பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ்போர்ட் கூடாரம்: விலை ரூ.12,500
சாகசப் பயணம் அல்லது வாகனங்களில் வெளியூர் செல்பவர்களுக்கு பயன்படும் விதத்திலான புதிய கூடாரத்தை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்துள்ளது.
மிக எளிதாகவும், விரைவாகவும் அமைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய கூடாரத்தின் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

இன்ஸ்டன்ட் கூடாரம்
வெறும் 2 நிமிடத்தில் இந்த கூடாரத்தை விரும்பிய இடத்தில் அமைத்துவிட முடியும்.

கூடார சிறப்பு
ஃபைபர் கிளாஸ் மூலம் தயாரிக்கப்பட்ட தாங்கு தூண்கள் மற்றும் பாலியெஸ்டர் துணியில் தயாரிக்கப்பட்டிருப்பதால் இலகு எடை கொண்டதாக இருக்கிறது. ஒரு பையில் வைத்து எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

இடவசதி
220 x 150 x 110 செமீ அளவுக்கு உட்புறத்தில் இடவசதியை அளிக்கும். மேலும், இந்த கூடாரத்தின் மேற்பரப்பில் தண்ணீர் புகாத தடுப்பு வசதிக்காக பிரத்யேக கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. காற்று வருவதற்கு சிறிய ஜன்னலும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ஆர்டர்
பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ்போர்ட் கலெக்ஷன்ஸ் இணையதளத்தின் மூலமாகவும், குறிப்பிட்ட டீலர்கள் வாயிலாகவும் ஆர்டர் செய்து இந்த கூடாரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

விலை விபரம்
150 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.12,500) விலையில் இந்த கூடாரம் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








