செம்மனூர் ஜூவல்லரி உரிமையாளரின் ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு டிரைவர் தேவை... சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கேரளாவில் வெளியான வித்தியாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பிரபல தொழிலதிபரும் செம்மனூர் ஜுவல்லரி குழுமத்தின் உரிமையாளருமான டாக்டர் பாபி செம்மனூர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டுவதற்கு அனுபவம் வாய்ந்த டிரைவர் ஒருவரை தேடி வருவதாகவும், அதற்காக மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாகவும் வெளியிட்ட அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
பாபி செம்மனூர் தனது வித்தியாசமான செயல்பாடுகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பாக இருப்பதன் மூலம் அடிக்கடி கவனம் பெறுபவர். அந்த வகையில், தற்போது அவரது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான டிரைவர் பணியும் பேசுபொருளாகியுள்ளது.

பாபி செம்மனூர் வைத்துள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் தங்க வண்ணத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஜொலிப்புடன் காட்சியளிக்கிறது. காரின் முன்பக்கத்தில் இருக்கும் பெரிய கிரில், அதில் இடம்பெற்றுள்ள ரோல்ஸ் ராய்ஸ் சின்னம் மற்றும் தனித்துவமான தோற்றம் ஆகியவை காரை சாலையில் எளிதாக அடையாளம் காணும் வகையில் உள்ளன.
அதற்கு முன்னால் நின்று அவர் இந்த காரை ஓட்டுவதற்கு டிரைவர் தேவை என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வந்து சில வாரங்கள் ஆனாலும், அவரது காரை ஓட்டுவதற்கு பலரும் இன்னமும் விருப்பம் தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர்.
இந்த காரை ஓட்டுவதற்கான டிரைவர் பணிக்கு சாதாரண ஓட்டுநர் அனுபவம் மட்டும் போதாது என்பதுதான் முக்கியமான விஷயம். ரோல்ஸ் ராய்ஸ் போன்ற மிக விலை உயர்ந்த சொகுசு காரை கையாள்வதற்கு, அனுபவம் வாய்ந்த மற்றும் பொறுப்புடன் செயல்படக்கூடிய டிரைவர் தேவைப்படுவார்.
இதற்காக மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என்ற பாபி செம்மனூர் கொடுத்த தகவல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பொதுவாக இந்தியாவில் டிரைவர் பணிக்கான சம்பளத்தை விட இது மிகவும் அதிகமான தொகையாக இருப்பதால் பலரும் தங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்று தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்டும் வாய்ப்பு, அதுவும் மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்துடன் கிடைப்பது நிச்சயம் பலருக்கும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். ஆனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள காரை கையாள்வதால், ஓட்டுநருக்கு அதிக பொறுப்பும் தேவைப்படும். இதனால் அனுபவம், ஓட்டுநர் திறன் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் சரியான நபரை தேர்வு செய்வது முக்கியமானதாக இருக்கும்.
எது எப்படியிருந்தாலும், "ரோல்ஸ் ராய்ஸ் டிரைவருக்கு ரூ.1 லட்சம் சம்பளம்" என்ற அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வாகன ஆர்வலர்கள் மற்றும் வேலை தேடுபவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் ஓட்டுனர்களுக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாக வெளியானத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில், தற்போது செம்மனூர் ஜூவல்லரி உரிமையாளரின் அறிவிப்பும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு சில வாரங்கள் ஆன நிலையிலும், தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
The article has been updated with an Instagram video since the Facebook video is not loading.


Click it and Unblock the Notifications
