பிஎம்டபிள்யூ 1 சீரீஸ் கார் டீசர் வீடியோவில் சச்சின்

அடுத்த மாதம் 3ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காரை பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக எடுக்கப்பட்ட டீசர் வீடியோவில் சச்சின் டெண்டுல்கர் தோன்றியிருக்கிறார்.

பிஎம்டபிள்யூவின் தீவிர ரசிகராக மட்டுமில்லாமல், விளம்பர தூதராகவும் இருந்து வரும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சென்னையை சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அர்மான் இப்ராஹிமும் இந்த வீடியோவில் தோன்றியுள்ளனர்.

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்களில் இருவரும் போட்டி போடுவது போன்று இந்த வீடியோ கிளிப் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்லைடரின் கடைசியில் அந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

 கடும் போட்டி

கடும் போட்டி

பென்ஸ் ஏ கிளாஸ் மற்றும் ஆடி க்யூ3 எஸ் ஆகிய கார்களால் அடுத்து இதே விலை ரகத்தில் வரும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காருக்கு சிறிது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளம்பரத்தை பிஎம்டபிள்யூ வெளியிட்டுள்ளது.

முன்பதிவு துவக்கம்

முன்பதிவு துவக்கம்

ஆடி க்யூ3 எஸ் வரவால் வாடிக்கையாளர்களின் கவனம் திசை திரும்பிவிடக்கூடாது என்பதற்காக பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் காருக்கு முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவையும் துவங்கிவிட்டது பிஎம்டபிள்யூ.

ஃப்ரீ... ஃப்ரீ... ஃப்ரீ...!!

ஃப்ரீ... ஃப்ரீ... ஃப்ரீ...!!

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒருங்கிணைந்த பராமரிப்பு திட்டத்தை பரிசாக அளிப்பதாகவும் பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

விலையில் சூட்சுமம்

விலையில் சூட்சுமம்

இந்த காரை பாகங்களாக இறக்குமதி செய்து சென்னையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளதால், பென்ஸ் ஏ கிளாஸ், ஆடி க்யூ3 எஸ் உள்ளிட்ட கார்களுக்கு சவால் தரும் வகையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

138 பிஎஸ் பவரையும், 220 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 145 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இரண்டிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

வீடியோ இணைப்பு

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் கார்களுடன் போட்டி போடும் வகையில் சித்தரித்து எடுக்கப்பட்ட சச்சின், டெண்டுல்கரும், அர்மான் இப்ராஹீமும் தோன்றும் டீசர் வீடியோ.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2013, 12:36 [IST]
English summary
BMW 1 Series is gearing up to launch in India on September 3. Step-in to check-out a video of the cricketing legend Sachin Tendulkar smokin' the BMW 1 series.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+