இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சாதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள்..

கொரோனா அச்சம் காரணமாக பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். இந்தசூழ்நிலையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் திருட்டு கும்பல் விலையுயர்ந்த பொருட்களை களவாடி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

கொரோனா அச்சம் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் தங்களின் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றன. வைரசிடம் இருந்து காக்கும் நோக்கமாக இந்த அறிவிப்பை ஒவ்வொரு நாடும் அதன் மக்களுக்கு வழங்கி வருகின்றது. இதற்காக ஊரடங்கு உத்தரவையும் அவை பிறப்பித்து வருகின்றது. இதே நிலைதான் தற்போது இந்தியாவிலும் நிலவி வருகின்றது.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

இங்கு தேசிய ஊரடங்கு உத்தரவு வருகின்ற 14ம் தேதி அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், கொரோனாவின் அதிதீவிரமான பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. ஆனால், அரசு தரப்பில் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியிடப்படவில்லை.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

மேலும், அண்மையில்கூட தேசிய ஊரடங்கை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அரசின் இந்த கூற்றுக்கும் எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. இதனால், மக்கள் அனைவரும் இன்னும் சில நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதமாக பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

குறிப்பாக, ஆள் அரவமற்ற இடங்களைத் தேடி பிடிக்கும் அந்த சமூக விரோத கும்பல் திருட்டு மற்றும் கொள்ளை போன்ற அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையிலான ஓர் சம்பவம்தான் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

இந்த கொள்ளை கும்பல் மிக விலையுயர்ந்த பைக்கான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி310ஆர் பைக்கை களவாடிச் சன்றுள்ளது. இந்த பைக் இந்தியாவில் அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதைதான் பெங்களூருவைச் சேர்ந்த சூரஜ் கும்பர் என்ற இளைஞர் சமீபத்தில் வாங்கியிருந்தார்.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

தற்போது, தேசிய ஊரடங்கு நாடு முழுவதும் நிலவி வருவதன் காரணத்தால் சூரஜ் வீட்டை வெளியேறமால், தனது அடுக்குமாடி குடியிருப்பிலேயே தங்கியுள்ளார். மேலும், பைக்கை பாதுகாப்பாக குடியிருப்பின் பார்க்கிங் பகுதியிலேயே நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து மிக நீண்ட நாட்களாக, அதாவது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் வெளியே வருவதை அவர் முற்றிலுமாக தவிர்த்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ பைக்கை மிக சதூர்யமாக கையாண்டு திருடிச் சென்றுள்ளனர்.

இதனையறியாமல் சூரஜ் தனது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளார். பின்னர், கடந்த 1ம் தேதி அன்று வெளியே வந்த அவருக்கு பெருத்த அதிர்ச்சியாக, பைக் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

அவர், கடைசியாக கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி அன்றே அந்த பைக்கை பார்க்கிங்கில் பார்த்துள்ளார். ஆகையால், காவல்நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த மார்ச் 28ல் இருந்து ஏப்ரல் 1ம் தேதி ஆகிய தேதிகளுக்கு இப்பட்ட நாட்களுக்கு உள்ளாகவே தனது பைக் திருடப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

பைக் திருட்டுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் KA-05-KP-5315 என்ற பதிவெண் கொண்ட பிஎம்டபிள்யூ பைக்கைத் தேடி வருகின்றனர்.

முக்கியமாக சூரஜ் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியான சிஹேஹல்லியின் சம்ருத்தி லேயவுட்டில் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

சூரஜின் பிஎம்டபிள்யூ பைக் பேசிக் மாடல் என்பதால் அதில் ஜிபிஎஸ் அம்சம் இல்லை. இதனாலயே தற்போது அந்த பைக்கை கண்டுபிடிப்பது மிக சவாலானதாக மாறியிருக்கின்றது.

மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் காவலர் வசதி மற்றும் சிசிடிவி கேமிராக்களும் பொருத்தப்படவில்லை. ஆகையால், திருடர்களை கண்டுபிடிப்பதில் சற்றே தொய்வு ஏற்பட்டுள்ளது.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அந்த பைக்கக் கண்டுபிடிப்பதில் போலீஸார் அதிக சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இருப்பினும், விடா முயற்சியாக கடுகோடி காவல்நிலைய போலீஸார், சூரஜின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சுற்றியிருக்கும் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சிசிடிவி கேமிராக்களைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சதமாக்கும் விஷ கிருமிகள்.. கொரோனா வைரசைவிட கொடியவர்கள் இவர்..

உலகமே வாழ்வா..? சாவா..? என்ற போராட்டத்தில் இருக்க.. ஒரு சில விஷமிகள் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, இம்மாதிரியான சூழ்நிலையில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் மனித நேயத்துடன் உதவி செய்து கொண்டால் மட்டும் கொரோனா போன்ற எம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். இதையறியாமல் ஒரு சிலர் அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
BMW Bike Looted In Bengaluru Unknown Miscreants Took Advantage Of The Lockdown. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X