அனிமல் படத்துல நடிச்ச இவர் அந்த தமிழ் நடிகையின் மகனா! இவ்ளோ நாளா தெரியாம போச்சே! மூனரை கோடி ரூபா கார்ல வர்றாரு
சினிமாவில் ஒரு சில அறிமுக காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும். அப்படி ஒரு காட்சியை அனிமல் (Animal) திரைப்படம் கொண்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வெளியான அனிமல் திரைப்படத்தில் பாபி தியோலின் (Bobby Deol) அறிமுக காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இது ஹிந்தி திரைப்படமாக இருந்தாலும், பல மொழி ரசிகர்களும் அந்த அறிமுக காட்சியை வரவேற்றனர். ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படத்தில், பாபி தியோலும் நடித்திருந்தார். மது கோப்பையை தலையில் வைத்து நடனமாடி கொண்டே அவர் அறிமுகமாகும் வகையில், அத்திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

பாபி தியோல் பாலிவுட் நடிகர் ஆவார். ஆனால் அனிமல் திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாட்டிலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது. இதன் காரணமாக தமிழ் நாட்டை சேர்ந்த முன்னணி இயக்குனர்கள் பலரும் பாபி தியோலின் கால்ஷீட்டை பெறுவதற்கு தற்போது காத்து கிடக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழக (TVK - Tamilaga Vettri Kazhagam) தலைவரும், நடிகருமான விஜய்யின் (Vijay) கடைசி படம் ஜனநாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் பாபி தியோல் நடித்து வருகிறார். முன்னதாக கங்குவா (Kanguva) திரைப்படத்திலும் கூட பாபி தியோல் நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் பாபி தியோலின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி எடிசன் 2 (Range Rover Sport SV Edition Two) காரில், பாபி தியோல் வந்து இறங்குவதை இந்த வைரல் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.
இது மிகவும் விலை உயர்ந்த ஒரு கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 2.95 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஆன்-ரோடு விலையோ (On-road Price)சுமார் 3.50 கோடி ரூபாய் வரும்.
இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 4.4 லிட்டர் ட்வின் டர்போ மைல்டு ஹைப்ரிட் வி8 இன்ஜின் ஆகும். 626 ஹெச்பி பவர் மற்றும் 800 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.8 வினாடிகளிலேயே எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 290 கிலோ மீட்டர்களாக உள்ளது.
பாலிவுட் திரையுலகின் மற்ற பெரும்பாலான நடிகர், நடிகைகளை போலவே, பாபி தியோலின் கார் கலெக்ஸனும் (Car Collection) மிகப்பெரியது. சொகுசு மற்றும் செயல்திறன் மிக்க மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை பாபி தியோல் விரும்ப கூடியவர். எனவே அவரது வீட்டில் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன.
இதில், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport), ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue), லேண்ட் ரோவர் ஃப்ரீலேண்டர் 2 (Land Rover Freelander 2) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes-Benz S-Class) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
தற்போது வைரலாக பரவி வரும் வைரல் வீடியோவில் நாம் காணும் பாபி தியோல், மூத்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகன் ஆவார். தர்மேந்திராவின் முதல் மனைவியான பிரகாஷ் கவுருக்கு (Prakash Kaur) பிறந்தவர்தான் பாபி தியோல். எனினும் தர்மேந்திரா அதற்கு பிறகு இரண்டாவதாக ஹேம மாலினியை (Hema Malini) திருமணம் செய்து கொண்டார்.
அதாவது, ஹேம மாலினி - பாபி தியோல் இடையேயானது தாய்-மகன் உறவு ஆகும். இது தமிழ் ரசிகர்கள் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். ஒரு காலத்தில் இந்திய சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த ஹேம மாலினி தமிழ் நாட்டில் பிறந்தவர். இவருக்கு நடிகை என்பதை கடந்து அரசியல்வாதி உள்பட பல முகங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாபி தியோலை அடிக்கடி ரேஞ்ச் ரோவர் கார்களில் பார்க்க முடியும். இந்த வரிசையில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்புதான், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி எடிசன் 2 காரை அவர் வாங்கினார். இதன் மூலம் பாபி தியோல் ரேஞ்ச் ரோவர் ரசிகர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


Click it and Unblock the Notifications