டிரெய்லர் லாரி அடியில் சிக்கி பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக்கில் சென்ற இளம் விமானி உயிரழப்பு..!!
டிரெய்லர் லாரி அடியில் சிக்கி பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக்கில் சென்ற இளம் விமானி உயிரழப்பு..!!
மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில் பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக்கில் சென்ற ரைடர் ஒருவர் டிரெய்லர் லாரிக்கு அடியில் சிக்கி உயிரழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரழந்தவர் மஹாராஷ்டிராவின் பயன்தார் பகுதியை சேர்ந்த வருண் பம்ரோதியா அஹிர் என்றும், அவர் ஒரு இளம் விமானி என்பதும் தெரியவந்துள்ளது.

மனோர் என்ற பகுதிக்கு10 முதல் 15 பைக்கர்களுடன் இளைஞர் வருண் சென்றுள்ளார். அப்போது அவருடன் மற்றொரு பைக்கில் சென்ற பிரசாத் பட்டேல் என்பவரிடம் போலீசார் இந்த விபத்தை குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது, சதிவலி பாலம் வழியாக எல்லா பைக்கரும் சென்ற போது, முன்னே சென்றுக்கொண்டு இருந்த டிரெய்லர் லாரியை ஓவர்டேக் செய்ய வருண் முயன்றதாகவும், அப்போது இந்த விபத்து நடந்துள்ளதாகவும்பிரசாத் தெரிவித்தார்.

பல லேன் கொண்ட சாலையான அதில்,டிரெய்லர் லாரியின் பாதி பகுதியை வருண் தனது பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக்கில் அடைந்திருந்தார். அப்போது திடீரென டிரெய்லர் லாரி வருணின் லேனிற்கு நகர்ந்துள்ளது.
லாரி வேகமாக நகர்ந்ததால், அவரது பிஎம்டபுள்யூ ஆர்1200 ஜிஎஸ் பைக் டிரக்கின் பின்பகுதியில் மோதியது. அதில் ஏற்பட்ட விசையில் பைக் வருணுடன் லாரியில் பின்சக்கரத்திற்கு இழுத்து சென்றது.

சில நொடிகளில் நடந்துவிட்ட இந்த விபத்தால், வருணுடன் உடன் வந்த பைக் ரைடர்களும் நிலைகுலைந்து போய்விட்டனர். மேலும் அவர்கள் வருணை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் டிரெய்லர் லாரி ஓட்டுநர் வண்டியுடன் தப்பி சென்றுவிட்டார். படுகாயமடைந்த நிலையில் வருணை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Trending On DriveSpark Tamil:

இளம் விமானியான வருண், சிறந்த பைக் ரைடர் எனவும், துல்லியமாக சாலைகளின் பரப்பை அறிந்து அதற்கேற்றவாரு பைக் ரைடிங் செய்வதில் கில்லாடி எனவும் போலீசாரிடம் பிரசாத் பட்டேல் தெரிவித்துள்ளார்.
வருண் பம்ரோதியா அஹிரின் மரணத்தை குறித்து விசாரணை நடத்திய போலீசார், டிரெய்லர் லாரி ஓட்டுநருக்கு தனக்கு பின்னால் பைக் ரைடர் வருவது தெரியாமல், பிளைன்டு ஸ்பாட் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறுகின்றனர்.
Recommended Video


கனரக வாகனங்களை ஓட்டக்கூடிய ஓட்டுநர்களிடம் இந்த பிரச்சனை அதிகளவில் காணப்படுகிறது. அவர்களால் லாரிக்கு பின்னால் வரும் பைக் உட்பட காரையும் கூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் கனரக வாகனங்களை பைக் அல்லது காரில் ஓவர்டேக் செய்யும் போது, ஹாரனை ஓங்கி ஒலித்தபடியோ அல்லது முகப்பு விளக்குகளை இயக்கப்படியோ சிக்னல் கொடுங்கள்.

கூடுதலாக எப்போதும் பேருந்து, லாரி முதலான வாகனங்களுக்கும் உங்களது வாகனத்திற்கும் போதுமான இடைவெளியை பின்பற்ற வேண்டும். இது ஆபத்து ஏற்படாமலும் சுதாரித்துக்கொள்ள வழிவகுக்கும்.
கனரக வாகனங்களுக்கு இணையாக செல்லும் பழக்கத்தை மோட்டார் சைக்கிள் ரைடர்கள் தவிர்க்கவும். ஒவர்டேக் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளாமல், விரைவில் வாகனத்தை தாண்டி செல்வதும் நலம்.

பல்வேறு லேன் கொண்ட சாலைகளில் ஒவர்டேக் செய்து முடித்த பிறகு, மற்றொரு லேனிற்கு தேவையில்லாமல் செல்லாதீர்கள். அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும் போது கவனமாக செயல்படுவது மிக முக்கியம். குறிப்பாக பைக் ஓட்டுநர்கள் இதை கடைப்பிடிப்பது அவசியம்.

மும்பை - அகமதாபாத் சாலையில் நடைபெற்ற இந்த விபத்தில், அந்த டிரெய்லர் லாரி ஓட்டுநர் பின்னால் ஓவர்டேக் செய்து வரும் பைக்கை கவனித்து செயல்பட்டு இருந்தால், இளம் விமானியின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

எந்த பைக்கை பயன்படுத்துவதாக இருந்தாலும், பாதுகாப்பு என்பது நம்மிடம் தான் உள்ளது. அதை கருத்தில் கொண்டு சாலைகளில் செல்லும் போது செயலாற்றுங்கள். அப்போது ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications








