18 சக்கரங்கள், ஆனா ஸீரோ எமிசன்... எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகப்படுத்திய பிஎம்டபிள்யூ!

By Saravana

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜெர்மனியில் உள்ள தனது ஆலையில் உதிரிபாகங்கள் போக்குவரத்திற்காக புதிய எலக்ட்ரிக் டிரக் ஒன்றை பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய டிரக் மூலம் வாகன புகையால் ஏற்படும் தீங்கை வெகுவாக குறைக்கும் முயற்சியில் களமிறங்கியிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூட்டணி

கூட்டணி

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தெர்பெர்க் டிரக் தயாரிப்பு நிறுவனம், ஜெர்மனியை சேர்ந்த ஷெர்ம் என்ற சரக்கு போக்குவரத்து குழுமம் ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் இந்த புதிய எலக்ட்ரிக் டிரக்கை தனது ஆலையில் பயன்பாட்டுக்கு பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்துள்ளது.

ஹெவி டிரக்

ஹெவி டிரக்

18 சக்கரங்கள் கொண்ட இந்த எலக்ட்ரிக் டிரக் 40 டன் வரையில் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

உதிரிபாக போக்குவரத்து

உதிரிபாக போக்குவரத்து

ஜெர்மனியின் மூனிச் நகரிலுள்ள ஷெர்ம் லாஜிஸ்டிக் மையத்திலிருந்து பிஎம்டபிள்யூவின் மூனிச் ஆலைக்கு இந்த டிரக் மூலமாக ஸ்டீயரிங் சிஸ்டம், ஷாக் அப்சார்பர்கள் மற்றும் இதர உதிரிபாகங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. தினசரி 8 முறை இந்த டிரக் உதிரிபாகங்களை எடுத்துச் செல்கிறதாம்.

சூற்றுச்சூழல் நண்பன்

சூற்றுச்சூழல் நண்பன்

இந்த புதிய எலக்ட்ரிக் டிரக் மூலம் ஆண்டுக்கு 11.8 டன் அளவுக்கு கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டை தவிர்க்க முடியும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

சார்ஜ்

சார்ஜ்

இந்த டிரக்கின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 3 முதல் 4 மணிநேரம் பிடிக்கும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 99 கிமீ தூரம் வரை பயணிக்கிறதாம் இந்த பிரம்மாண்ட டிரக்.

ஸீரோ எமிசன்

ஸீரோ எமிசன்

டிரக் உள்ளிட்ட வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை பிற வாகனங்களைவிட அதிகம். இந்த நிலையில், முதல்முறையாக அதிக அளவில் சரக்கு கையாளும் முயற்சியில் ஓர் எலக்ட்ரிக் டிரக்கை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இது மிகவும் பெருமையான விஷயம் என்று பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவிக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
German luxury car maker BMW is hoping to address that with a new material transport truck. Like many of its brethren, the vehicle has 18 wheels and 40 tons of capacity, but it releases exactly zero carbon emissions into the atmosphere. Why? This big rig is fully electric.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X