சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கி கொண்டுள்ளார்.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

இந்தியாவின் 17வது மக்களவை பொது தேர்தல் வாக்குப்பதிவிற்கான நாட்கள் நெருங்கி வருகின்றன. ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், வரும் ஏப்ரல் 18ம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

மே 23ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தியாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்ற கேள்விக்கு ஏறக்குறைய அன்றைய தினம் விடை தெரிந்து விடும். முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

இந்த சூழலில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக, மக்களவை தேர்தலையொட்டி வித்தியாசமான பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில், தனது பெயருக்கு முன்பாக ''சவுக்கிதார்'' என்ற வார்த்தையை சேர்த்துள்ளார். மக்கள் காவலர் என்கிற ரீதியில் பொருள்படும் வார்த்தை இது.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் என பலரும் தங்கள் அதிகாரப்பூர்வ டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலை தள பக்கங்களில், தங்கள் பெயருக்கு முன்பாக சவுக்கிதார் என்ற வார்த்தையை சேர்த்து வருகின்றனர்.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

இந்த சூழலில் மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா (Khandwa) மாவட்டத்தில் உள்ள பந்தானா (Pandhana) சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் ராம் டங்கூர் (Ram Dangore). இவரது மஹிந்திரா டியூவி300 (Mahindra TUV300) காரின் நம்பர் பிளேட்டிற்கு மேலே, சிகப்பு நிற தகடு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. அதில், சவுக்கிதார் பந்தானா என ஹிந்தியில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

ஏற்கனவே குறிப்பிட்டபடி பந்தானா என்பது சட்டமன்ற தொகுதி ஆகும். அதன் எம்எல்ஏவாக இருப்பவர்தான் ராம் டங்கூர். அதாவது பந்தானா தொகுதியின் பாதுகாவலர் என்று பொருள்படும் வகையில், அந்த தகட்டை தனது காரின் நம்பர் பிளேட்டிற்கு மேலே பொருத்தியிருந்தார் ராம் டங்கூர். ஆனால் நம்பர் பிளேட்டை காட்டிலும் அந்த தகடு பெரிதாக இருந்தது.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

இதற்காக காண்ட்வா போலீசாரால் அவருக்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் முன்பகுதியில் முறையற்ற வகையில் நம்பர் பிளேட்டை பொருத்தி, மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 51ஐ மீறியதற்காக, பாஜக எம்எல்ஏ ராம் டங்கூருக்கு போலீசார் சலான் வழங்கியுள்ளனர்.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

இதுகுறித்து காண்ட்வா போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக, எம்எல்ஏ ராம் டங்கூரின் வாகனம் கடந்த திங்கள் கிழமை மாலை (மார்ச் 25), போக்குவரத்து போலீசாரால் நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தின் முன் பகுதி நம்பர் பிளேட் அளவு, விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை. அத்துடன் நம்பர் பிளேட்டை காட்டிலும் பெரிய தகடு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது'' என்றார்.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

எம்எல்ஏ ராம் டங்கூரின் வாகனம் நிறுத்தப்பட்டபோது, அவர் போக்குவரத்து போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் சலானையும் ஏற்க மறுத்துள்ளார். எனினும் பின்னர் நீதிமன்றம் மூலமாக அவருக்கு சலான் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ ராம் டங்கூர் கூறுகையில், ''போலீசார் என் வாகனத்தை நிறுத்தினார்கள்.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

பின்னர் வாகனத்தில் சவுக்கிதார் என என்னால் எழுத முடியாது என என்னிடம் தெரிவித்தனர். இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என அவர்கள் கூறினர். ஆனால் சவுக்கிதார் என்பது வெறும் வார்த்தைதான். இதற்கு எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு கிடையாது என நான் அவர்களிடம் கூறினேன். இருந்தபோதும் நான் சொல்வதையே அவர்கள் கேட்கவில்லை. அத்துடன் அபராதம் செலுத்தும்படி கூறினர்.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

எனவே சவுக்கிதார் என எழுதுவதை சட்டமீறல் என கூறும் தேர்தல் விதிமுறையை காட்டும்படி நான் அவர்களிடம் தெரிவித்தேன். ஆனால் அப்படி எந்தவொரு விதியையும் அவர்கள் என்னிடம் காட்டவில்லை'' என்றார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பான பேன்ஸி நம்பர் பிளேட்களை வாகனங்களில் பொருத்தி கொள்ளும் வழக்கம் பலரிடமும் உள்ளது.

சவுக்கிதாரை சேர்க்க கூடாத இடத்தில் சேர்த்து வில்லங்கத்தில் சிக்கிய பாஜக எம்எல்ஏ... நடந்தது இதுதான்

இந்திய சட்ட விதிமுறைகளின்படி வாகனத்தின் முன்பும், பின்பும் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் பதிவு எண் தெளிவாக தெரியும் வகையில் அவை இருக்க வேண்டும். பதிவு எண்ணும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதனை கடைபிடிப்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: HindustanTimes

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2019, 14:49 [IST]
English summary
BJP MLA Fined For Chowkidar Number Plate On Mahindra TUV300. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+