ஒரு லட்ச ரூபா கட்ட சொல்லிட்டாங்க.. கார அழகா வச்சிருந்தது ஒரு குற்றமா?.. பாஜக-காரருக்கு வந்த சோதனைய பாருங்க!

காரை அழகா வச்சிருக்க யாருக்குதான் பிடிக்காது. இதற்கு கார் கதலராக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு காரின் உரிமையாளராக இருந்தாலே போதுமானது, காரை எப்போதும் அழகாக வைத்திருக்க தோன்றும். அந்தவகையிலேயே ஓர் நபர் தன்னுடைய மஹிந்திரா தார் காரை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அந்த காரில் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றார். கார் தயாரிப்பு நிறுவனம் வழங்கிய சில முக்கிய பாகங்களை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் அணிகலன் மற்றும் பாகங்களையே அவர் அந்த காரில் சேர்த்திருக்கின்றார்.

இதற்காகவே அவர் போலீஸ் வலையில் சிக்கியிருக்கின்றார். ஆமாங்க, அவர் மாற்றிய பெரும்பாலான பாகங்கள் சந்தைக்கு பிறகானவை ஆகும். அவற்றை பயன்படுத்த அவர் அங்கீகாரம் பெறவில்லை. இதன் விளைவாக அவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, அவர் மாற்றிய அலாய் வீல்களுக்கு மட்டும் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி இருக்கின்றன.

Bjp politician fined 1 lakh for aftermarket alloy wheels

ஹிமாச்சல்-இன் மண்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமணி. இவர் பாஜக-வின் யுவா மோர்சா தலைவராக உள்ளார். சுந்தர்நகரின் மாவட்ட துணைத் தலைவர் பதவியையே இவர் வகித்து வருகின்றார். இவருக்கே இந்த மாபெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கின்றது. காவல்துறையின் இந்த அபராத நடவடிக்கையை பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிறைய மாடிஃபிகேஷன் வாகனங்கள் சாலையில் சென்றபோதிலும், தன்னுடைய வாகனம் மட்டும் மடக்கப்பட்டதாகவும், அபராதம் விதிக்க நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருந்தாகவும் அவர் கூறியுள்ளார். அவர் வைத்திருந்த காருக்கு அலாய் வீலுக்கு மட்டுமல்ல ஆவணங்கள் இல்லை மற்றும் பியூசி (Air Pollution Certificate) சான்று இல்லை என்று கூறி அதற்கும் தனியாக ரூ. 5,500 வரை அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது.

Mahindra thar with aftermarket alloys

இதனால், மிகப் பெரிய மன உளைச்சலுக்கு இந்த பாஜக-காரர் ஆளாகி இருக்கின்றார். இதை அடுத்து அவர் மாவட்ட எஸ்பி-யின் உதவியை நாடியுள்ளார். ஆகையால், இந்த சம்பவம் ஹிமாச்சலில் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கின்றது. இந்தியாவில் பாஜக-காரர் மட்டுமல்ல யார் வாகன மாடிஃபிகேஷன் செய்தாலும், அவர்கள் மீது இந்த மாதிரியான நடவடிக்கையே எடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, கடந்த காலங்களில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்திய டூ-வீலர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்ததை நாம் பார்த்திருப்போம். குறிப்பாக, அந்த சைலென்சர்களை வாகனங்களில் இருந்து கழட்டி, ரோடு போட பயன்படுத்தப்படும் வாகனங்களை வைத்து அவை அழிக்கப்பட்டன. இதுமட்டுமல்ல, கார்களின் ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்படும் சன் ஃபிலிம் கவர்களை கையோடு கிழித்து பின்னர் வாகனங்களை அனுப்பி வைக்கும் போலீஸாரின் செயலையும் நாம் பார்த்திருப்போம்.

இதுமாதிரியான நடவடிக்கையே நாடு முழுக்க மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மிக முக்கியமாக உச்சபட்ச அபராதங்களும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் வாகன மாடிஃபிகேஷனில் ஈடுபட்டுவிட்டு, அதற்காக நடவடிக்கை எடுத்த காவலர்மீதே நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி-யின் உதவியை பாஜக-காரர் நாடியிருப்பது வியப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது.

ஓர் வாகனத்தின் உண்மை தோற்றத்தை மாற்றும் விதமாக செய்யப்படும் சிறு மாற்றங்களுக்கும் இந்தியாவில் அனுமதி இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த விஷயத்தில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் பல வாகனங்களுக்கு அபராதம் மற்றும் பறிமுதல் நடிவடிக்கையை கேரளா எம்விடி எடுத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாஜக-காரர் தன்னுடைய தார் காரில் பயன்படுத்தி இருப்பது அதிக அகலமான அலாய் வீல்கள் ஆகும். இது காரின் உடலையும் தாண்டி வெளியே இருக்கும். பேராபத்தை ஏற்படுத்தக் கூடியவை ஆகும். இதனாலேயே இந்த மாதிரியான மாடிஃபிகேஷனை மோட்டார் வாகன சட்டம் அனுமதி வழங்குவதில்லை. இருப்பினும், சிலர் தங்களுடைய கார்களை அழகாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, January 13, 2025, 11:45 [IST]
English summary
Bjp yuva morcha leader fined for aftermarket alloy wheels rs 1 lakh fined
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+