நோ என்ட்ரியில் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ... தடுத்து நிறுத்திய காவலருக்கு ”பளார்”..!!

Written By:

ஒரு வழிப்பாதையில் சென்ற காரை நிறுத்திய போக்குவரத்து காவலரை பா.ஜ.கவை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் கண்ணதில் அறைந்தது உத்திர பிரதேச அரசியலில் சட்டம் ஒழுங்கை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

உத்தர பிரதேசத்தின் மொஹமது-கோஹ்னா பகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீராம் சோன்கர். கடந்த செவ்வாய் அன்று உ.பி-யின் சட்டமன்ற கட்டிடம் விதான் பவனிற்கு சென்று கொண்டு இருந்தார்.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

அப்போது இவரது எஸ்.யூ.வி கார், விதான் பவனிற்கு அருகே உள்ள ஒருவழி பாதையில் பயணித்தது. இந்த விதிமீறலை பார்த்த போக்குவரத்து காவலர் அமித் சாரின் எம்.எல்.ஏ காரை தடுத்தி நிறுத்தி, மாற்று வழியில் போகுமாறு கேட்டுக்கொண்டார்.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

காவலர் சொல்லும் பாதை வழியாக சென்றால், 3 கி.மீ தொலைவில் சென்று விதான் பவனிற்கு வரவேண்டும். ஆனால் இந்த ஒருவழி பாதையில் சென்றால் 300 மீட்டர் தொலைவில் அந்த இடத்தை அடைந்துவிடலாம்.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

அதனால் எம்.எல்.ஏ ஸ்ரீராம் சோன்கர் மற்றும் அவருடன் இருந்த அவரது ஆதரவாளர்கள், காவலர் அமித் சாரின் பேச்சை கேட்க மறுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

அமித் சாரின் தனது பிடியில் கடுமையாக இருக்கவே, எம்.எல்.ஏ ஸ்ரீராம் சோன்கர் காவலரை கண்ணதில் 'பளார்' என அறைந்து விட்டதாகவும், பிறகு ஆதரவாளருடன் எம்.எல்.ஏ அந்த ஒருவழி பாதையில் எஸ்.யூ.வி காரை செலுத்தி சென்றுவிட்டதாகவும், சம்பவத்தை பார்த்த சில சாலை பயணிகள் கூறுகிறார்கள்.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

எம்.எல்.ஏ ஒருவர் போக்குவரத்து காவலர் ஒருவரை கண்ணத்தில் அறைந்த இந்த சம்பவம் குறித்து லக்னோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் புகாரில் எம்.எல்.ஏ சோனகரின் பெயரை குறிப்பிடமால், காவலர் அமித் சாரினை தாக்கியதாக எம்.எல்.ஏ-வின் பாதுகாவலர் பெயர் இடம்பெற்றுள்ளது.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

மேலும், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் காவலர் அமித் சாரினிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதாகவும் புகாரில் குறிபிடப்பட்டுள்ளதாக லக்னோவின் மூத்த கண்காணிப்பாளர் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பாடுபவதாக கூறித்தான் உ.பி-யில் சமீபத்தில் பா.ஜ.க அரசு ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால் தற்போது இதுபோன்ற சம்பவங்களுக்காகவே அம்மாநில மக்கள் உ.பி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

சமீபத்தில் பா.ஜ.கவின் எம்.எல்.ஏ ஒருவர் சுங்க சாவடியில் ஊழியர் ஒருவரை தாக்கியதாக வெளியான வீடியோ பல்வேறு கட்டண குரல்களை நாடு முழுவதும் பதிவு செய்தது.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

அதேபோல கோரக்பூரில் தனது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தை தடுத்திய காவலரை முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடினார்.

நோ என்ட்ரியில் செல்ல தடை விதித்த காவலருக்கு எம்.எல்.ஏ அறை..!

தொடர்ந்து உத்தர பிரதேச அரசு அம்மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் காட்டும் இதுபோன்ற அக்கறைகளால் பெரும்பாலான உ.பி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BJP MLA slaps traffic Police for not letting his car enter into one-way route. Click for Details...
Story first published: Friday, June 9, 2017, 11:16 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark