மலை உச்சியில் சேற்றில் சிக்கிக்கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்!! போகவே கூடாத பகுதி!

இந்தியாவின் மிக அழகான பகுதிகளை கொண்ட மாநிலங்களுள் ஹிமாச்சல பிரதேசமும் ஒன்று. குறிப்பாக கார்களில் அல்லது பைக்குகளில் லாங் ட்ரிப் செல்வதற்கு ஏற்ற இடங்கள் இந்த மாநிலத்தில் அதிகளவில் உள்ளன.

மலை உச்சியில் சேற்றில் சிக்கிக்கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்!! போகவே கூடாத பகுதி!

அதிலும், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்கு வாகன ஓட்டிகள் அவ்வப்போது வந்து கொண்டும், திரும்பி சென்று கொண்டிருக்கும் இருப்பர். கொரோனா இரண்டாவது அலையால் கடந்த மாதங்களில் வீட்டில் முடங்கி இருந்ததால் தற்போது இந்த பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது.

மலை உச்சியில் சேற்றில் சிக்கிக்கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்!! போகவே கூடாத பகுதி!

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு இப்போதும் அழகாக, இயற்கை மிகுந்த இடமாக இருப்பதற்கு காரணம் அந்த பகுதிக்கு செல்லும் சாலை. இந்த பள்ளத்தாக்கிற்கு செல்ல ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது என கூறப்படுகிறது. சாலை என்று சொல்வதை விட மலைப்பாதை என்று தான் சொல்ல வேண்டும்.

மலை உச்சியில் சேற்றில் சிக்கிக்கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்!! போகவே கூடாத பகுதி!

அந்த அளவிற்கு வெயில் அவ்வளவாக படாத பகுதி என்பதால், இந்த பாதை எப்போதுமே சேறு சகதிகள் மிகுந்ததாக காணப்படுகிறது. இதனாலேயே பல வாகன ஓட்டிகள், இந்த சாலையில் எவ்வாறு செல்வது என்று திரும்பி சென்று விடுகின்றனர்.

மலை உச்சியில் சேற்றில் சிக்கிக்கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்!! போகவே கூடாத பகுதி!

ஆனால் சிலரோ தைரியமாக அந்த பாதையிலேயே பயணிக்கின்றனர். அவ்வாறு சேறு, சகதியை பொருட்படுத்தாமல் சென்று, சேற்றில் சிக்கி கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ 1250 ஜிஎஸ் பைக்கை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

மலை உச்சியில் சேற்றில் சிக்கிக்கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்!! போகவே கூடாத பகுதி!

இந்த பிஎம்டபிள்யூ பைக் இவ்வாறான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் தான். இருப்பினும் அதன் திறன்களையும் சோதிக்கும் அளவிற்கு இந்த பள்ளத்தாக்கு பாதை இருந்துள்ளது.

ஷாண்டோனில் நாக் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள மேலுள்ள வீடியோவில் இந்த பிஎம்டபிள்யூ 1250ஜிஎஸ் பைக் எவ்வாறு சிக்கி கொண்டுள்ளது, அதற்கு எத்தனை பேரது உதவிகள் தேவைப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

மலை உச்சியில் சேற்றில் சிக்கிக்கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்!! போகவே கூடாத பகுதி!

இந்த பிஎம்டபிள்யூ அட்வென்ச்சர் பைக் தோற்றத்தில் மிக பெரியது (சிலருக்கு வீடியோவில் சற்று சிறியதாக தெரியலாம்). இதனாலேயே இந்த பைக்கின் எடையும் அதிகம். இந்த சேற்றில் பெரியளவில் சிக்கி கொள்ளததால் சிலர் தள்ளியவுடனே (அப்போது கூட நான்கு பேர் தேவைப்பட்டுள்ளனர்) பைக் நகர்ந்துவிட்டது.

மலை உச்சியில் சேற்றில் சிக்கிக்கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்!! போகவே கூடாத பகுதி!

அதுவே நன்கு ஆழமாக சிக்கியிருந்தால் மற்ற வாகனங்களின் உதவி தேவைப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு எடை கொண்டது இந்த பிஎம்டபிள்யூ பைக். நல்ல வேளையாக பாதையின் ஓரத்தில் ஓட்டுனர் பைக்கை கொண்டுவந்துள்ளார். ஏனெனில் பாதையின் நடு பகுதியில் தான் சேறு அதிகமாக உள்ளதை வீடியோவில் பார்க்கலாம்.

மலை உச்சியில் சேற்றில் சிக்கிக்கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்!! போகவே கூடாத பகுதி!

வெறும் 2:19 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோவை காட்சிப்படுத்தி கொண்டிருக்கும்போதே இரு கார்கள் சேற்றில் சிக்குவதை பார்க்க முடிகிறது. முதலில் சிக்கிய மாருதி காரின் எடை குறைவு என்பதால், அது எளிதாக மீண்டு வந்துவிட்டது.

மலை உச்சியில் சேற்றில் சிக்கிக்கொண்ட விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்!! போகவே கூடாத பகுதி!

ஆனால் அதன்பின் சிக்கிய ஹோண்டா காரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதனால் இவ்வாறான சேற்றில் சிக்கி கொள்ள நேர்ந்தால், வாகனத்தின் எடை தான் முக்கியமானது. சுமைகளை நீக்கி, எந்த அளவிற்கு வாகனத்தின் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்களோ அந்த அளவிற்கு வேகமாக மீண்டு வரலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BMW 1250 GS gets royally stuck in Spiti Needs 4 bikers to pull it out [Video].
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X