இந்த பெட்டி கிடைச்சா தான் எல்லா உண்மையும் தெரியும்! விமான கருப்பு பெட்டியில் அப்படி என்ன இருக்கும் தெரியுமா?
ஆமதாபாத்திலிருந்து லண்டனிற்கு செல்லும் போயீங் 787-8 டிரீம்லைனர் என்ற ஏர்இந்தியாவிற்கு சொந்தமான விமானம் 242 பேருடன் பெரும் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருப்பு பெட்டி சிக்கினால் தான் விமானம் எதனால் விபத்தில் சிக்கியது என்பதை துள்ளியமாக கண்டுபிடிக்க முடியும். இந்த கருப்பு பெட்டியில் அப்படி என்ன இருக்கும்? இதில் இருக்கும் தகவல்கள் விபத்தில் சேதமடையாதா? இதை வைத்து எப்படி விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பார்கள்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஏர்இந்தியா ஏஐ 171 விமானம் நேற்று மதியம் சரியாக 1.39 மணிக்கு ஆமதாபாத் விமான நிலையத்தில் உள்ள ரன்வே 23ல் இருந்து டேக் ஆஃப் செய்தது. இந்த விமானம் டேக் ஆஃப் செய்த அடுத்த சில நொடிகளிலேயே மேடே அலர்ட் வந்தது. இந்த விமானம் சில நொடிகளில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. தற்போது விமான நிலையத்தில் உள்ள தகவலின்படிஇந்த விமானத்தில் 230 பயணிகள், 10 விமான ஊழியர்கள், 2 விமானிகள் இருந்தனர்.

இந்த விமானம் அதிகபட்சமாக 625 அடி உயரம் வரை பறந்தது. பின்னர் கீழே விழுந்து வெடித்தது. தற்போது மீட்டு பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி நடக்கிறது. இந்த கருப்பு பெட்டியில் தான் விமானம் எப்படி விபத்திற்குள்ளானது என்பதை கண்டறியும் தகவல்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் விமானம் விபத்திற்குள்ளாகும் வரை நடந்த அத்தனை தரவுகளும் பதிவாகியிருக்கும் அதை வைத்து விபத்திற்கான காரணத்தை கண்டறிவார்கள்.
இந்த விமானம் விபத்திற்குளாவதற்கு மெக்கானிக்கல் பிரச்சனைகள், இன்ஜின் ஃபெயிலியர், பறவை மீது விமானம் மோதியது, விமானத்திற்குள் ஏற்பட்ட தீவிபத்து, அல்லது மனித தவறுகள் இது தான் காரணமாக இருக்க முடியும். விமானம் பிரச்சனையில் இருப்பதை உணர்ந்து விமானங்கள் மே டே அறிவிப்பை செய்துவிட்டனர். ஏதற்காக இதை செய்தார்கள் என் தகவல் இந்தகருப்பு பெட்டியில் தான் இருக்கும்.

ஒவ்வொரு விமானத்திலும் உள்ள கருப்பு பெட்டி விமானத்தில் உள்ள இன்ஜின் ஃபெர்பார்மென்ஸ், கண்ட்ரோல் சர்ஃபேஸ் மூவ்மென்ட், சிஸ்டம் அலர்ட்கள், காக்பிட்டில் இரண்டு விமானிகளும் பேசிக்கொண்டதற்கான ஆடியோ ரெக்கார்டுகள், விமானம் கிளம்புவதற்கு முன் விமானிகள் எமர்ஜென்ஸி செக்லிஸ்ட்களை செய்தார்களா என்பதற்கான ஆதாரம், விமானம் கிளம்புவதற்கு முன் விமானத்தில் உள்ள தொழிற்நுட்ப பிரச்சனைகள் குறித்து விமானிகள் எதுவும் பேசினார்களா என்பதற்கான ஆதாரங்கள் அதில் இருக்கும்.
தற்போது இந்த கருப்பு பெட்டி தேடப்பட்டு வருகிறது. இ்த கருப்பு பெட்டி கிடைத்தவுடன் இதை தடயவியல் ஆய்விற்காக அனுப்பி வைப்பார்கள் விமான கட்டுப்பாட்டு ஆணையத்தில் கீழ் இந்த ஆய்வகம் செயல்படுகிறது. இந்த பெட்டியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் வல்லுநர்கள் எடுத்து ஆய்வு செய்வார்கள். இதில் பதிவான வாய்ஸ்தகவல்கள், விமானத்தின் தரவுகள், ரேடார் பதிவுகள், ஏர் டிராஃபிக் கண்ட்ரோலின் பதிவுகள் எல்லாம் வைத்து விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணத்தை கண்டறிவார்கள்.

இந்த ஆய்வு செய்ய சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். விமான விபத்தில் கருப்பு பெட்டியில் சேதம் ஏதுவும் இருந்தால் அந்த சேதத்தில் இருந்து தரவுகள் எதுவும் அழியாமல் எப்படி மீட்பது எனவும் யோசிப்பார்கள். இந்த கருப்பு பெட்டியை ஆய்வு செய்து தரவுகளை எடுக்கவே 24 மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் உள்ள கருப்பு பெட்டி, பிளீச் என ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். இந்த கருப்பு பெட்டி பெரிய விபத்து நடந்தாலும் எளிதாக சேதமடையாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பெரிய தீ விபத்தில் விமானங்கள் சிக்கினால் அதிக வெப்பத்தை தாங்கும் அளவில் இது இருக்கும். ஒவ்வொரு விமானத்திலும் இரண்டு கருப்பு பெட்டிகள் இருக்கும். ஒரு கருப்பு பெட்டி சேதமானாலும் மற்ற கருப்பு பெட்டியில் தகவல்கள் இருக்கும்.

இந்த கருப்பு பெட்டியில் உள்ள ஃபிளைட் டேட்டா ரெக்கார்டர் தான் மிக முக்கியமான விஷயம் இதில் விமானத்தின் பறக்கும் உயரம், வேகம், இன்ஜின் திரஸ்ட், விமானத்தின் பாதை உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்படும் விபத்தில் சிக்கிய நவீன போயீங் 787 விமானத்தில் இது போன்ற ஆயிரக்கணக்கான தரவுகள் பதிவு செய்ய்படும். ஏன் விமானத்தின் ஏசி கண்டிஷன் கூட பதிவு செய்யப்படும் இதில் விமானத்தின் கடைசி 25 மணி நேர தரவுகள் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான விபத்தை கண்டறிய கருப்பு பெட்டி மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த கருப்பு பெட்டி தரவுகள் கிடைத்த பிறகு தான் விமான விபத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும். இந்த காரணம் தெரிந்த பிறகு தவறு எங்கே நடந்தது என்பதை கண்டறிந்து அதை சரி செய்வார்கள் மனித தவறுகளாக இருக்கும் பட்சத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









