உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

Written By:

வர்த்தக விஷயமாக அடிக்கடி வெளிநாடு செல்லும் பெரும் பணக்காரர்கள் சொந்தமாக விமானத்தை வாங்கி பயன்படுத்துவது வழக்கம்தான். பெரும்பாலானோரின் சாய்ஸ் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி550 அல்லது பம்பார்டியர் குளோபர் சீரிஸ் விமான மாடல்களாகவே இருக்கும்.

ஆனால், சிலர் அதையும் தாண்டிய வசதிகளுடன் பெரிய வகை சொகுசு விமானங்களை சொந்தமாக கஸ்டமைஸ் செய்து வாங்குகின்றனர். போயிங் பிசினஸ் ஜெட் மற்றும் ஏர்பஸ் கார்ப்பரேட் ஜெட் போன்ற விமானங்கள் அவர்களது சாய்ஸாக இருக்கும்.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

போயிங் நிறுவனம் போயிங் 737 விமானத்தையும், ஏர்பஸ் நிறுவனம் ஏ320 விமானத்தையும் தனிநபர் விமான மாடல்களாக கஸ்டமைஸ் செய்து விற்பனை செய்கின்றன. ஆனால், இதனையும் தாண்டிய வசதிகள் கொண்ட போயிங் விமானம் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த க்ரீன்பாயின்ட் நிறுவனம் கஸ்டமைஸ் செய்து டெலிவிரி கொடுத்துள்ளது.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

வழக்கம்போல் அந்த உரிமையாளரின் பெயரை வெளியிடவில்லை. ஆனால், இந்த விமானத்தின் வசதிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. எக்கானமி கிளாசில் பயணித்து நொந்து போனவர்களை இந்த விமானத்தின் வசதிகள் ஏங்க வைக்கும் என்றால் மிகையில்லை. வாருங்கள், அந்த போயிங் பிரைவேட் ஜெட்டின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகளை படங்களுடன் காணலாம்.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

பயணிகள் விமான ரகத்தில் உலகின் இரண்டாவது பெரிய விமானமாக கருதப்படும் போயிங் 747-8 விமானத்தையை அந்த உரிமையாளர் கஸ்டமைஸ் செய்து வாங்கியுள்ளார்.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமான மாடலாக பயன்படுத்துவதற்காக சகல வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட இருக்கும் அதே விமான மாடல்தான் இது.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

கஸ்டமைஸ் செய்வதற்கு முன்னரே இதன் விலை 367 மில்லியன் டாலர்கள். இந்த விமானத்தில் செய்யப்பட்டிருக்கும் உயர்தர கஸ்டமைஸ் பணிகளுக்காக இதே அளவுக்கு இணையான தொகையை போயிங் நிறுவனம் நிர்ணயித்திருக்கும்.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

விமானத்தின் உட்புறத்தை பார்த்தால் மெர்சலாக வைக்கிறது. ஒவ்வொரு பகுதியும் உயர்தர பாகங்களால் இழைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, உலகின் சிறந்த நட்சத்திர ஓட்டல்களின் அறைகளுக்கு இணையான அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

1,100 சதுர அடி கொண்ட டபுள் பெட்ரூம் கொண்ட வீடு பல குடும்பங்களுக்கு போதுமானது. ஆனால், இந்த விமானத்தில் 4,786 சதுர அடி பரப்பு இடவசதி இருப்பதால் இது பங்களா வீட்டிற்கு இணையான இடவசதி கொண்டதாக இருக்கிறது. அதாவது, பறக்கும் பங்களா வீடாக கூறலாம்.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

விமானத்தில் பயணிக்கும் விருந்தினர்களுக்கான பொழுதுபோக்கு அறை இது. டிவி, சொகுசு நாற்காலிகள், சோபாவுடன் கண்ணுக்கு இதமான விளக்குகளுடன் ஜொலிக்கிறது.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

மாஸ்டர் பெட்ரூம் எனப்படும் உரிமையாளருக்கான விசேஷ படுக்கையறை. மிகப்பெரிய கண்ணாடி ஜன்னல்கள், திரை சீலைகளுடன் காட்சி தருகிறது.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

மாஸ்டர் பெட்ரூமில் ஓய்வாக அமர்ந்து பணிகளை பார்ப்பதற்காக நாற்காலிகளும், சிறிய டேபிள்களும் போடப்பட்டிருக்கின்றன.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

படுக்கையறையில் பெரிய திரை, உடைகள் வைப்பதற்கான வசதி, சோபா போன்றவையும் உண்டு.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

இது மற்றொரு படுக்கையறை. உலகின் சிறந்த நட்சத்திர விடுதிகளுக்கு இணையான அறையாக இது காட்சியளிக்கிறது.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

அலுவலகப் பணிகளை விமானத்தில் பறந்தபடி பார்ப்பதற்கான அனைத்து தொடர்பு வசதிகள், தொலைக்காட்சி திரையுடன் கூடிய அலுவலக அறை.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

ஒரே நேரத்தில் 14 பேர் வரை அமர்ந்து உணவருந்தும் வசதி கொண்ட சாப்பாட்டுக் கூடம்.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

மற்றொரு புறத்திலிருந்து பொழுதுபோக்கு அறையை இங்கு காணலாம். புத்தக அலமாரி, பொருட்கள் வைப்பதற்கான இடவசதியுடன் உயர்தரமான உணர்வை தரும் அறை.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

ஆலோசனை மற்றும் விருந்தினர்கள் விவாதிப்பதற்கான சோபாக்களுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கும் மற்றொரு அறை.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

விருந்தினர்கள் ஓய்வாக அமர்ந்திருப்பதற்கான அறை.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

இந்த பிரம்மாண்டமான போயிங் 747-8 விமானத்தில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் 4 ஜிஇஎன்எக்ஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

உலகின் மிகச் சிறந்த சொகுசு விமானத்தை வாங்கிய அந்த அதிர்ஷ்டசாலி யார்?

ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும் பட்சத்தில் 14,816 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்டது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Boeing 747 VIP private jet takes luxury to a whole new level.
Please Wait while comments are loading...

Latest Photos