாது. ஆனால் மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாநகர போலீசார், தற்போது இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு புனே மாநகரில் பலமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. என்றாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தால் அந்த உத்தரவு நீர்த்து போய்விட்டது.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் இம்முறை புனே மாநகர போலீசார் விடாப்பிடியாக கட்டாய ஹெல்மெட் உத்தரவை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். அதாவது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல், டூவீலர்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு புனேவில் அமலுக்கு வந்துள்ளது.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

வாகன ஓட்டிகளின் நலன் கருதி போலீசார் பிறப்பித்த இந்த உத்தரவிற்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும், ஒரு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நேற்று (ஜன.10) போராட்டம் ஒன்றை நடத்தினர்.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அதாவது சுடுகாடு ஒன்றில் ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது. முன்னதாக ஹெல்மெட்டிற்கு இறுதி ஊர்வலமும் நடைபெற்றது. அனேகமாக உலகில் ஹெல்மெட்டிற்கு இறுதி ஊர்வலம் நடைபெற்றது இதுதான் முதல் முறையாக இருக்க கூடும். இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக புனேவில் போக்குவரத்தே ஸ்தம்பித்து போய் விட்டது.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

புனே மாநகர போலீசார் பிறப்பித்துள்ள கட்டாய ஹெல்மெட் உத்தரவிற்கு எதிராகதான் இந்த நூதன போராட்டம் நடத்தப்பட்டது. அதுவும் போலீசாரின் உத்தரவு அமலுக்கு வந்த 10வது நாளில், 10ம் நாள் காரியமாக இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போராட்டமானது, சிவ சேனா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான மஹாதேவ் பாபி என்பவரது தலைமையில் நடைபெற்றது. இதில், புனே எம்பி அனில் ஷிரோலியும் கலந்து கொண்டார். இவர் பாஜகவை சேர்ந்தவர்.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் தற்போது தொகுதி மக்கள் மத்தியில் அனில் ஷிரோலி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில், புனே தொகுதியில் அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை களமிறக்க பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இந்த சூழலில், கட்டாய ஹெல்மெட் உத்தரவு குறித்து எம்பி அனில் ஷிரோலி கூறுகையில், ''உள்ளூர் மக்களின் உணர்வுகளை போலீசார் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் சாலைகளில் மக்கள் மிகவும் மெதுவாகதான் வாகனங்களை இயக்குவார்கள்.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

எனவே சாலை விபத்துகளுக்கான வாய்ப்பு மிக மிக குறைவுதான். எனவே புனே சாலைகளில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு தேவையற்றது'' என்றார்.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

பாஜக எம்பியின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹெல்மெட் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்பதற்கு அதை விட அதிர்ச்சிகரமான காரணம் ஒன்றை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டுகிறது என்பதே அவர்கள் தெரிவித்த அதிர்ச்சிகரமான காரணம். உயிரை விட அவர்களுக்கு முடிதான் முக்கியம் போல. ஆனால் இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியிலேயே கடும் எதிர்ப்புதான் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ''விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அடிக்கும் ஸ்டண்ட் இது. இப்படி வீண் காரணங்களுக்காக போராட்டம் நடத்துவதை கைவிட்டு விட்டு, அதற்கு பதிலாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தலாம்.

ஹெல்மெட்டிற்கு இறுதி சடங்கு நடத்திய பாஜகவினர்... காரணம் என்னவென்று தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

குறிப்பாக புனேவின் பல்வேறு இடங்களில் முறையான கழிவறை வசதி இல்லை. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வீண் விளம்பரத்தை விடுத்து, கழிவறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க முன் வர வேண்டும்'' என்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, January 11, 2019, 10:46 [IST]
English summary
BJP-led Pune Group Conducts Funeral For Helmet To Oppose Police New Rule. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+