கங்குவா பட தோல்வி கொஞ்சம் கூட இவரை பாதிக்கல! விஜய் பட சான்ஸ் கிடைச்சதும் புது கார் வாங்க வந்துட்டாரு!

ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் நமது இந்தியா மட்டும் என்ன விதிவிலக்காகவா இருக்க போகிறது...? இந்தியாவிலும் ரேஞ்ச் ரோவர் கார்களை கணிசமான எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் வாங்குகின்றனர்.

குறிப்பாக, பாலிவுட் சினிமா (Bollywood Cinema) துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்குவதை நமது செய்தித்தளத்தில் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது ஒரு பிரபலமான பாலிவுட் நடிகர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) காரை வாங்கி உள்ளார். இந்த நடிகர் பெயர், பாபி தியோல் (Bobby Deol) ஆகும்.

jana nayagan movie actor

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியால் (Sunny Deol)-ஐ பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். 1980, 90களில் மிக பெரும் ரசிகர் பட்டாளத்துடன் முன்னணி பாலிவுட் நடிகராக வலம் வந்தவர். இப்போதும் நடிகர் சன்னி தியோல் திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், இவரை காட்டிலும் சமீப ஆண்டுகளாக பாபி தியோலுக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

நடிகர் பாபி தியோல் வேறு யாருமில்லை, நடிகர் சன்னி தியோலின் தம்பி ஆவார். சன்னி தியோலை காட்டிலும் 11 வயது இளையவரான பாபி தியோலுக்கு ஆரம்பத்தில் சினிமா வாழ்க்கை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக பல மொழிகளில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, 'அனிமல்' (Animal) திரைப்பட வெற்றிக்கு பிறகு நாடு முழுவதும் பாபி தியோல் பிரபலமாகினார்.

jana nayagan movie actor

அதன் மூலமாக, 'கங்குவா' (Kanguva) திரைப்படத்தில் நடிகர் சூர்யா (Suriya) உடன் நடித்த நடிகர் பாபி தியோல், அடுத்ததாக நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' (Jana Nayagan) திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில்தான், புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை இவர் வாங்கியுள்ளார். இதனை சம்பந்தப்பட்ட கார் ஷோரூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களுடன் தெரிவித்துள்ளது.

நடிகர் பாபி தியோல் வாங்கி இருப்பது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் எஸ்வி எடிசன் 2 (SV Edition 2) என்கிற விலையுயர்ந்த வேரியண்ட்டை ஆகும். ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் மற்ற வேரியண்ட்களின் விலைகள் ரூ.1.45 கோடியில் இருந்து ஆரம்பித்தாலும், எஸ்வி எடிசன் 2 வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது சுமார் ரூ.2.95 கோடியாக உள்ளது.

புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி எடிசன் 2 காரை அடர் நீல நிறத்தில் நடிகர் பாபி தியோல் வாங்கியுள்ளார். இதனை 'ப்ளூ நெபுலா' (Blue Nebula) என லேண்ட் ரோவர் (Land Rover) அழைக்கிறது. பிரபலமான ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் (Defender) கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக லேண்ட் ரோவர் விளங்குகிறது.

நெபுலா ப்ளூ உள்பட பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்களில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் விற்பனை செய்யப்படுகிறது. நடிகர் பாபி தியோல் வாங்கியிருக்கும் இந்த காரின் எஸ்வி எடிசன் 2-இல் 4.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் விலை குறைவான வேரியண்ட்களில் அளவில் சிறியதான 3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

மற்றப்படி, டீசல் என்ஜின் உடன் இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் விற்பனை செய்யப்படுவது இல்லை. நடிகர் பாபி தியோல் வாங்கியிருக்கும் எஸ்வி எடிசன் 2 ஆனது ஓர் ஆல்-வீல்-டிரைவ் (All-wheel-drive) கார் ஆகும். அதாவது, இதில் என்ஜின் ஆற்றல் ஆனது காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் அனுப்படுகிறது. அத்துடன், இந்த காரில் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய சிறப்புமிக்க ரேஞ்ச் ரோவர் காரின் விலைமிக்க வேரியண்ட்டை நடிகர் பாபி தியோல் வாங்கியுள்ளார். இதன் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ரூ.2.95 கோடி ஆனது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, இந்த காரை தனது விருப்பத்திற்கு ஏற்ப பல மாற்றங்களை செய்து நடிகர் பாபி தியோல் பெற்றிருப்பதாக சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் தெரிவித்திருப்பதால், இந்த காருக்காக இன்னும் பல இலட்சங்களை பாபி தியோல் செலவு செய்திருப்பார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 16, 2025, 22:41 [IST]
English summary
Bobby deol buys range rover sport sv edition2 luxury car check price features here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+