ராணுவ அதிகாரி கண்ணில் மிளகாய் பொடி தூவி ஆடம்பர காரை திருட முயன்ற திருடனின் திட்டத்தில் சொதப்பல்..!

Written By:

இராணுவ உயர் அதிகாரி வீட்டில் இருந்து பிஎம்டபுள்யூ எக்ஸ்5 எஸ்.யூ.வி காரை திருடி சென்ற ஒருவன், அப்போது ஏற்பட்ட சாலை போக்குவரத்தால் காவலர்களிடம் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான். 

ராணுவ அதிகாரி வீட்டில் ஆடம்பர காரை திருட முயன்ற திருடன்..!!

இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி பொறுப்பு வகிக்கும் பின்னாகி பானி, தனது பழைய மாடல் மாருதி ஜென் காரை விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார்.

ராணுவ அதிகாரி வீட்டில் ஆடம்பர காரை திருட முயன்ற திருடன்..!!

விளம்பரத்தில் இருந்த கைப்பேசி எண் மூலம் ஜிகார் பட்டேல் என்பவர், பின்னாகி பானியை தொடர்பு கொண்டு காரை வாங்க விருப்பும் தெரிவித்து டீல் பேசினார்.

இதை இறுதி செய்வதற்காக பின்னாகி பானி டெல்லி கண்டோமினன்ட் பகுதியில் தனது இல்லத்திற்கு ஜிகார் பட்டேல் அழைத்திருந்தார்.

ராணுவ அதிகாரி வீட்டில் ஆடம்பர காரை திருட முயன்ற திருடன்..!!

அப்போது அவரது இல்லத்திற்கு வந்த ஜிகார் பட்டேல், பிஎம்டபுள்யூ எக்ஸ் 5 கார் பார்க் செய்யப்பட்டு இருப்பதை கண்டு, அதை பின்னாகி பானி விற்பதற்கான முடிவில் இருக்கிறாரா என்று கேட்டார்.

ராணுவ அதிகாரி வீட்டில் ஆடம்பர காரை திருட முயன்ற திருடன்..!!

அதற்கு மறுப்பு தெரிவித்த பின்னாகியிடம், காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும் என்று ஜிகார் பட்டேல் கேட்டுள்ளார்.

அதற்கு பின்னாகி பானியும் சரி என்று கூறி, ஓட்டுவதற்காக டிரைவர் சீட்டில் அமர்ந்த போது, ஜிகார் பட்டேல் அவரது முகத்தில் எதிர்பாராத விதமாக மிளகாய் பொடியை தூவி விட்டு, பானியை கீழே தள்ளிவிட்டார்.

ராணுவ அதிகாரி வீட்டில் ஆடம்பர காரை திருட முயன்ற திருடன்..!!

இதற்கு பிறகு அவரை தள்ளி விட்டு ஜிகார் பட்டேல், பிஎம்டபுள்யூ எக்ஸ் 5 எஸ்.யூ.வி காரை வேகமாக ஓட்டி சென்று, பூட்டி இருந்த கேட்டுகளை பெயர்த்துக்கொண்டு சாலைக்கு விரைந்துள்ளார்.

ராணுவ அதிகாரி வீட்டில் ஆடம்பர காரை திருட முயன்ற திருடன்..!!

ஆனால் கண்டாமினெனட் பகுதியில் அப்போது ஏற்பட்ட கடுமையான டிராஃபிக் காரணமாக திருடன் ஜிகார் பட்டேலுக்கு காரை மேலும் இயக்க முடியாமல் போனது.

(இதற்கான முழு வீடியோவை கீழே பார்க்கலாம்...)

இதனால் பின்னாகி பானியின் பி.எம்.டபுள்யூ எக்ஸ் 5 எஸ்.யூ.வி காரை அங்கேயே விட்டுவிட்டு, அதை திருட முயன்ற ஜிகார் பட்டேல் டிராஃபிக்கின் நடுவில் தப்பி சென்று ஓடி மறைந்துவிட்டான்.

ராணுவ அதிகாரி வீட்டில் ஆடம்பர காரை திருட முயன்ற திருடன்..!!

அங்கே காவலுக்காக நிறுத்தப்பட்டு இருந்த ராணுவ வீரர்கள் இந்த காட்சியை கண்டு துப்பாகிகளுடன் காரை துரத்துக்கொண்டு பின்னே ஓட்டினர்.

இருந்தாலும் அவர்களால் காரை மட்டுமே திருப்பிக்கொண்டு வர முடிந்தது. தப்பிசென்ற ஜிகார் பட்டேலை கண்டுபிடிக்க முடியவில்லை.

ராணுவ அதிகாரி வீட்டில் ஆடம்பர காரை திருட முயன்ற திருடன்..!!

கண்ணில் மிளகாய் பொடி பட்ட ராணுவ உயர் அதிகாரி பின்னாகி பானி-க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரி வீட்டில் ஆடம்பர காரை திருட முயன்ற திருடன்..!!

மேலும் தப்பிசென்ற திருடனின் பெயர் ஜிகார் பட்டேல் தானா? எதற்காக ராணுவ அதிகாரி என்று தெரிந்திருந்தும் காரை திருட இங்கே வந்தான், என்ற ரீதியில் அப்பகுதி காவல் துறை விசாரணை இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: BMW X5 SUV Car Robbery gets Fails Because of Delhi Traffic. Click for the Details...
Please Wait while comments are loading...

Latest Photos