ஒரு பக்கம் குத்தி மறு பக்கம் வந்திருச்சு... மணிக்கு 150 கிமீ போன பிஎம்டபிள்யூ காருக்கு ஏற்பட்ட கதியை பாருங்க..
அதீத வேகம் மிகவும் மோசமானது என்பதற்கு சான்றாக ஓர் சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. மித மிஞ்சிய வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி மிக மோசமான பின் விளைவுகளைச் சந்தித்து இருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக வேகத்தில் செல்லக் கூடிய திறன் கொண்ட கார் மாடல்களில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series) கார் மாடலும் ஒன்றாகும். இது ஓர் மிக சிறந்த சொகுசு கார் மாடலும் கூட. இதனால் மணிக்கு 250 கிமீ செல்ல முடியும்.

மேலும், இதனால் வெறும் 4.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். இத்தகைய சூப்பரான திறனை வெளியேற்றும் காரே மிகப் பெரிய விபத்தில் சிக்கி கார் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. கார் அதீத வேகத்தினாலேயே கட்டுப்பாட்டை இழந்திருக்கின்றது.
இதனாலேயே அது பெரும் விபத்தையும் சந்தித்து இருக்கின்றது. சாலையோரத்தில் அமைக்கப்படும் உலோக தடுப்பிலேயே அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி இருக்கின்றது. இதனால், காரின் முன் பக்கத்தில் நுழைந்த அந்த தடுப்பு கம்பி, காரின் பின் பக்கம் வாயிலாக கிழித்துக் கொண்டு வெளியே வந்திருக்கின்றது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறு சிறு காயங்களுடன் காரின் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கின்றார். நல்லவேளையாக, கார் விபத்தின்போது அதில் ஓட்டுநர் மட்டுமே இருந்திருக்கின்றார் என தெரிகின்றது. அவரே சிறு சிறு காயங்களுடன் தற்போது மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றார்.
சம்பவம் நடைபெற்ற இடம் பற்றிய துள்ளியமான விபரங்கள் வெளியாகவில்லை. ஆனால், வீடியோவில் இருக்கும் காட்சிகளை வைத்து பார்க்கையில் அது ஓர் எட்டு வழிச்சாலை என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது. வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதற்கு ஏற்ப நாட்டின் பல்வேறு பகுதிகளில் எட்டு வழி சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால், இங்கும் வேகக் கட்டுப்பாடுகள் உண்டு. இதை ஒரு சில வாகன ஓட்டிகள் கண்டுக் கொள்வதில்லை. இத்தகைய ஓர் வாகன ஓட்டியினாலேயே இந்த விபத்து சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. சமீப காலமாக இந்தியாவில் விபத்துச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. முறையாக சாலை விதிகளை கடைப்பிடிக்காததே இதற்கான காரணம் ஆகும்.
இதன் விளைவாக உலக அளவில் அதிகம் வாகன விபத்துகளைக் காணும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி இடத்தை பிடிக்கும் அவல நிலை ஏற்பட்டு இருக்கின்றது. சென்ற ஆண்டில் மட்டும் வாகனங்களினால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 1 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இறந்திருக்கின்றனர்.
இந்த எண்ணிக்கையினால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் என அனைத்து விபத்து குறைப்பு நடவடிக்கைகளும் பெரும் தோல்வியைச் சந்தித்து இருப்பதை வெளிக்காட்டும் வகையில் உள்ளது. அரசு, விபத்தையும், விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் போக்குவரத்து விதிமீறல்களையும் குறைக்கும் பொருட்டு வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதங்களை விதித்துக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னதாக 100 ரூபாயாக இருந்த அபராதக் கட்டணம் சில தற்போது 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, ட்ரிங்க் அண்ட் டிரைவிங்கிற்கு அதிகபட்சமாக ரூ. 10000 அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை குறையவில்லை. இதேபோல், விபத்தைக் குறைக்கும் விதமாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் தோல்வியைச் சந்தித்து இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








