காரின் கலரை அடிக்கடி மாற்றி விளையாடலாம்!! பி.எம்.டபிள்யூ அடுத்த லெவலுக்கு போயிடுச்சு!

பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்று பொது இடத்தில் சில வினாடிகளிலேயே தனது வெளிப்பக்க பெயிண்ட் நிறத்தை மாற்றம் செய்து கூடியிருந்த பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இது எவ்வாறு சாத்தியம்? எந்தவொரு காரின் நிறத்தையும் இவ்வாறு மாற்ற முடியுமா? என்ற கேள்விகளுக்கான பதில்களாக இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ கார்கள் உலகம் முழுவதும் பரவி காணப்படுவதற்கு முக்கிய காரணம், பிஎம்டபிள்யூ கார்களில் அவ்வப்போது புதிய புதிய மாடர்ன் வசதிகள் அறிமுகப்படுத்த்தப்படும் என்பதாகும். இந்த வகையில் மற்றொரு புதிய வசதியாக, 'ஐ.எக்ஸ் ஃப்ளோ'-ஐ பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

bmw car showing off ix flow

ஐ.எக்ஸ் ஃப்ளோ வசதியின் மூலமாக பிஎம்டபிள்யூ கார்களின் நிறத்தை வெள்ளை, கருப்பு மற்றும் கிரே நிறங்களில் மாற்றி கொள்ளலாமாம். கேட்பதற்கே இது ஆச்சரியமாக உள்ளது அல்லவா... இணையத்தில் இதனை வெளிக்காட்டும் வீடியோ நம்மை மேலும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த வீடியோவில், வெள்ளை நிறத்தில் இருந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று அடுத்த சில வினாடிகளிலேயே கிரே நிறத்திற்கு மாறியுள்ளது.

இதனை, அருகில் இருந்தவர்கள் பிரம்மிப்பில் ஆச்சரியமாக பார்ப்பதையும் கீழே பதிவிடப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் காணலாம். ஆனால் இந்த வீடியோவை பிஎம்டபிள்யூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம். தி பிஸ்னஸ் மேக்னெட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாக கூட இருக்கலாம். இப்போதுதான் ஏஐ என பல மென்பொருள்கள் உள்ளதே...

எடிட் செய்யப்பட்டதோ அல்லது உண்மையோ... ஆக மொத்தத்தில் இந்த வீடியோ பார்வையாளர்கள் பலரை பெற்றுவிட்டது. மேலும், இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோரின் கமெண்ட், பிஎம்டபிள்யூ நிறுவனம் மேலும் சில நிறங்களை சேர்க்க வேண்டும் என்பதாகவே உள்ளது. மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோ உண்மையா என்பது தெரியாது, ஆனால் பிஎம்டபிள்யூவின் ஐ.எக்ஸ் ஃப்ளோ வசதி உண்மையே.

ஐ.எக்ஸ் ஃப்ளோ வசதி குறித்த விபரங்களை நீங்கள் இப்போதும் கூட பிஎம்டபிள்யூவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் காணலாம். இந்த தொழிற்நுட்ப வசதியானது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பம் மற்றும் உடை & பயணத்திற்கு ஏற்ப காரின் நிறத்தை மாற்றி கொள்ளும் நோக்கில் கண்டுப்பிடிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

bmw car showing off ix flow

இவ்வாறு காரின் நிறத்தை மாற்ற வேண்டுமெனில், அந்த கார் எலக்ட்ரோபோரெடிக் படலத்தால் கோட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இந்த எலக்ட்ரோபோரெடிக் படலத்தில் மைக்ரோ கேப்சூல்கள் அடங்கியுள்ளன. இந்த கேப்சூல்கள், வழங்கப்பட்ட கட்டளைக்கு ஏற்ப நிறத்தை மாற்றி கொள்கின்றன. ஒவ்வொரு கேப்சூல்களும் நிறம் மாறுவதால், ஒட்டு மொத்த வாகனமும் நிறம் மாறுவதுபோல் நமக்கு தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறான மாடர்ன் வசதிகள் எதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்பது நாம் எதிர்பார்த்தது தான். ஆக, நாம் மெல்ல மெல்ல புதியதொரு ஆட்டோமொபைல் உலகத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கும். தற்போதைக்கு பிஎம்டபிள்யூ என மிகவும் சில நிறுவனங்கள் மட்டுமே இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளன. ஆனால் வரும்காலத்தில் வேறு சில நிறுவனங்களது கார்களும் இவ்வாறு பரிணாம வளர்ச்சியை காணும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, July 13, 2023, 11:14 [IST]
English summary
Bmw car showing off ix flow feature goes viral
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+