நூற்றாண்டு கொண்டாடும் போயிங் விமான நிறுவனம் பற்றிய சுவாரஸ்யங்கள்!

Written By:

20ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற விமானங்களை தயாரித்து வழங்கிய போயிங் நிறுவனம் நூற்றாண்டை தொட்டிருக்கிறது. உலகின் எந்தவொரு நாட்டிலும் போயிங் விமானங்களை சர்வசாதாரணமாக பார்க்கும் அளவுக்கு, விமான போக்குவரத்தில் இன்றியமையாத நிறுவனமாக வியாபித்து நிற்கிறது.

பயணிகள், சரக்கு விமான தயாரிப்பு, ராணுவ விமான தயாரிப்பிலும் பெயர் பெற்றதோடு, ராக்கெட் தயாரிப்பு மற்றும் செயற்கைகோள் தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. பல்வேறு சவால்களை கடந்து நீண்ட பாரம்பரியத்துடன் இன்று உலகின் மாபெரும் விமான தயாரிப்பு குழுமமாக விளங்கும் போயிங் நிறுவனம் கடந்து வந்த பாதை குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 ஸ்தாபகர்

ஸ்தாபகர்

1910ல் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்த கப்பல்கட்டும் தளத்தை வில்லியம் இ போயிங் வாங்கினார். அந்த கப்பல்கட்டும் தளம்தான் பின்னர் விமான தயாரிப்பு மையமாக மாறியது. யேல் பல்கலைகழகத்தில் கல்வி பயின்று முடித்த வில்லியம் போயிங் மர வியாபாரத் துறையில் பணியாற்றினார். அதன் பின்னர், அமெரிக்க கடற்படை எஞ்சினியர் ஜார்ஜ் கான்ராட் வெஸ்டர்வெல்ட் உதவியுடன் இரண்டு விமானங்களை மரத்தாலான பாகங்கள் மற்றும் உலோகங்களை கொண்டு வடிவமைத்து, அதில் பறந்தார். B&W என்ற குறிப்பிடப்பட்ட இரண்டு விமானங்களில் ஒன்றில் வெர்றிகரமாக பறந்ததையடுத்து, அதில் கிடைத்த நம்பிக்கையுடன், அடுத்த சில மாதங்களில் போயிங் ஏர்பிளேன் கம்பெனியை முறைப்படி நிறுவினார்.

முதல் விமானம்

முதல் விமானம்

முதலாம் உலகப்போர் துவங்கியதையடுத்து, அமெரிக்காவிற்கு அதிக அளவில் விமானங்கள் தேவைப்படுவதை உணர்ந்து கொண்டார். அதன்படியே, முதலில் தரப்பட்ட 2 மாடல் சி விமானங்கள் திருப்திகரமாக இருந்ததால், 50 விமானங்களை வழங்குமாறு போயிங் நிறுவனத்துக்கு ஆர்டர் கிடைத்தது. இதையடுத்து, போயிங் பி-1 விமானத்தை தயாரித்தனர். இந்த விமானத்தில் ஒரு பைலட் தவிர, மேலும் 2 பேர் பயணிக்கும் வசதியும், தபால்களை எடுத்துச் செல்லும் வசதி கொண்டதாக இருந்தது.

சர்வதேச பயணம்

சர்வதேச பயணம்

1919ம் ஆண்டு மார்ச் 1ந் தேதி சியாட்டில் நகரிலிருந்து வான்கூவர் நகருக்கு முதல் சர்வதேச அஞ்சல் விமான சேவை துவங்கப்பட்டது. இந்த விமானத்தை பில் போயிங் மற்றும் எடி ஹப்பார்டு ஆகியோர் இயக்கினர். போயிங் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு நிலை விமானமான மாடல் சி மாடல்தான் இந்த வழித்தடத்தில் பயன்படுத்தப்பட்டது.

பரிணாமம்

பரிணாமம்

மரத்தாலான இறக்கைகளுடன் பறந்த போயிங் விமானங்கள் தற்போது கார்பன் ஃபைபர் இறக்கைகளுடன் தயாரிக்கப்படுகிறது. போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் இறக்கைகள் கார்பன் ஃபைபர்தான் பயன்படுத்தப்படுகின்றன.

பறக்கும் படகு

பறக்கும் படகு

1937ல் போயிங் 204 என்ற பெயரில் அழைக்கப்பட்ட முதல் பறக்கும் படகு அறிமுகம் செய்யப்பட்டது. கடலில் இருந்து மேல் எழும்பி பறக்கவும், தரை இறங்கவும் கூடி இந்த பறக்கும் படகில் 400 குதிரைசக்தி திறன் கொண்ட பிராட் அண்ட் ஒயிட்னி வாஸ்ப் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. அதிகபட்சமாக மணிக்கு 213 கிமீ வேகத்தில் பறக்கும் படகு என்று குறிப்பிடப்படும் இந்த விமானம் பறக்கும்.

 மாடர்ன் விமானம்

மாடர்ன் விமானம்

நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் விமானமாக போயிங் மாடல் 247டி கருதப்படுகிறது. முழுவதும் உலோக பாகங்களை கொண்ட இந்த விமானத்தில் இரண்டு எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. நியூயார்க் நகரத்தின் மேலே பறக்கும்போது எடுக்கப்பட்ட படம்.

படிப்படியாக...

படிப்படியாக...

1939ம் ஆண்டு போயிங் நிறுவனம் அறிமுகம் செய்த 33 பேர் பயணிக்கக்கூடிய புதிய விமானத்தில் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதிக உயரத்தில் பறக்கும் சிறப்பம்சங்களுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் அப்போதைய போயிங் நிறுவனத்தின் தலைமை எஞ்சினியராக இருந்த வெல்வுட் இ பிஆல்.

ராணுவ விமானம்

ராணுவ விமானம்

போயிங் நிறுவனத்தின் ப்ளையிங் போர்ட்ரெஸ் விமானம் இரண்டாம் உலகப்போரில் முக்கிய பங்கு வகித்தது. ஐரோப்பாவில் ஜெர்மனியை பணிய வைப்பதற்கு இங்கிலாந்து ராணுவம் மேற்கொண்ட முயற்சியில் இந்த விமானம் முக்கிய பங்கு வகித்தது. அதுமட்டுமில்லை, ஜப்பானில் அணுகுண்டு வீசியதற்கும் இந்த விமானமே பயன்படுத்தப்பட்டது. இதுகுறித்து சிறப்புச் செய்தியை ஏற்கனவே டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படித்திருப்பீர்கள்.

 ஜெட் விமானம்

ஜெட் விமானம்

1954ம் ஆண்டு பயணிகள் விமானப் போக்குவரத்து துறையில் புதிய அத்தியாயம் துவங்குவதற்கு காரணமாக இருந்த போயிங் நிறுவனத்தின் முதல் ஜெட் விமானம் ஆலையிலிருந்து வெளிவருகிறது. போயிங் 707 என்ற இந்த விமானம்தான் பயணிகள் ஜெட் விமானங்களுக்கு அடித்தளமிட்டது.

விளம்பரம்

விளம்பரம்

போயிங் 707 விமானத்திற்கான விளம்பர பிரச்சாரங்களின்போது, விரைவான, சொகுசான பயணத்தை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டதுடன், இந்த ஜெட் விமானம் மிகவும் பாதுகாப்பானதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த காலத்தில் விமானப் பயணிகளை இந்த விளம்பர பிரச்சாரங்கள் வெகுவாக கவர்ந்தன.

அதிபர் விமானம்

அதிபர் விமானம்

1962ல் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி 707 ஜெட் விமானத்தை அதிகாரப்பூர்வ விமானமாக பயன்படுத்த துவங்கினார். மேலும், அதிகாரப்பூர்வ விமானத்திற்கு ஏர்ஃபோர்ஸ் ஒன் என்றும் விசேஷ பெயரால் குறிப்பிடப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அமெரிக்க அதிபர்களின் ஆஸ்தான விமானங்களாக போயிங் 7 வரிசை விமானங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா என்றில்லை, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாட்டு அரசு பொறுப்பில் இருக்கும் தலைவர்களின் ஆஸ்தான விமானமாக விளங்கி வருகின்றன.

 குவிந்த ஆர்டர்

குவிந்த ஆர்டர்

1967ம் ஆண்டு விற்பனைக்கு விடப்பட்ட போயிங் 737 விமானத்திற்கு உலக அளவில் 17 விமான நிறுவனங்கள் ஆர்டர் செய்திருந்தன. அந்த விமான நிறுவனங்களை சேர்ந்த விமான பணியாளர்கள் புதிய விமானத்தை பார்வையிடுவதற்காக சியாட்டில் நகரில் இருந்த போயிங் ஆலைக்கு வந்திருந்தபோது எடுத்தபடம். சாம்பெய்னை விமானத்தில் தெளித்து மகிழச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஜம்போ ஜெட் விமானம்

ஜம்போ ஜெட் விமானம்

1968ல் போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பெரிய சர்வதேச விமான நிறுவனமாக விளங்கிய பான் ஆம் நிறுவனத்தின் சிஇஓ ஜுவான் டிரிப் மற்றும் போயிங் தலைவர் பில் ஆலன் ஆகியோர் பங்கேற்று மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அன்றிலிருந்து இன்று வரை மேம்படுத்தப்பட்ட தொடர்ந்து உற்பத்தியில் இருக்கிறது. உலகின் விமானப் போக்குவரத்தில் இந்த 747 விமானங்கள் அதிக பங்களிப்பை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விசேஷ போயிங் 747 விமானங்கள்

விசேஷ போயிங் 747 விமானங்கள்

விண்வெளி ஓடங்களை தரையிறங்கும் இடத்திலிருந்து நாசா ஆய்வு மையத்திற்கு கொண்டு வருவதற்காக விசேஷ மாற்றங்கள் செய்யப்பட்ட இரண்டு போயிங் 747 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அதில், ஒன்று 747-100 மற்றொன்று குறைந்த தூர போக்குவரத்திற்கான போயிங் 747-100SR என்பது குறிப்பிடத்தக்கது.

போயிங் மியூசியம்

போயிங் மியூசியம்

சியாட்டில் நகரில் போயிங் நிறுவனத்தின் முதல் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு 1977ம் ஆண்டு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. மியூசியமாக மாற்றுவது குறித்த போயிங் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி கார்ல் கஸடஃப்சன் மற்றும் திட்ட மேலாளர் ஹோவர்டு லூவரிங் ஆகியோர் ஆலோசனை நடத்தும் காட்சி.

 போயிங் ஆலை

போயிங் ஆலை

வாஷிங்டன் நகரில் உள்ள 747 விமான தயாரிப்பு தொழிற்சாலைதான் உலகிலேயே அதிக விமானங்களை தயாரிக்கும் ஆலையாக கருதப்படுகிறது.

புதிய அத்தியாயம்

புதிய அத்தியாயம்

பல்வேறு சிக்கல்கள், தடைகள், சவால்களை கடந்து விமான தயாரிப்பில் நூற்றாண்டை கண்டிருக்கும் போயிங் நிறுவனத்தின் நவீன ரக விமானம்தான் போயிங் 787 ட்ரீம்லைனர்.

போட்டி

போட்டி

உலக அளவில் சிவில் போக்குவரத்து விமான சேவையில் போயிங் நிறுவனத்துக்கும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்துக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுகிறது. பல நிறுவனங்கள் இருந்தாலும், இந்த இரு நிறுவனங்களின் சந்தைப் பங்களிப்பை உடைக்க முடியாத நிலையே உள்ளது.

ஹிரோஷிமா, நாகாசாகியை அணுகுண்டால் நாசம் செய்த நாசகாரி விமானம் இதுதான்!

ஹிரோஷிமா, நாகாசாகியை அணுகுண்டால் நாசம் செய்த நாசகாரி போயிங் விமானம் இதுதான்!

  

Sources: Boeing, Wikipedia, Mashable

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Boeing celebrates centennial Anniversay.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more