ஒன்னே கால் கோடி போச்சு! ஹோட்டலில் தலையில் துண்டை போட்ட தொழில் அதிபர்! பேரை கெடுத்து கொண்ட விஜய் பட நடிகை!
இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் சைடு பிஸ்னஸ் செய்து கொண்டுள்ளனர். எனவே அவர்களுக்கு விளையாட்டு மூலமும், திரைப்படங்களில் நடிப்பதன் மூலமாகவும் மட்டும் பணம் கிடைப்பதில்லை. கூடவே சைடு பிஸ்னஸ் மூலமாகவும் பணம் கொட்டுகிறது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்களுக்கு மிகவும் விருப்பமான சைடு பிஸ்னஸ் எதுவென்று கேட்டால், ஹோட்டல் (Hotel) என தயங்காமல் சொல்லலாம். அந்த அளவிற்கு நிறைய பேர் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். விராட் கோஹ்லி (Virat Kohli) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.
தமிழ் திரையுலகில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சூரி (Soori) கூட ஹோட்டல் நடத்தி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியும் (Shilpa Shetty) கூட ஹோட்டல் பிஸ்னஸில் ஈடுபட்டு கொண்டுள்ளார். இவர் விஜய்யின் (Vijay) குஷி படத்தில் மேக்கரினா பாடலுக்கு நடனம் ஆடியவர் ஆவார்.

ஷில்பா ஷெட்டியின் ஹோட்டல் மும்பை (Mumbai) நகரில் உள்ளது. அந்த ஹோட்டலில் தற்போது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தொழில் அதிபர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக ஷில்பா ஷெட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அங்கு என்ன நடந்தது? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
ரூஹன் கான் என்ற தொழில் அதிபர் சமீபத்தில், ஷில்பா ஷெட்டியின் ஹோட்டலுக்கு சென்றிருந்தார். அவர் பயணம் செய்தது பிஎம்டபிள்யூ இஸட்4 (BMW Z4) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 90.90 லட்ச ரூபாய் வருகிறது.

ஆன்-ரோடு விலை ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.15 கோடி ரூபாய் வரும். மிகவும் விலை உயர்ந்த இந்த காரில், 3.0 லிட்டர் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 335 பிஹெச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இப்படி விலை உயர்ந்த மற்றும் செயல்திறன் மிக்க பிஎம்டபிள்யூ இஸட்4 காரில், ஷில்பா ஷெட்டியின் ஹோட்டலுக்கு, ரூஹன் கான் சென்றிருந்தார். பொதுவாக ஹோட்டல்களில் வாலெட் சர்வீஸ் என்ற ஒரு சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இதன்படி ஹோட்டல் ஊழியரே, வாடிக்கையாளரின் காரை பார்க்கிங் செய்து விடுவார்.
எனவே பார்க்கிங் செய்வதற்காக வாடிக்கையாளர்கள் நேரத்தை செலவழித்து கொண்டிருக்க வேண்டியதில்லை. அத்துடன் நெரிசலில் இடத்தை தேடி அலைந்து மன உளைச்சலுக்கும் ஆளாக வேண்டியதில்லை. இந்த சேவை ஷில்பா ஷெட்டியின் ஹோட்டலிலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஏனெனில் அது ஒரு பிரீமியம் ஹோட்டல் ஆகும்.
இந்த சேவையின் கீழ், ஹோட்டல் வாடிக்கையாளரிடம் காரை வழங்கி விட்டு, ரூஹன் கான் உள்ளே சென்று விட்டார். ஆனால் அவர் திரும்பி வந்தபோது, பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரூஹன் கான், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது அவரது கார் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.
ரூஹன் கானின் காரை, ஹோட்டல் ஊழியர் பார்க்கிங் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். அதற்கு அடுத்த சில நிமிடங்களில் ஜீப் காம்பஸ் (Jeep Compass) காரில் 2 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்களிடம் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இருந்தன. இதன் மூலமாக ரூஹன் கானின் காரை அவர்கள் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து ரூஹன் கான் தற்போது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மிகவும் பிரீமியமான ஒரு ஹோட்டலில் விலை உயர்ந்த கார் திருடப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் நடிகை ஷில்பா ஷெட்டியின் ஹோட்டல் என்பதால், அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோட்டல்களில் இனி வரும் காலங்களில் இது போன்ற வாகன திருட்டு சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. சம்பந்தப்பட்ட ஹோட்டல்களின் நிர்வாகங்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








