2 டைம் சர்வீஸ் பண்ணதுக்கே ரூ.1.20 லட்சம் செலவா! சோஷியல் மீடியாவில் கதறிய பைக் உரிமையாளர்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பைக்குகளில் ஒன்று பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS). வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்றாலும் கூட, இதன் பராமரிப்பு செலவு அதிகம் என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், mysticriderprateek என்ற பக்கத்தில், Prateek chaturvedi என்பவர், தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வைரல் வீடியோவில், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கின் சர்வீசுக்காக ஆன செலவு குறித்து, பிரதீக் சதுர்வேதி பேசியுள்ளார்.

BMW G 310 GS Service Cost Rs 1 20 Lakh

இதன்படி பார்த்தால், பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கை 2 முறை சர்வீஸ் செய்ததற்காக மட்டும் ஒட்டுமொத்தமாக 1.20 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. 2 முறை சர்வீசுக்காக 1.20 லட்ச ரூபாய் என்பது உண்மையிலேயே மிகவும் அதிகமாக தொகையாகதான் கருதப்படுகிறது. இத்தனைக்கும் இது வெறும் 310 சிசி திறன் கொண்ட பைக் மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒரு சர்வீசுக்கு 48 ஆயிரம் ரூபாயும், மற்றொரு சர்வீசுக்கு 72 ஆயிரம் ரூபாயும் என ஒட்டுமொத்தமாக 2 சர்வீஸ்களுக்கு, 1.20 லட்ச ரூபாய் செலவாகியுள்ளதாக பிரதீக் சதுர்வேதி கூறியுள்ளார். பைக் சுமார் 50 ஆயிரம் மற்றும் 80 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்த பிறகு, சர்வீஸ் செய்ய கொடுத்தபோது, இவ்வளவு அதிகமான தொகை செலவானதாக பிரதீக் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

Prateek Chaturvedi

ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகமான கிலோ மீட்டர்கள் ஓட்டிய பிறகு, சர்வீஸ் செய்தபோது, ஒட்டுமொத்தமாக 1.20 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த 1.20 லட்ச ரூபாயில் லேபர் சார்ஜ் என்ற பெயரில் மட்டும் ஒட்டுமொத்தமாக 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஆரம்பத்தில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கை சர்வீஸ் செய்வதற்கு 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவானதாக பிரதீக் சதுர்வேதி கூறியுள்ளார். ஆனால் பைக் 50 ஆயிரம் கிலோ மீட்டர்களை கடந்த பிறகு, சர்வீஸ் செய்வதற்கான தொகை மிகவும் அதிகமாக உயர்ந்து விட்டது என்பது அவரது கருத்து.

பிரதீக் சதுர்வேதி இந்த வீடியோவை வெளியிட்ட பிறகு, அது வைரலாக பரவ தொடங்கி விட்டது. எனவே பிஎம்டபிள்யூ மோட்டோராட் (BMW Motorrad) நிறுவனத்தையும் இந்த வீடியோ சென்றடைந்துள்ளது. உடனடியாக அவர்கள் இந்த வீடியோவின் கீழேயே கமெண்ட் செக்ஸனில் தங்கள் தரப்பு நியாயத்தை தெரிவித்துள்ளனர்.

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் பதிவு செய்துள்ள கமெண்ட்டில்''உங்கள் பைக்கில் சமீபத்தில் செய்யப்பட்ட சர்வீஸ், வழக்கமான பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் சாதாரண சர்வீஸ் கிடையாது என்பதை தெளிவுபடுத்தி கொள்ள விரும்புகிறோம். பைக் சுமார் 76 ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஓடிய நிலையில், இக்னீஷியன் காயில், ரியர் பிரேக் டிஸ்க் போன்ற பாகங்களை எல்லாம் மாற்றியாக வேண்டிய சூழல் இருந்தது.

உங்கள் அனுமதிக்கு பிறகுதான், இந்த பணிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. என்னென்ன ரிப்பேர்களை செய்ய வேண்டும்? என்பதை எங்கள் மெக்கானிக்குகள் எப்போதும் வெளிப்படையாக தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, வாடிக்கையாளர்களின் அனுமதி பெற்ற பிறகே, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன'' என கூறப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பராமரிப்பு செலவு மிகவும் அதிகம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் தற்போது இந்தியாவில் விற்பனையிலேயே இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் ஜி 310 ஜிஎஸ் பைக்கின் விற்பனையை நிறுத்தி விட்டது. இதற்கு மாற்றாக புதிய பைக் ஒன்றை, பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 15, 2025, 14:50 [IST]
English summary
Bmw g 310 gs service cost rs 1 20 lakh viral video check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+