புதிய ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்த போயிங்!

By Saravana

ஆளில்லாமல் இயக்கும் வசதி கொண்ட புதிய நீர்மூழ்கி கப்பலை அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விமான தயாரிப்பு மூலம் உலக புகழ்பெற்ற போயிங் நிறுவனத்தின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை கருவிகள் தயாரிப்புப் பிரிவு இந்த புதிய ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளது.

கடல் ஆராய்ச்சி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தில் இந்த புதிய நீர்மூழ்கி கப்பல் மூலம் புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நீர்மூழ்கி கப்பல் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைடரில் பார்க்கலாம்.

மாடல் விபரம்

மாடல் விபரம்

Echo Voyager என்ற பெயரில் இந்த புதிய தானியங்கி நீர்மூழ்கி கப்பல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்னர் Echo Seeker மற்றும் Echo Ranger என்ற இரு ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்களை போயிங் அறிமுகம் செய்தது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமே தற்போது வந்திருக்கும் எக்கோ வாயேஜர்.

 திறன்

திறன்

எக்கோ வாயேஜர் நீர்மூழ்கி கப்பல் இரண்டு கிலோமீட்டர் ஆழம் வரை நீரில் மூழ்கி செல்லும் திறன் படைத்தது. அத்துடன், மூன்று மாதங்கள் வரை கடலுக்குள் மூழ்கி இருக்கும் திறன் படைத்தது. இதற்காக, பிரத்யேக ஆற்றல் மையங்கள் உள்ளன.

பயன்பாடு

பயன்பாடு

கடல் பரப்பின் மேலே கண்காணிப்பு, கடலுக்குள் ஆய்வு, மூழ்கிய விமானங்கள், கப்பல்களை தேடும் பணி, கடலின் தரைப்பகுதியை ஆய்வு செய்தல், கதிர்வீச்சு ஆய்வு, கடலில் எண்ணெய் படலம் குறித்த ஆய்வு, ராணுவ பயன்பாடு என பல்வேறு பயன்பாட்டுக்கு இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்த முடியும்.

 தானியங்கி நுட்பம்

தானியங்கி நுட்பம்

இந்த நீர்மூழ்கி கப்பலை தானியங்கி முறையில் இயக்க முடியும். மேலும், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தொடர்ந்து ஆய்வுத் தகவல்களை தாமாகவே சேகரித்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கும். அத்துடன், நிகழ்நேர கண்காணிப்பு வசதியையும் பெற முடியும்.

செலவு குறைவு

செலவு குறைவு

அதிக நாட்கள் தண்ணீருக்குள் இருந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், மிக குறைவான செலவீனத்தில் ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு ஏதுவானதாக இருக்கும்.

விமானத்தை கண்டறிந்த கப்பல்

விமானத்தை கண்டறிந்த கப்பல்

கடந்த ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது கடலுக்குள் மூழ்கிய யு.எஸ்.எஸ். இன்டிபென்டென்ஸ் என்ற விமானத்தை எக்கோ ரேஞ்சர் நீர்மூழ்கி கப்பல் கண்டறிந்தது. மேலும், முப்பரிமாண படத்தையும் துல்லியமாக எடுத்து தந்து, தேடுதல் குழுவினருக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

ஓரிரு மாதத்தில் கலிஃபோர்னியா கடல்பகுதியில் வைத்து இந்த நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பலின் தயாரிப்பு செலவீனம் மற்றும் விலை குறித்த தகவலை போயிங் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, April 2, 2016, 14:28 [IST]
English summary
Boeing Reveals New Autonomous Submarine.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+