கேரளாவின் பெரும் பணக்காரரே இந்த காரை செகண்ட் ஹேண்ட்லதான் வாங்கி இருக்காரா! ரோல்ஸ் ராய்ஸ்லாம் வச்சுருக்காரு!

கேரளாவின் மிக முக்கியமான செல்வந்தர்களில் ஒருவரே பாபி செம்மனூர். இவர் ஓர் ஆடம்பர கார் விரும்பி ஆவார். இதற்கு சான்றாக அவரிடத்தில் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார் மாடல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் விற்பனையிலேயே இல்லாத கார் மாடல்கள் சிலவும் அவரிடத்தில் உள்ளன. அந்தவகையில், ஃபோர்டு எஃப்650 பிக்-அப் டிரக் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பாபி செம்மனூரின் படம் அடங்கிய அந்த கார் கேரளா சாலையில் வலம் வரும் வீடியோ இப்போதும் இணையத்தில் உள்ளது. இது ஓர் பிரமாண்ட தோற்றம் கொண்ட பிக்-அப் டிரக் ஆகும்.

இதன் அருகில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் நின்றாலும் குட்டியாகவே தெரியும். இத்தகைய பெரிய உருவம் கொண்ட காரை வைத்திருக்கும் பாபி செம்மனூரே தற்போது மேலும் ஆடம்பர காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார்.

Bobby chemmanur acquires land rover defender

ஏற்கனவே, அவரிடத்தில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் பயன்பாட்டில் இருக்கின்றது. ஆனால், கொஞ்சம் பழைய மாடல் ஆகும். இந்த நிலையிலேயே மற்றுமொரு லேண்ட் ரோவர் டிஃபென்டரை வாங்கி இருக்கின்றார். இது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 ஆகும். செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டிலேயே அவர் அந்த காரை வாங்கி இருக்கின்றார்.

ராயல் டிரைவ் எனும் யூஸ்டு கார் டீலர் வாயிலாகவே இந்த காரை அவர் வாங்கி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை அவர் எவ்வளவு ரூபாய் செலவிட்டு வாங்கினார் என்பது தெரியவில்லை. கேரளாவின் மாபெரும் பணக்காரர் ஏன் இப்படி செகண்ட் ஹேண்டில் இந்த காரை வாங்கினார் என்கிற விபரங்களும் வெளியாகவில்லை.

2.0 லிட்டர் மோட்டார் கொண்ட எச்எஸ்இ மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 221 kW பவர் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 191 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 7.4 வினாடிகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டவும் முடியும்.

இத்தகைய அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதே லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 ஆகும். சொகுசு அம்சங்களிலும் இந்த கார் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்தியாவில் செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கார் மாடலாக அது காட்சியளிக்கின்றது. குறிப்பாக, திரை நட்சத்திரங்களின் பிரியமான கார் மாடலாக டிஃபெண்டர் 110 காட்சியளிக்கின்றது.

இந்த டிஃபெண்டர் காரை இந்தியாவில் மம்மூட்டி, ஆசிஃப் அலி, அர்ஜூன் கபூர், சன்னி தியோல், ஆயுஷ் ஷர்மா, ரவி தேஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களைப் போலவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் போன்ற அரசியல்வாதிகள் மற்றும் முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் டிஃபெண்டர் கார் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டு பெட்ரோல் மற்றும் ஓர் டீசல் எஞ்ஜின் தேர்வே அதில் வழங்கப்படுகின்றது. டிஃபெண்டர் 90, டிஃபெண்டர் 110 மற்றும் டிஃபெண்டர் 130 ஆகியவை அவை ஆகும். இதில் டிஃபெண்டர் 130-யே லேட்டஸ்ட் மாடல் ஆகும்.

2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டார் மற்றும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் மோட்டார் ஆகிய தேர்வுகளிலேயே டிஃபெண்டர் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த டிஃபெண்டர் முன் மற்றும் பின்புறங்களில் ஓவர்ஹாங்க்குகளைக் கொண்டுள்ளது. இது சிறந்த அணுகுமுறை மற்றும் புறப்படும் கோணங்களை வழங்க உதவும்.

குறிப்பாக, ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக இந்த அம்சம் உள்ளது. 291 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 900 மிமீ ஆழம் வரை தண்ணீரில் பயணிக்கும் திறன் கொண்டதே டிஃபெண்டர் ஆகும். இத்தகைய வசதிகள் கொண்ட காரையே பாபி செம்மனூர் தற்போது தனக்கு சொந்தமானதாக மாற்றி இருக்கின்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பாபி செம்மனூர் இந்த காரை வாங்கியதற்கான காரணங்கள் தெரியவில்லை. ஒருவேளை அவர் அவருடைய ஹோட்டலுக்கு வரும் கெஸ்ட்டுகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் வாங்கி இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இவர் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காரையே இப்படிதான் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 27, 2024, 19:34 [IST]
English summary
Bobby chemmanur acquires land rover defender in used car market
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+