சிங்கப்பூரே தோற்றுப்போகும்! பெங்களூரு பஸ்களில் வரப்போகும் செம அப்டேட்!

பெண்கள் மற்றம் உயரம் குறைவாக இருப்பவர்களின் வசதிக்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்படும் பஸ்களின் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வர பிஎம்டிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி பல்வேற விதமான அப்டேட்கள் அரசு பஸ்களில் செய்யப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெங்களூரு நகரில் அரசு பஸ்களை தினமும் லட்சகணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பிஎம்டிசி நிர்வாகம் எலெக்ட்ரிக் பஸ்களையும் இயக்கி வருகிறது. இந்நிலையில் இந்த பஸ்களை பயன்படுத்துவதில் தற்போது பயணிகள் சில பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்சனைகளை எல்லாம் போக்கி அதன் வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

bmtc bus update

அதன்படி பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்பவர்கள் படிப்பதற்கான கம்பிகள் உயரத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பிகளை பிடிப்பதற்கு சிரமப்படுகின்றனர். உயரமாக இருப்பவர்கள் மட்டுமே எளிதாக பிடிக்க முடியும் வகையில் உள்ளது. இதனால் உயரம் குறைவாக இருப்பவர்கள்கூட இந்த கம்பியை பிடிக்கும் வகையில் அதன் வடிவமப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பிஎம்டிசி நிர்வாகம் அதன் பஸ்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ், ஸ்விட்ச் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களிடம் இதன் ஹேண்டில்களை எளிதாக பிடிக்கும் வகையில் உயரத்தை குறைத்து வைக்க கோரியுள்ளது. தோலில் பையுடன் உயரம் குறைவாக இருப்பவர்கள் கூட இனி கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களில் பயணம் செய்ய முடியும்.

BMTC Bus Update

மேலும் புதிதாக தயாரிப்படும் பஸ்களை எல்லாம் அல்ட்ரா லோஃப்ளோர் பஸ்களாக உருவாக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் எளிதாக பஸ்களில் ஏற இறங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல மேலும் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

தற்போது உள்ள பஸ்களில் தானாக மூடிக்கொள்ளும் வகையில் டோர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை வெளியில் இருந்து திறக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதனால் வெளிபக்கம் ஒரு பட்டன் வைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கூட்ட நெரிசல் மிகுந்த சாலைகளில் இந்த பட்டனை அழுத்தி மக்கள் வெளியில் இருந்து பஸ் கதவுகளை திறந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயங்கி வரும் 5000 பஸ்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த முடியும். பஸ்களுக்குள்ளே பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பிக்பாக்கெட், திருட்டு போன்ற விஷயங்களை தடுக்க முடியும் என்பதற்காக அதை அரசு செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாடுகளில் இயங்கும் பஸ்களில் இருப்பது போலஇந்த பஸ்களில் வசதியை கொண்டு வர தற்போது பிஎம்டிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது இந்தியா பொது போக்குவரத்தில் எந்தளவிற்கு முன்னேறுகிறது என்பதை காட்டுகிறது. நிச்சயம் இந்த மாற்றங்கள் மக்களுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்த தரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, June 30, 2025, 11:50 [IST]
English summary
Bmtc bus update women safety measures coming in july 2025
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+