எதிரிக்கு கூட இப்படி நடக்க கூடாது - பிசியான சாலையில் காலை வாரிய பிஎம்டபிள்யூ கார்!!

எவ்வளவு கோடியில் காரை வாங்கினாலும், அதற்கும் அவ்வப்போது எரிபொருள் கொடுக்க வேண்டும் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. கோடி ரூபாயில் வாங்கிய கார் என்பதால், எரிபொருள் தீர்ந்த போதிலும் சில காலத்திற்கு இலவசமாக ஒன்றும் இயங்க போவதில்லை. பொதுவாகவே, கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் தங்களது கார்களில் எப்போதும் முறையாக பெட்ரோல்/ டீசலை இருப்பில் வைத்திருப்பார்கள். ஆனால், இங்கு ஒரு பி.எம்.டபிள்யூ (BMW) கார் உரிமையாளர் எரிபொருள் தீர்ந்து போனதால், நடுரோட்டில் பெரிய சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார். என்ன நடந்தது? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

காரில் பிசியான சாலையில் சென்றுக் கொண்டிருக்கும்போது எரிபொருள் தீர்ந்தால் அதைவிட வெறுப்பான விஷயம் எதுவும் இல்லை. ஏனெனில், அந்த பரபரப்பான போக்குவரத்து நேரத்தில் ஒரு எரிபொருள் நிலையத்தை கண்டறிந்து, காரை மெதுவாக ஓரங்கட்டி அங்கு எரிபொருளை நிரப்புவதற்குள் போதும் போதுமென ஆகிவிடும். அதுமட்டுமின்றி, எரிபொருள் நிலையத்தில் வரிசையில் வேறு நிற்க வேண்டியதாக இருக்கும்.

car fined for obstructing traffic

சாதாரணமான விலை குறைவான கார்களுக்கே அப்படி என்றால், சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ கார் நடு வழியில் எரிபொருள் இல்லாமல் நிற்பது எவரொருவருக்கும் சிரமமான விஷயமாகும். ஏனெனில், கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்தை பரபரப்பான சாலையில் ஓரங்கட்ட வேண்டியதாக இருக்கும். காரை ஓரங்கட்டுவதற்குள் முழு எரிபொருளும் தீர்ந்துவிட்டால், உங்களுக்கு அது மோசமான நாளாக அமைந்துவிடும்.

ஆனால், தற்போது பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் நல்லவேளையாக அந்த பிஎம்டபிள்யூ காரை அதன் டிரைவரால் சாலையின் ஓரத்திற்கு கொண்டு செல்ல முடிந்துள்ளது. அப்படி இருந்தும், வாகனங்கள் அதிகம் செல்லும் பரபரப்பான சாலை என்பதால், போக்குவரத்தை இந்த பிஎம்டபிள்யூ கார் பெரிதும் பாதித்துள்ளது. அதைவிட முக்கியமாக, மேம்பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த போது இந்த பிஎம்டபிள்யூ கார் எரிபொருள் இல்லாமல் நின்றுள்ளது.

இதனால், வேறு வழியின்றி பாலத்தின் ஓரத்தில் காரை டிரைவர் ஓரங்கட்டியுள்ளார். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக பெங்களூரின் வடகிழக்கு பிரிவு போக்குவரத்து போலீசார் இந்த பிஎம்டபிள்யூ கார் உரிமையாளருக்கு அபராதம் விதித்துள்ளனர். பெங்களூரின் ஹெப்பால் என்கிற பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் எரிபொருள் இல்லாமல் நடுவழியில் நின்றது, பிஎம்டபிள்யூ இசட்4 என்கிற லக்சரி கார் ஆகும்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் வெள்ளை நிறத்திலான அந்த பிஎம்டபிள்யூ இசட்4 காரை காணலாம். இந்த காருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்கள் இல்லை. காரில் எரிபொருள் அளவை டிரைவர் முறையாக சரிப் பார்க்காததால் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இப்போது உங்களில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம், அதாவது எரிபொருள் இல்லாமல் ஒரு வாகனம் சாலையில் நின்றால் அதற்கு போலீசாரால் அபராதம் விதிக்க முடியுமா?

இதற்கு பதில் என்னவென்றால், முடியும். இந்திய மோட்டார் வாகன சட்டம் பிரிவு 283இன் கீழ் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் ஆபத்து விளைக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். மோட்டார் வாகன சட்டத்தின்படி, இவ்வாறான செயல்களில் ஈடுப்படும்/ ஈடுப்பட நேரிடும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.500இல் அதிகப்பட்சமாக ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்கப்படுகிறது.

தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு கூட போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. டயர் பஞ்சர் உள்ளிட்ட சில காரணங்களினால் வாகனம் சாலையில் நிற்பதற்கு அபராதத்தில் இருந்து விலக்கு உள்ளது. ஆனால், அந்த பிரச்சனையை முடிந்தவரையில் விரைவாக சரி செய்ய வேண்டும். அத்தகைய பழுதுகளை சாலையோரத்தில் வைத்து சரி பார்ப்பதற்கு தேவையான அவசரகால கருவிகள் உங்களது வாகனத்தில் இல்லையென்றாலும் போலீசார் அபராதம் விதிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு வாகனமாக இருந்தாலும், அதில் இருக்கும் எரிபொருள் அளவை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது. அதுவும் சென்னை, பெங்களூர் போன்ற பிசியான மாநகரங்களில் வசிப்பவர்கள் இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். வாகனங்களுக்கு எரிபொருளை சிறுக, சிறுக கொடுக்காமல், முடிந்தவரையில் அதிகமாக நிரப்புவது இவ்வாறான தேவையற்ற இன்னல்களை தவிர்க்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 10:57 [IST]
English summary
Bmw car fined for obstructing traffic due to runs out of fuel check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+