தல கால் புரியாம ஆட்டம் போட்டாரு! இறக்குமதி செய்யப்பட்ட ராட்சத வண்டியை நொறுக்கிய மக்கள்! பெரிய மனிதர் அதிர்ச்சி

கேரளா (Kerala) மாநிலத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவர் பாபி செம்மனூர் (Boby Chemmanur). பிரபலமான தொழில் அதிபர்களில் (Businessman) ஒருவரான இவர், வாகனங்களை மிகவும் நேசிக்க கூடியவர். இவர் சமீபத்தில் புதிய வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அது ஃபோர்டு எஃப்650 (Ford F650) ஆகும்.

இது வழக்கமான கார் கிடையாது. பிக் அப் டிரக் (Pick Up Truck) ரகத்தை சேர்ந்தது. பாபி செம்மனூருக்கு சொந்தமான ஃபோர்டு எஃப்650 பிக் அப் டிரக்கின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த வரிசையில் மற்றொரு வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Boby Chemmanur Dances On Ford F650

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பொதுமக்கள் சிலர் ஆத்திரத்தில், பாபி செம்மனூரின் ஃபோர்டு எஃப்650 பிக் அப் டிரக்கை தாக்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது ஏன் நடந்தது? என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேரள மாநிலம் வயநாடு (Wayanad) பகுதியில், பாபி செம்மனூர் சமீபத்தில் 1,000 ஏக்கர் தேயிலை தோட்டத்தை (Tea Plantation) வாங்கினார். இந்த தேயிலை தோட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் வந்து விட்டதாக கூறப்படுகிறது.

Boby Chemmanur’s Ford F650 Attacked By Public

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மலை பகுதிகளில் சாதாரணமாகவே சாலைகள் மிகவும் குறுகலாகதான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் உருவத்தில் மிகவும் பெரிய ஃபோர்டு எஃப்650 போன்ற பிக் அப் டிரக்குகள் வந்தால் என்ன ஆகும்? என்பதை யாருக்கும் சொல்ல வேண்டியதே இல்லை.

ஃபோர்டு எஃப்650 பிக் அப் டிரக்கின் வருகை, அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலை மேலும் கடுமையாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பொதுமக்கள் ஆத்திரமடைந்து, பாபி செம்மனூரின் ஃபோர்டு எஃப்650 பிக் அப் டிரக்கை கடுமையாக தாக்கியதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒரு சிலர் கைகளால் ஃபோர்டு எஃப்650 பிக் அப் டிரக்கை கடுமையாக தாக்குவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் டிரைவரை தாக்குவதற்கும் அவர்கள் முயற்சி செய்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சரி, பாபி செம்மனூர் வாங்கியுள்ள ஃபோர்டு எஃப்650 பிக் அப் டிரக் பற்றிய தகவல்களுக்கு வருவோம். இது துபாயில் (Dubai) இருந்து, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது ஆகும். பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களுடனும், ஃபோர்டு எஃப்650 பிக் அப் டிரக் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது, 7.3 லிட்டர் வி8 இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 350 பிஎஸ் பவர் மற்றும் 635 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் இதன் டீசல் வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது, 6.7 லிட்டர் வி8 இன்ஜின் ஆகும்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 330 பிஎஸ் பவர் மற்றும் 1,015 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த பிக் அக் டிரக்கின் மேலே பாபி செம்மனூர் நடனமாடும் வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அந்த பிக் அப் டிரக்கை பொதுமக்கள் தாக்கும் வீடியோ வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரச்னைகளை சுமூகமான முறையில் பேசி தீர்க்கலாம். அதை விடுத்து விட்டு, வாகனத்தை தாக்குவதும், அதன் டிரைவரை தாக்க முயற்சி செய்வதும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது டிரைவருக்கு மேலும் நெருக்கடிகளை உண்டாக்கும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக அவர் இன்னும் அதிக தவறுகளை செய்ய நேரிடலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 5, 2024, 18:51 [IST]
English summary
Boby chemmanur s ford f650 attacked by public viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+