ரூ. 6 ஆயிரம் கோடி ஊழல் செய்த இவர் பாஜக-காரரா! இப்ப அவர் என்ன நிலைமையில் இருக்காரு தெரிமா? ஊரே சந்தோஷமா இருக்கு
இந்தியாவில் அரங்கேறிய மிகப் பெரிய பண மோசடிகளில் ஒன்றாக சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் அரங்கேறிய போன்சி மோசடி அமைந்துள்ளது. சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை பண மோசடி செய்யப்பட்டு இருப்பதை குஜராத் குற்றப் புலனாய்வுத் துறைக் கண்டுபிடித்திருக்கின்றது. குறிப்பாக, இந்த பண மோசடிக்கு பின்னால் பாஜக கட்சியைச் சேர்ந்த ஒருவர் இருக்கின்றார் என்பதையும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து, அவரை கைதும் செய்திருக்கின்றனர். அதுமட்டுமில்லைங்க, அவரிடத்தில் இருந்த மிக விலை உயர்ந்த ஆடம்பர கார்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
பூபேந்திர சிங் ஜலா, இவரே அந்த பாஜக அரசியல் பிரமுகர் ஆவார். இவர் ஓர் பகுதி நேர அரசியல்வாதி ஆவார். இவரின் முக்கிய தொழிலே வட்டிக்கு விடுவதுதான் என கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் அவர் பிஇசட் ஃபினான்சியல் சர்வீஸ் மற்றும் பிஇசட் குரூப் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்திருக்கின்றார்.

இந்த நிலையிலேயே அவர் போன்சி எனும் திட்டத்தைத் தொடங்கி இருக்கின்றார். இந்த திட்டம் வாயிலாக முதலீடு செய்வோருக்கு மிக அதிக லாபத்தை வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி இருக்கின்றார். இதை நம்பி குஜராத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்கள் லட்சக் கணக்கில் பணத்தைக் கொட்டியிருக்கின்றார்.
இதற்கு பின்னரே மோசடி சம்பவத்தை அந்த பாஜக பிரமுகர் அரங்கேற்றி இருக்கின்றார். 15 நாட்களுக்கும் மேலாக அவர் தலைமறைவாகி இருந்தநிலையில் தேவ்டா கிராமத்தில் வைத்து குஜராத் காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்திருக்கின்றனர். மேலும், பூபேந்திர சிங் ஜலா-விடம் பல்வேறு ஆடம்பர கார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
இவரிடத்தில் மிக அதிக விலைக் கொண்ட மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Maybach GLS600) கார் மாடல் இருந்ததுதான் பலருக்கும் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இந்த காரில் சொகுசு பங்களா வீடுகளுக்கு இணையான சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரை அதிக சிறப்பம்சங்களைச் சேர்த்து, ஆன்-ரோடில் வாங்கும்போது அதன் விலை ரூ. 4 கோடியைகூட நெருங்கலாம். இந்த அளவிற்கு காஸ்ட்லியான கார்களையே மோசடி மன்னனாக மாறி இருக்கும் பூபேந்திர சிங் ஜலா பயன்படுத்தி வந்திருக்கின்றார்.
இந்த கார் மாடல் மட்டுமில்லைங்க அவரிடத்தில் வால்வோ எக்ஸ்சி 90 (Volvo XC90) மற்றும் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) போன்ற மிக மிக காஸ்ட்லியான சொகுசு மற்றும் சூப்பர் கார்களும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. இதில் வால்வோ எக்ஸ்சி 90 கார் மாடலின் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் அதிகம் ஆகும். இதேபோல், போர்ஷே கேயென்னேவின் விலை ஒன்றரை கோடி ரூபாக்கும் அதிகம்.
கோடி ரூபாய் விலையைக் கொண்ட காரை மட்டுமல்ல அவர் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற கார் மாடல்களையும் பயன்படுத்தி வந்திருக்கின்றார். இவற்றையும் தற்போது போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதனால், பூபேந்திரா-விடம் பணத்தை இழந்தவர்கள் தற்போது மன நிம்மதி அடைந்திருக்கின்றனர். விரைவிலேயே தங்களின் பணம் வந்துவிடும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பூபேந்திரா சிங் ஜலா, அதிக வட்டி தருவதாக சொல்லி மட்டுமே மக்களை ஏமாற்றவில்லை. அவர், முதலீட்டாளர்களை வெளிநாடுகளுக்கு டூர் அழைத்துச் செல்வதாகவும் கூறியிருக்கின்றார். மேலும், டிவி, வாகனம் போன்ற சிறப்பு பரிசுகளை வழங்குவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறியிருக்கின்றார். இதை நம்பியே பலரும் தாங்கள் ஏமாற போகிறோம் என்பதை அறியாமல் பணத்தை முதலீடு செய்திருக்கின்றனர். பாஜக பிரமுகர் செய்த இந்த மோசடி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








