Just In
- 9 min ago
இது வானத்தில் பறக்காது... கட்டிட கலைஞர் உருவாக்கிய வித்தியாசமான வாகனம்... சூப்பர் திறமை!!
- 15 min ago
புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டீசர் வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!
- 1 hr ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 1 hr ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
Don't Miss!
- News
முதல் ரவுண்டில் கறார்.. திமுக மீட்டிங் முடிந்த கையோடு கேஎஸ் அழகிரி சொன்ன அந்த விஷயம்.. என்ன நடந்தது?
- Finance
கவனிக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்.. ஈஸி டிரிப் பிளானர்ஸ் ஐபிஓ.. நல்ல வாய்ப்பு..!
- Movies
என்னை தேவதையாக்கிய தாய்மை.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோஷூட் நடத்திய 'எருமை சாணி' ஹரிஜா!
- Sports
எரியுற தீயில் எண்ணெய ஊத்துறதா? ..... டக் அவுட்டான கோலி... மறைமுகமாக கடுப்பேத்தும் க்ரீம் ஸ்வான்
- Lifestyle
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜோ பிடன் அரசு அதிரடி! இந்தியாவிற்கு இந்த விமானங்களை வழங்கலாம்... இனி எந்த நாடும் நம்மகிட்ட வாலாட்ட தயங்கணும்!
அமெரிக்காவின் புதிய அரசு, போயிங் எஃப்-15இஎக்ஸ் ஃபைட்டர் ஜெட் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனைக்கு செய்ய அனுமதி சான்று வழங்கியுள்ளது.

புதிதாக ஆட்சியை அமைத்திருக்கும் ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசு எதிர்காலத்தில் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவில் இருக்கும் என்பது இப்போதே மிக தெளிவாக தெரிய வருகின்றது. அண்மையில், இந்தியா பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்க பாதுகாப்புதுறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், வாஷிங்டனில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பென்டகன் பத்திரிக்கை செயலாளர் ஜான் கிர்பி, அமெரிக்கா, இந்தியா உடன் வலுவான உறவுடன் இருக்கப்போவதை உறுதி செய்தார். அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தின் இந்த கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் மற்றுமொரு தரமான நிகழ்வு இன்று அந்நாட்டில் அரங்கேறியிருக்கின்றது.

அதாவது, ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசு உலக புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு அதன் எஃப்-15இஎக்ஸ் பைட்டர் ஜெட் விமானத்தை இந்தியாவிற்கு விற்பனைச் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. போயிங் நிறுவனத்தின் சூப்பர் திறன் கொண்ட போர் விமானங்களில் எஃப்-15இஎக்ஸ் ரக விமானமும் ஒன்று.

இந்த விமானம் ஸ்வீடன் நாட்டின் கிரிபன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் ஆகிய போர் விமானங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் அதீத திறன்களைப் பெற்றிருக்கின்றது. இந்த விமானத்தை நமது நாட்டிற்கு விற்பனைச் செய்ய எந்த தடையும் இல்லை என்பதையே தற்போதைய அமெரிக்க அரசு அறிவித்திருக்கின்றது.

இந்த புதிய அறிவிப்பினால் முன்னதாக நிலவி வந்த அனைத்து தடைகளும் உடைக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், அண்மையில் வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களுடன் புதிய போயிங் எஃப்-15இஎக்ஸ் போர் விமானங்களும் விரைவில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

"ஏற்கனவே இந்த விமானத்தைப் பெறுவதற்காக இரு நாடுகளும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக", இந்தியாவின் ஃபைட்டர்ஸ் லீட், போயிங் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையின் இயக்குனர் அங்கூர் கனாக்லேகர் கூறினார்.

"அமெரிக்காவின் புதிய அரசாங்கம் முன்னதாக இருந்த தடையை நீக்கியிருக்கின்றது. ஆகையால், எஃப்-15இஎக்ஸ் போர் விமானங்களை வாங்குவது குறித்து இனி இந்தியாவால் நேரடியாக தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இயலும்" என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து, "தற்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாகவும்" அவர் கூறியுள்ளார். கடந்த 15 வருடங்களாக இந்தியா-அமெரிக்கா இடையிலான ஆயுதம் கொள்முதல் செயல்பாடு மிக உறுதியாக செயல்பட்டு வருகின்றது. இதுவரை 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Image Courtesy: Boeing
இந்த உறவை பலப்படுத்தும் வகையிலேயே புதிய அறிவிப்பை அமெரிக்காவின் புதிய அரசு வெளியிட்டிருக்கின்றது. ஏற்கனவே லாக்ஹீட் மார்டின் அதன் எஃப்-21 போர் விமானத்தை இந்திய விமானப்படைக்காக வழங்கி வருகின்றது. இதற்காக, இதுவரை 18 பில்லியன் டாலர் வரையிலான ஒப்பந்தம் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.