இனி இது இல்லேன்னா கார், பைக்கிற்கு லோனே கிடைக்காது! இது என்னங்க புதுசா இருக்குது?

இந்தியாவில் ஆட்டோமொபைல் தளத்தில் பிளாக் செயின் தொழிற்நுட்பம் மிக முக்கியமாக பயன்படப்போகிறது. பிளாக் செயின் தொழிற்நுட்பம் என்றால் என்ன? இது எப்படி பயன்படும்? இதனால் உள்ள பலன்கள் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் தகவல்களை கையாளுவது தான் மிக சிரமமாக விஷயமாக இருக்கிறது. ஒரு கார் வாங்கப்படும் போது அந்த கார் குறித்த தகவல்கள், அதன் உரிமை குறித்த தகவல்கள், அந்த கார் விபத்தில் சிக்கிய தகவல்கள், அந்த கார் ரிப்பேர் செய்யப்படும் தகவல்கள் எல்லாம் தனித்தனியாக இருக்கிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை பிளாக் செயின் தொழிற்நுட்பத்தால் தீர்க்க முடியும்.

blockchain Technology in automobile

இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் பிளாக் செயின் தொழிற்நுட்பம் என்றால் என்ன என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிளாக் செயின் என்பது டீ சென்ட்ரலைஸ்டு, டிஸ்டிப்யூட்டட் லெட்ஜர் தொழிற்நுட்பம் ஆகும். ஒவ்வொரு வாகனத்திற்கும் ஏற்றது போல ஆன்லைனில் இந்த வாகனம் குறித்த தகவல்களை பதிந்து வைத்தால் அது காலத்திற்கும் அழியாமல் இருகு்கும்.

இதில் வாகனத்தின் ரெக்கார்டுகளை பராமரித்தால் அந்த வாகனம் குறித்த தகவல்கள் ஒளிவு மறைவு இல்லாமல் மாற்ற முடியாத அளவிற்கு நம்பதகன்மை வாயந்த்தாகவும், அதே நேரம் அதன் வரலாறு குறித்த தகவல்களையும் பெற முடியும். இந்த தொழிற்நுட்பம் 5 வகையில் ஆட்டோமொபைல் துறைக்கு உதவக்கூடும்.

blockchain Technology in automobile

சப்ளை செயின் தகவல்கள்

ஒரு வாகனத்தில் உள்ள உதிரி பாகங்கள் எல்லாம் எப்படி செய்யப்பட்டன. அதில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்ன, அந்த பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது. உதிரி பாகங்களின் நம்பகதன்மை என்ன என்ற அனைத்து தகவல்களையும் இந்த பிளாக் செயின் மூலம் சேமிக்க முடியும். இதனால் எதிர்காலத்தில் இது குறித்த தகவல்களை சிறப்பாக கையாள முடியும்.

வாகன வரலாறுகள்

வாகனத்தின் தயாரிப்பு குறித்த தகவல்கள் போது வாகனம் முதலில் யாரால் எங்கு வாங்கப்பட்டது. பின்னர் அது செகண்ட் ஹேண்ட் மார்கெட்டிற்கு எப்பொழது வந்தது. என்ன விலைக்கு செண்ட் ஹேண்ட் மார்கெட்டில் வாங்கப்பட்டது. அப்பொழுது என்ன கண்டிஷனில் கார் இருந்தது, வாகனத்தில் செய்யப்பட்ட ரிப்பேர் உள்ளிட்ட வாகனத்தின் வரலாறு குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் சேமிக்க முடியும். இதனால் நம்பதன்மையுடன் கார் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டிற்கு செல்லும்.

blockchain Technology in automobile

மொபிலிட்டி சர்வீசஸ்

வாகனத்தை வைத்து சர்வீஸ் தொழிலில் இருப்பவர்களுக்கும் இந்த தொழிற்நுட்பம் உதவியாக இருக்கும். குறிப்பாக ரைடுகளை பகிரும் வகையில் அல்லது வாகன வாடகை போன்ற தொழிலில் இருப்பவர்கள் கார் குறித்த விரிவான தகவல்களை சேமிக்க இந்த பிளாக் செயின் மிக பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமல்ல இதை வைத்து ரியல் டைமில் பயன்பாடு குறித்த தகவல்களையும் அப்டேட் செய்ய முடியும்.

திரும்ப அழைக்கும் திட்டம்

சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களை தயாரிக்கும் போது அதில் இருக்கும் பிரச்சனையை கண்டறியாமல் பின்னர் கண்டறிவார்கள். இதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்களை கண்டறிந்து அவற்றை திரும்ப அழைப்பது கடினமான காரியமாக இருக்கிறது. இந்த பிளாக் செயின் தொழிற்நுட்பத்தால் வாகனத்தை சுலபமாக கண்டறிந்து அவர்களை திரும்ப அழைத்து அவர்களுக்கு தேவையான அப்டேட்டை செய்ய முடியும்.

வாகன ஃபைனான்ஸ்

வாகனங்கள் இன்று பெறும்பாலும் ஃபைனான்ஸ் மூலம் பெறப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஃபைனான்ஸில் சரியில்லாத காரை நல்ல கார் என ஏமாற்றி ஃபைனான்ஸ் பெறும் பிரச்சனை இருக்கிறது. வாகனத்தின் தகவல்கள் எல்லாம் பிளாக் செயினில் இருந்தால் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எதிர்காலத்தில் ஃபைனான்ஸ் பெற பிளாக் செயின் தொழிற்நுட்பம் அவசியம் ஆக்கப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிளாக் செயின் தொழிழற்நுட்பம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஆட்டோமொபைல் துறைக்கு பிளாக் செயின் மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் பல்வேறு விதமான ஏமாற்றுவேலைகளை தடுக்க முடியும். எதிர்காலத்தில் இது மிக அவசியமான தொழிற்நுட்பமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 5, 2025, 23:15 [IST]
English summary
Blockchain technology in automobile industry explained
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X